
2024 தேசிய கைத்தொழில்துறை வர்த்தகநாம விசேடத்துவ (NIBE) விருதுகளில் உயர் கௌரவங்களை வென்ற Alumex PLC
இலங்கையின் முன்னணி அலுமினிய தீர்வுகள் வழங்குனரான Alumex PLC நிறுவனம், 2024 தேசிய கைத்தொழில்துறை வர்த்தகநாம விசேடத்துவ (NIBE) விருதுகளில் Metal, Die, Mold, Machinery Tools and Allied Industry Sector (பாரிய அளவிலான பிரிவு) ஆகியவற்றில் சிறந்த தேசிய கைத்தொழில்துறை வர்த்தகநாமமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
கைத்தொழில்துறை மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சினால் கைத்தொழில்துறை அபிவிருத்தி சபையுடன் (IDB) இணைந்து வழங்கப்பட்ட இந்த மதிப்புமிக்க விருதானது, தரம், புத்தாக்கம் மற்றும் கைத்தொழில்துறை தலைமைத்துவத்திற்கான Alumex இன் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை எடுத்துக் காட்டுகிறது.
இந்நிகழ்வில், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க ஆகியோருடன் சிரேஷ்ட அரச அதிகாரிகள் மற்றும் கைத்தொழில்துறை தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த சாதனை குறித்து Alumex PLC நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பிரமுக் தெடிவாலா கருத்துத் தெரிவிக்கையில், “இந்த மதிப்புமிக்க விருதை வென்றமையானது, விசேடத்துவத்தின் மூலம் சிறந்து விளங்குவதற்கான எமது இடைவிடாத முயற்சியை பிரதிபலிக்கிறது. Alumex நிறுவனம் எனும் வகையில், அலுமினியக் கைத்தொழில்துறையில் புத்தாக்கம் மற்றும் நிலைபேறான தன்மையை நோக்கி எமது எல்லைகளை விரிவுபடுத்துவதற்கு நாம் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம். இந்த அங்கீகாரமானது, இலங்கையின் கைத்தொழில்துறை முன்னேற்றத்திற்கு பங்களிக்கும் உலகத்தரம் வாய்ந்த தீர்வுகளைத் தொடர்ச்சியாக வழங்குவதற்கு எம்மை மேலும் ஊக்குவிக்கிறது. இலங்கையின் மிகவும் நம்பகமான அலுமினிய வர்த்தகநாமம் என்று மக்கள் மத்தியில் நாம் கொண்டுள்ள பெயரை உறுதிப்படுத்துவதில் நாம் பெருமை கொள்கிறோம். இது கைத்தொழில்துறையில் பாரிய முன்னேற்றங்களுக்கு வழிவகுப்பதோடு, தேசிய வளர்ச்சிக்கும் வழி வகுக்கும்.” என்றார்.
அலுமினிய பொருட்கள் மற்றும் மேம்பட்ட கலைப்படைப்புத் தீர்வுகளில் அதன் ஒப்பிடமுடியாத நிபுணத்துவத்தை Alumex PLC நிறுவனத்தின் வெற்றி எடுத்துக் காட்டுகிறது. உயர்தர, நிலைபேறான அலுமினிய உற்பத்திகள் மூலம் இலங்கையின் கட்டுமானம் மற்றும் உற்பத்தித் துறைகளை நவீனமயமாக்குவதில், தன்னை நிலைநிறுத்திக் கொள்வதிலும், சந்தைத் தலைவராக அதன் நிலையை உறுதிப்படுத்துவதிலும் நிறுவனம் முக்கிய பங்கு வகித்துள்ளது.
நான்கு தசாப்தங்களுக்கும் மேலான தொழில்துறை அனுபவத்துடன், அலுமினிய உற்பத்தியில் தொடர்ச்சியான தர அளவுகோல்களை அமைத்து வருவதோடு, வீடுகள், வணிகங்கள் மற்றும் கைத்தொழில்துறை பயன்பாடுகளுக்கு உலகத்தரம் வாய்ந்த தீர்வுகளை வழங்குகிறது. கட்டடக் கலைஞர்கள், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் கைத்தொழில்துறை வாடிக்கையாளர்களுக்கு விருப்பமான தெரிவு எனும் வகையில், இலங்கையின் கட்டுமானத் துறையை உலகளாவிய தரத்திற்கு உயர்த்துவதில் நிறுவனம் உறுதியாக உள்ள அதேவேளை, சூழல் நட்பு மற்றும் வலுசக்தித் திறன் கொண்ட தீர்வுகளை அது வழங்குகிறது.
2024 NIBE விருதுகள், இலங்கையின் கைத்தொழில்துறையை சிறந்த நிலைக்கு கொண்டு செல்வதில் கணிசமான பங்களிப்பை வழங்கிய சிறந்த வர்த்தகநாமங்களைக் கொண்டாடியது. இந்நிகழ்வில் 25 தொழில் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு 111 விருதுகள் வழங்கப்பட்டன. அத்துடன், முக்கிய வர்த்தகநாம மதிப்பு, சந்தைத் தலைமைத்துவம் மற்றும் தேசிய பொருளாதார வளர்ச்சி மற்றும் அபிவிருத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான பங்களிப்புகளை வெளிப்படுத்திய வணிகங்களை இந்த தளம் கௌரவித்தது.
Alumex பற்றி
1986 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட Alumex PLC நிறுவனம், இலங்கையை தளமாகக் கொண்ட அலுமினிய உற்பத்திகள் மற்றும் கட்டமைப்புகளின் முன்னணி உற்பத்தியாளராக திகழ்கின்றது. இந்நிறுவனம், கட்டுமானம், வாகனம் மற்றும் நுகர்வோர் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கான பரந்த அளவிலான அலுமினிய தயாரிப்புகளை தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றுள்ளது. தரம், புத்தாக்கம், நிலைபேறான தன்மை தொடர்பான அர்ப்பணிப்புக்கு Alumex பெயர் பெற்று விளங்குவதோடு, பல்வேறு வாடிக்கையாளர் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான தனிப்பயனாக்கப்பட்ட தீர்வுகளை அது வழங்குகிறது. அதிநவீன உற்பத்தி தொழிற்சாலைகள் மற்றும் வலுவான விநியோக வலையமைப்புடன், பிராந்தியத்திலுள்ள அலுமினிய சந்தையில் ஒரு முன்னணி நிறுவனமாக தன்னை நிலைநிறுத்தியுள்ள Alumex, உள்நாட்டு மற்றும் சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்குகிறது. தொழில்நுட்பம் மற்றும் வாடிக்கையாளர் சேவையில் அது செலுத்தும் கவனம் ஆகியன, தொழில்துறையில் ஒரு நம்பகமான கூட்டாளியாக மாறுவதற்கான அதன் நற்பெயருக்கு பங்களிப்பு வழங்கியுள்ளது.