2024 LMD சஞ்சிகை வர்த்தகநாம பட்டியலில் இலங்கையில் ‘அதிகம் விரும்பப்படும் மோட்டார் சைக்கிள் வர்த்தகநாமம்’ என முடிசூட்டப்பட்ட Honda
இலங்கையில் Honda வர்த்தகநாமத்திற்கான ஒரேயொரு விநியோகஸ்தராக விளங்கும் Stafford Motor Co (Pvt) Ltd. நிறுவனமானது, LMD சஞ்சிகையினால் முன்னெடுக்கப்பட்ட வர்த்தகநாமங்களின் 2024 வருடாந்த தரவரிசை பட்டியலில், வாகனத் துறையில் ‘Most Loved Motorbike Brand’ (அதிகம் விரும்பப்படும் மோட்டார் சைக்கிள் வர்த்தகநாமம்) எனும் மதிப்புமிக்க பட்டத்தை வென்றுள்ளது என்பதை அறிவிப்பதில் Honda பெருமிதம் கொள்கிறது. சஞ்சிகையின் இந்த தரவரிசை வெளியீடானது, நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களிடையை நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் அடிப்படையில் வர்த்தகநாமங்களை அங்கீகரித்து கௌரவிப்பதோடு, இது ஒரு வெகுமதியுமாகும். இந்த முக்கிய கௌரவமானது, LMD சஞ்சிகையின் வாசகர்களின் வாக்குகளால் தீர்மானிக்கப்படுவதோடு, பல ஆண்டுகளாக Honda மோட்டார்சைக்கிள்கள் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையையும் எடுத்துக் காட்டுகிறது.
இலங்கையில் மோட்டார் வாகன தொழிற்துறை எதிர்கொண்டுள்ள பெரும் சவால்களுக்கு மத்தியில் அபாரமான மீளெழுச்சி, வலிமை, நீடித்து வளரும் திறனை Honda வெளிப்படுத்தியுள்ளது. இந்த அங்கீகாரமானது. Honda நிறுவனத்தின் சிறந்த அர்ப்பணிப்பு மற்றும் அதன் வாடிக்கையாளர்கள் தொடர்பில் நிறுவனம் கொண்டுள்ள ஈடு இணையற்ற அர்ப்பணிப்புக்கு ஒரு உண்மையான சான்றாகும். Honda நிறுவனம் கொண்டுள்ள மதிப்பிற்குரிய இடத்தைப் பேணுவதில் Stafford Motor Co. (Pvt) Ltd. நிறுவனம் உள்ளூர் சந்தையில் முக்கிய பங்காற்றி வருகிறது. மிகவும் சவாலான கடந்த 4 வருடங்களில், நிறுவனம் விற்பனைக்குப் பின்னரான உயர்தர சேவையை தொடர்ச்சியாக வழங்கி வருகிறது. தமது வாடிக்கையாளர்கள் சிறந்த பராமரிப்பு சேவையையும் ஆதரவையும் பெறுவதை நிறுவனம் உறுதி செய்து வருகிறது.
Stafford Motor Co (Pvt) Ltd. ஆனது, சமீபத்திய சவாலான காலகட்டங்களுக்கு மத்தியில் நாடு முழுவதும் அசல் Honda உதிரிப் பாகங்கள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், அளப்பரிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. Honda மோட்டார்சைக்கிள்கள் கொண்டுள்ள செயல்திறன் மற்றும் நீண்ட ஆயுளைப் பேணுவது தொடர்பில், வாடிக்கையாளர்களின் நம்பிக்கை மற்றும் விசுவாசத்தை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், அசல் உதிரிப் பாகங்களை வழங்குவதற்கு நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பானது மிக முக்கியமாக விளங்குகின்றது.
அது மாத்திரமன்றி, இறக்குமதி தொடர்பான கட்டுப்பாடு காரணமாக ஏற்பட்டுள்ள சவால்களை எதிர்கொள்ள நிறுவனம் ஒரு முன்னோடியான அணுகுமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக, சிறப்பாக மறுசீரமைக்கப்பட்ட (reconditioned) ஸ்கூட்டர்களை வழங்குவதன் மூலம், Honda வர்த்தகநாமம் தொடர்பில் ஆர்வம் கொண்டுள்ள வாடிக்கையாளர்களை, மிகுந்த நம்பிக்கையுடன் எந்த தயக்கமும் இன்றி ஸ்கூட்டரை கொள்வனவு செய்ய உதவுகின்றது. இந்த திட்டமானது, வாடிக்கையாளர்களுக்கு ஒரு மாற்று வசதியை வழங்குவதோடு மாத்திரமன்றி, வாடிக்கையாளர் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் Honda நிறுவனத்தின் அர்ப்பணிப்பை வலுப்படுத்தவும் உதவுகிறது.
இந்த கௌரவம் குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட Stafford Motors முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி காலிங்க களுபெரும, “கடந்த நான்கு வருடங்களில், சவாலான வணிக நிலைமைகள் காணப்பட்ட போதிலும், அனைத்து Honda வாடிக்கையாளர்களுக்கும் ஒப்பிட முடியாத விற்பனைக்குப் பின்னரான ஆதரவை வழங்குவதில் நாம் வலுவான அர்ப்பணிப்பைப் பேணி வருகிறோம். அது மாத்திரமன்றி, நுகர்வோருக்கு கிட்டத்தட்ட புதிய வாகனங்களை வழங்கும் வகையில் Honda Recon வாகனங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். எமது ஊழியர்கள் மற்றும் முகவர்களுக்கான தொடர்ச்சியான பயிற்சியளிப்புகளில் முதலீடு செய்வதன் மூலம், விற்பனைக்குப் பின்னரான உயர் மட்ட சேவையை வழங்குவதற்கு நாம் முன்னுரிமை அளித்து வருகின்றோம். இந்த மதிப்புமிக்க பட்டம் எமக்கு வழங்கப்பட்டுள்ளதன் மூலம், எமது முயற்சிகளை வாடிக்கையாளர்கள் அங்கீகரித்துள்ளனர் என நாம் நம்புகிறோம்.” என்றார்.
இலங்கையில் மிகவும் விரும்பப்படும் மோட்டார் சைக்கிள் வர்த்தக நாமமாக LMD சஞ்சிகையினால் Honda வர்த்தகநாமத்திற்கு அங்கீகாரம் கிடைக்கப் பெற்றமையானது ஒரு முக்கிய மயில்கல்லாகும். இந்த வெற்றியில், Stafford Motor நிறுவனத்தின் ஒப்பிட முடியாத சேவை மற்றும் புத்தாக்கமான தீர்வுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இது, Honda வர்த்தகநாமம் தொடச்சியாக வளர்வதையும், நாடு முழுவதும் உள்ள மோட்டார் சைக்கிள் ஆர்வலர்களின் விருப்பமான தெரிவாக இருப்பதையும் உறுதி செய்கிறது.