2025 SLIM-Kantar விருது விழாவில்பிரகாசித்த யூனிலீவர் ஸ்ரீ லங்கா

2025 SLIM-Kantar விருது விழாவில்பிரகாசித்த யூனிலீவர் ஸ்ரீ லங்கா

Off By Mic

நாட்டின் மிகப்பெரிய நுகர்வோர் பயன்பாட்டு பொருட்கள் (FMCG) உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான யூனிலீவர் ஸ்ரீ லங்கா, SLIM-Kantar People’s Awards 2025 இல் மீண்டுமொரு முறை பல்வேறு பிரிவுகளில் கௌரவிக்கப்பட்டது. பொதுமக்களின் வாக்குகளின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள இந்த கௌரவங்கள், யூனிலீவர் வர்த்தகநாமங்கள் மீது இலங்கை நுகர்வோர் வைத்திருக்கும் 87 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டமைக்கப்பட்ட ஒரு பாரம்பரியத்தின் மீதான ஆழ்ந்த நம்பிக்கையையும் ஆதரவையும் பிரதிபலிக்கின்றன.

இவ்வருட விருதுகளில் சன்லைட் வர்த்தகநாமத்திற்கு ‘Laundry Care Brand of the Year’ விருதும், Vim இற்கு ‘Household Cleaner Brand of the Year’ விருதும், Vaseline இற்கு ‘Skincare Brand of the Year’ விருதும், Sunsilk இற்கு ‘Haircare Brand of the Year’ விருதும் Signal இற்கு ‘Oral Care Brand of the Year’ விருதும் உள்ளடங்குகின்றது.

இது தொடர்பில் நிறுவனத்தின் அழகு மற்றும் சுகவாழ்வு மற்றும் தனிநபர் பராமரிப்பு சந்தைப்படுத்தல் பணிப்பாளர் ஷாமர சில்வா தெரிவிக்கையில், “இலங்கை நுகர்வோருடன் நம்பிக்கை, விசுவாசம் மற்றும் வலுவான உணர்ச்சிபூர்வமான தொடர்புகளை உருவாக்குவதற்கும் அவர்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறுவதற்குமாக நாம் எடுத்துள்ள முயற்சிகளை எடுத்துக்காட்டும் இந்த அங்கீகாரம் தொடர்பில் நாம் உண்மையிலேயே பெருமை அடைகிறோம். ‘அனைவரதும் அன்றாட வாழ்க்கையை பிரகாசமாக்குதல்’ எனும் எமது நோக்கத்தால் வழிநடத்தப்பட்டு, மிக உயர்ந்த தரமான தயாரிப்புகளுடன் வளர்ந்து வரும் நுகர்வோர் தேவைகளைப் புரிந்துகொள்வதற்கும் அவற்றை பூர்த்தி செய்வதற்கும் நாம் உறுதிபூண்டுள்ளோம்.” என்றார்.

நிறுவனத்தின் வீட்டுப் பராமரிப்பு மற்றும் போசணைப் பிரிவின் சந்தைப்படுத்தல் பணிப்பாளர், இமேஷிகா காரியவசம் தெரிவிக்கையில், “இது ஒரு நம்பமுடியாத அர்த்தமுள்ள சாதனையாகும். காரணம், இது மக்களின் குரலைப் பிரதிபலிக்கிறது. நாம் மேற்கொள்ளும் அனைத்து விடயங்களிலும் மையமாக எமது நுகர்வோர் எப்போதும் உள்ளனர். எமது வர்த்தகநாமங்கள் மீதான அவர்களின் தொடர்ச்சியான நம்பிக்கை மற்றும் உறுதி தொடர்பில் நாம் மிகவும் நன்றியுடையவர்களாக உள்ளோம்.” என்றார்.

யூனிலீவர் ஸ்ரீ லங்கா நிறுவனம் சர்வதேச தரங்களை பூர்த்தி செய்யும் சிறந்த புத்தாக்க கண்டுபிடிப்புகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், சமூகம் மற்றும் சூழலில் சாதகமான தாக்கத்தை உருவாக்கும் நோக்கம் சார்ந்த வர்த்தகநாமங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. யூனிலீவர் ஸ்ரீ லங்காவின் முதன்மையான வர்த்தகநாமமான சன்லைட், ‘மனுதம் வியமன’ போன்ற திட்டங்கள் ஊடாக நாடளாவிய ரீதியில் உள்ள பல்வேறு சமூகங்களிடையே பிணைப்புகளை வலுப்படுத்துவதில் முன்னுரிமை அளிக்கிறது. இலங்கையில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் வாய்ச் சுகாதாரத் தரத்தை மேம்படுத்துவதிலும் சிக்னலின் ‘சினா போ வேவா’ பிரசாரம் முக்கிய பங்கு வகிக்கிறது. எப்போதும் தங்களை அழகாகவும் காண்பிக்கவும், அழகாக உணரும் வகையிலுமான கூந்தலுடன், எல்லைகளைத் தாண்டி செழித்து வளர பெண்களின் நம்பிக்கையை வளர்ப்பதில் சன்சில்க் கவனம் செலுத்துகிறது. நாட்டின் பல பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட தனது மிகவும் வரவேற்புக்குரிய சன்சில்க் ‘ஹெடகாரி’ திட்டமானது, நுகர்வோர் மற்றும் சலூன் நிபுணர்கள் ஆகிய இரு தரப்பினருக்கும் உதவும் வகையிலான, கூந்தல் பராமரிப்பில் புத்தாக்கம் மற்றும் நவீன பாணியின் துடிப்பான கொண்டாட்டமாகும். பெண்களின் பாத்திரம் தொடர்பான சமூகத்தின் பார்வையை இது ஒரு இல்லத்தரசி என்பதற்கு அப்பால் மாற்றும் நோக்கத்தை விம் கொண்டுள்ளது. வஸ்லின் அனைத்து வகையான சருமங்களையும் அறிந்து ஆதரிப்பதில் உறுதி பூண்டுள்ளதால், எந்தவொரு கட்டுப்பாடுகளும் இன்றி வாழ முடியும்