2025 பெரும் போகத்திற்காக விவசாயிகளை வலுவூட்டிய DIMO Care Camp மற்றும் Mahindra Tractor Service Camp

இலங்கையின் விவசாய சமூகங்களை பெரும் போகத்திற்கு தயாராவதை ஆதரிக்கும் வகையில் DIMO Agribusinesses நிறுவனம் அதன் DIMO Care Camp மற்றும் Mahindra Tractor Service Camp உழவு இயந்திர சேவை தொடர்களை அண்மையில் வெற்றிகரமாக நிறைவு செய்திருந்தது. இந்த சேவைகள் நாடு முழுவதிலும் உள்ள உழவு இயந்திர உரிமையாளர்களின் வலுவான பங்கேற்பையும் ஆதரவையும் பெற்றிருந்தன.
DIMO Care Camp சேவையில் எந்தவொரு வர்த்தகநாமத்தின் அல்லது மாதிரிகளின் உழவு இயந்திரங்களுக்கும் சேவைகள் வழங்கப்பட்டன. அதேசமயம், Mahindra Service Camp தொடர்கள் Mahindra உழவு இயந்திர உரிமையாளர்களுக்காக பிரத்தியேகமாக இடம்பெற்றன. இரு திட்டங்களும் உழவு இயந்திரங்களின் ஆயுட்காலத்தையும் திறனையும் நீடிக்கச் செய்வதற்கான சரியான பராமரிப்பின் அவசியத்தை வலியுறுத்தின. பெரும்போக நெற் செய்கை பருவத்தின் முக்கிய காலப்பகுதியில் இடம்பெற்ற இந்நிகழ்வானது, உழவு இயந்திர உரிமையாளர்கள் தங்களது விவசாய உற்பத்தித்திறனை அதிகப்படுத்துவதை உறுதி செய்கிறது.
DIMO Care Camp சேவைகள், 2025 ஜூலை 30 முதல் ஓகஸ்ட் 11 வரை வவுனியா, அநுராதபுரம், அம்பாறை, குருணாகல், பொலன்னறுவை உள்ளிட்ட முக்கிய விவசாய மாவட்டங்களில் இடம்பெற்றன. இதேவேளை, Mahindra Tractor Service Camps சேவைகள் ஓகஸ்ட் 07 முதல் 31 வரை கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, அம்பாறை, செங்கலடி, மொணராகலை, வெல்லவாய, எதிமலை, கிராந்துருகோட்டை, ரம்பேவ, பதவிய, ஹொரவபொத்தானை, மஹவ, கந்தளாய், பொல்பிதிகம ஆகிய இடங்களில் இடம்பெற்றன.
இதில் பங்குபற்றியவர்களுக்கு விரிவான உழவு இயந்திர ஆய்வுகள், தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் அத்தியாவசிய உதிரிப்பாகங்கள் வழங்கப்பட்டன. விவசாயிகள் DIMO வின் அனுபவமிக்க தொழில்நுட்ப நிபுணர்களிடமிருந்து பெறுமதி வாய்ந்த அறிவுரைகளை பெற்றனர். இதன் மூலம் உழவு இயந்திரங்களை நீண்டகாலம் சிறந்த செயல்திறனுடன் பராமரிப்பதற்கான வாய்ப்பை அவர்கள் பெற்றுக் கொண்டனர்.
இத்திட்டத்தில் தொழில்நுட்ப சேவைகளுக்கு அப்பால், சமூக நலன் தொடர்பான பணிகளும் இடம்பெற்றன. இந்த முகாம்களுடன் இணைந்தவாறு, சுகாதார கிளினிக் சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இங்கு குருதி அழுத்த சோதனை, உடல் எடை (BMI) மதிப்பீடு உள்ளிட்ட சோதனைகளும் முன்னெடுக்கப்பட்டன. இது, பயிர்ச் செய்கைக் காலத்தில் உழவு இயந்திர உரிமையாளர்கள் சிறந்த உடல் நலனுடன் இருப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது. Mahindra முகாம்களில், உழவு இயந்திர உரிமையாளர்களுக்கும் பிரதேசவாசிகளுக்கும் நீரிழிவு பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் போன்ற மருத்துவ சேவைகளும் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த முயற்சிகள் குறித்து DIMO நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஜீவ் பண்டிதகே கருத்துத் தெரிவிக்கையில், “DIMO Care Camp மற்றும் Mahindra Tractor Service Camp தொடர்களின் மூலம், உழவு இயந்திர உரிமையாளர்களுக்கு சரியான தொழில்நுட்ப அறிவு மற்றும் நடைமுறை ரீதியான வழிகாட்டல்களை வழங்கி வலுப்படுத்துவதே எமது நோக்கமாகும். இந்த சேவைகள், உழவு இயந்திர உரிமையாளர்கள் தங்கள் உழவு இயந்திரங்களை அதிக திறனுடன், நீண்ட காலத்திற்கு நிலைபேறான தன்மையுடன் பயன்படுத்த உதவும் என நாம் நம்புகிறோம்.” என்றார்.
DIMO Care Camp இந்த அனுபவத்தை மேலும் மேம்படுத்துவதற்காக, FM Derana வானொலியின் Gamata Derana நிகழ்ச்சியுடன் இணைந்து, சேவைகள் இடம்பெற்ற இடங்களில் பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு நிகழ்வுகளை முன்னெடுத்திருந்தது. இதன் மூலம் பங்கேற்பாளர்கள் தொழில்நுட்ப உதவிகளையும் அறிவையும் பெற்றுக் கொண்டதோடு மட்டுமன்றி, தங்கள் சமூகங்களுடன் இணைந்து ஓய்வையும், பொழுதுபோக்கு அம்சத்தையும், மகிழ்ச்சியையும் அனுபவிக்க முடிந்தது.
இதன் மூலம் இலங்கையில் Mahindra மற்றும் Swaraj உழவு இயந்திரங்களின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான DIMO, விவசாய சமூகத்தின் நம்பகமான கூட்டாளி எனும் தனது பங்கை மேலும் வலுப்படுத்தியுள்ளது. திறமையான தொழில்நுட்ப நிபுணர்களின் வலையமைப்புடன், பல தசாப்த அனுபவம் கொண்ட இந்நிறுவனம், விவசாயத் துறையில் சமூகங்களை முன்னேற்றுவதற்கும், உற்பத்தித்திறனை உயர்த்துவதற்கும், தேசத்தின் உணவுப் பாதுகாப்பை ஆதரிப்பதற்கும் அர்ப்பணிப்புடன் நின்று செயற்பட்டு வருகின்றது.
END