2025இல் இலங்கையின் ‘Class A’ SUV சந்தையில் 55% பங்கினைப் பெற்று முதலிடம் பிடித்த AMW நிறுவனம்
Al-Futtaim குழுமத்தின் ஓர் அங்கமானதும், Nissan மற்றும் Suzuki நிறுவனங்களின் இலங்கையில் அங்கீகாரம் பெற்ற விநியோகஸ்தருமான அசோசியேட்டட் மோட்டார்வேஸ் (பிரைவேட்) லிமிட்டெட் (AMW), 2025 ஆம் ஆண்டில் நாட்டின் முதல் தர (Class A) SUV பிரிவில் 55% சந்தைப் பங்கினைப் பெற்று தெளிவான சந்தையின் முன்னணி நிறுவனமாக உருவெடுத்துள்ளது. இந்த மைல்கல் சாதனையானது, முழுமையாக Nissan Magnite மற்றும் Suzuki Fronx ஆகிய வாகனங்களின் உயர்ந்த வெற்றி மூலம் அடையப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தமாக Class A SUV வாகன விற்பனையானது ஒரு வருடத்தில் 6,860 அலகுகளை எட்டியுள்ள நிலையில், அதில் AMW நிறுவனம் 3,774 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது இப்பிரிவில் உள்ள எந்தவொரு தனியான விநியோகஸ்தரும் எட்டிய மிக உயர்ந்த விற்பனை அளவாகும். இதில் Nissan Magnite சுமார் 40% சந்தைப் பங்கினைக் கொண்டிருந்ததுடன், Suzuki Fronx 15% பங்களிப்பை வழங்கியுள்ளது. இவை இரண்டும் இணைந்து வேகமான அதிக கேள்வியை ஏற்படுத்தி வரும் இந்தப் பிரிவில் புதிய தலைமைத்துவத்தை ஏற்படுத்தியுள்ளன.
Magnite மற்றும் Fronx ஆகிய வாகன விற்பனையின் வெற்றியானது, துணிச்சலான வடிவமைப்பு, மேம்பட்ட அம்சங்கள், எரிபொருள் திறன், பாதுகாப்பு மற்றும் பெறுமதி ஆகிய கவர்ச்சிகரமான கலவையை வழங்குவதன் மூலம் இலங்கை நுகர்வோரின் தெரிவுகளுடன் வலுவாக ஒத்துப்போகிறது. இந்தச் செயற்பாடானது AMW இன் நாடு தழுவிய விற்பனை மற்றும் விற்பனைக்குப் பிந்தைய உட்கட்டமைப்பினால் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், இதற்கு Al-Futtaim குழுமத்தின் உலகளாவிய வாகனத்துறை நிபுணத்துவம், செயற்பாட்டு விசேடத்துவம் மற்றும் நிர்வாகத் தரநிலைகள் ஆகியன ஆதரவளிக்கின்றன. வருடத்தின் இரண்டாம் பாதியில் விற்பனை வேகம் கணிசமாக அதிகரித்தது. இந்த இரண்டு வாகன மாதிரிகள் மீதான நிலைபேறான தேவை மற்றும் வாடிக்கையாளர் நம்பிக்கையை இது உறுதிப்படுத்துகிறது.
இந்த சாதனை குறித்து AMW இன் முகாமைத்துவ பணிப்பாளர் ஜவஹர் கணேஷ் தெரிவிக்கையில், “இந்தச் சாதனையானது இலங்கையில் Nissan Magnite மற்றும் Suzuki Fronx வாகனங்களுக்கு கிடைத்துள்ள ஒப்பிட முடியாத வரவேற்பின் நேரடி விளைவாகும். Class A SUV பிரிவில் 55% சந்தைப் பங்கினைப் பெறுவது என்பது வெறுமனே ஒரு விற்பனை சாதனை மாத்திரமல்ல; இது எமது தயாரிப்புகள், எமது குழுவினர் மற்றும் சிறந்த உரிமையாளர் அனுபவத்தைப் பெற்றுத்தருவோம் எனும் எமது வாக்குறுதி ஆகியவற்றின் மீதான எமது வாடிக்கையாளர் கொண்டுள்ள நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது. Al-Futtaim குழுமத்தின் வலுவான ஆதரவுடன், ஒவ்வொரு வாடிக்கையாளர் சந்திப்புப் புள்ளிகளிலும் உலகத்தரம் வாய்ந்த தரநிலைகளை வழங்க நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம். AMW வாகனத்தை தெரிவு செய்தமை தொடர்பில் எமது வாடிக்கையாளர்களுக்கு நன்றிகளைத் தெரிவிப்பதுடன், நாடு முழுவதும் உள்ள எமது குழுவினரின் அர்ப்பணிப்பு மற்றும் செயற்பாட்டுத் திறனை நான் இவ்வேளையில் பாராட்டுகிறேன்.” என்றார்.
Class A SUV பிரிவில் AMW இன் தலைமைத்துவமானது இலங்கையின் மிகவும் செல்வாக்கு மிக்க வாகன விநியோகஸ்தர்களில் ஒருவராக அதன் நிலையை உறுதிப்படுத்துகிறது. உள்ளூர் வாகனத் துறையில் 75 ஆண்டுகளுக்கும் மேலான நம்பகமான இருப்பைக் கொண்டுள்ள AMW, உலகளாவிய ரீதியில் மதிக்கப்படும் வர்த்தகநாமங்கள், ஆழ்ந்த உள்ளூர் சந்தைப் புரிதல் மற்றும் Al-Futtaim குழுமத்தின் அளவு மற்றும் அதன் மீதான நம்பகத்தன்மை ஆகியவற்றை தொடர்ச்சியாக ஒருங்கிணைத்து வருகிறது. Nissan Magnite மற்றும் Suzuki Fronx ஆகிய வாகனங்கள் இவ்வகை வகுப்பில் காணப்படுகின்ற செயல்திறன், பிரபல்யத் தன்மை மற்றும் மதிப்பு ஆகியன தொடர்பான புதிய வரையறைகளை தொடர்ச்சியாக உருவாக்கி வருகின்றன.
எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தனது பயணத்தை முன்னெடுக்கும் AMW, தயாரிப்புகளின் தொடர்ச்சியான புத்தாக்கம், மேம்படுத்தப்பட்ட வாடிக்கையாளர் அனுபவம் மற்றும் நிலைபேறான வளர்ச்சி ஆகியவற்றின் மூலம் அதன் தலைமைத்துவத்தை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. இதன் மூலம் நிறுவனம் கொண்டுள்ள வர்த்தகநாமங்கள் இலங்கை SUV வாடிக்கையாளர்களின் விருப்பமான தெரிவாக இருப்பதை உறுதி செய்கிறது.
ஆதாரம்: மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் (RMV).
‘Class A SUV’ பிரிவு என்பது 4,000 மி.மீ. இற்கும் குறைவான நீளம் கொண்ட வாகனங்களை குறிப்பிடுகிறது.
Photo Caption
AMW நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ஜவஹர் கணேஷ்