14th Gen Intel Desktop ஐ இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ள Lenovo, அனைத்து வர்த்தக தயாரிப்புக்களுக்கும் அவை உபயோகிக்கப்படுகின்ற இடங்களிலேயே உத்தரவாதத்தை வழங்கி, பயன்பாட்டாளர் அனுபவத்தை மேம்படுத்துகின்றது

14th Gen Intel Desktop ஐ இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ள Lenovo, அனைத்து வர்த்தக தயாரிப்புக்களுக்கும் அவை உபயோகிக்கப்படுகின்ற இடங்களிலேயே உத்தரவாதத்தை வழங்கி, பயன்பாட்டாளர் அனுபவத்தை மேம்படுத்துகின்றது

Off By Mic

புத்தாக்கம் கொண்ட தொழில்நுட்ப தீர்வுகளை வழங்குவதில் முன்னிலை பெற்று விளங்குகின்ற ஒரு நாமமான Lenovo ஆனது IT Gallery Computers Pvt Ltd ன் ஒத்துழைப்புடன் பிரத்தியேகமான நிகழ்வொன்றை இன்று இலங்கையில் ஏற்பாடு செய்திருந்ததுடன், கணினி அனுபவத்தில் அதிநவீன மேம்பாடுகளை நேரடியாக அனுபவிப்பதற்காக வழங்கல் பங்காளர்கள் மற்றும் மதிப்பிற்குரிய வாடிக்கையாளர்களை ஒன்றுதிரட்டி அதனை நடாத்தியுள்ளது. மிகவும் கவர்ச்சியான சாதனங்கள், ஆழமான அறிவை வெளிப்படுத்தும் முக்கியமான உரைகள், தயாரிப்பு குறித்த ஆழமான அனுபவத்தைப் பெற்றுத்தரும் அமர்வுகள் என இந்நிகழ்வு களைகட்டியிருந்ததுடன், அடுத்த தலைமுறை ThinkCentre Neo 50t Gen 5 இன் அறிமுகம் மற்றும் அவை பயன்படுத்தப்படுகின்ற இடங்களிலேயே வழங்கப்பட்டுள்ள 5 ஆண்டுகள் வரையான உத்தரவாதம் ஆகியன நிகழ்வின் சிறப்பம்சங்களாக அமைந்தன.         

நவீன காலத்து வணிக தேவைப்பாடுகளுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ThinkCentre Neo 50t Gen 5 ஆனது, 13th மற்றும் 14th Gen Intel® Core™ i7 அல்லது Intel® 300 processors களின் வலுவூட்டலைக் கொண்டுள்ளதுடன், 64GB DDR5-5600 memory வரையான மெமரி ஆற்றலுடன், Intel UHD graphics (710, 730, அல்லது 770) உயர் திறன் கணினி செயல்பாட்டை வழங்குகின்றது. மூன்று வரையான தனித்தனி முகத்திரைகளின் துணை மற்றும் விரும்பும் பட்சத்தில் Intel Arc A310 GPU ஆகியவற்றுடன் இத்தொழில் சார்ந்தவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பணி இலக்குகளை இடைவிடாது மேற்கொள்ள முடிவதுடன், தலைசிறந்த காட்சித் தோற்றங்களையும் (display) அனுபவிக்க முடியும். Smart Power On feature மற்றும் Smart Connect enhance efficiency ஆகியன சீரான பணிப்பாய்ச்சல் மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட சாதனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு ஆகியவற்றை உறுதி செய்கின்றன.         

இதன் முக்கிய வடிவமைப்பு சிறப்பம்சங்கள்:

  • Processors: 14th Generation Intel Core i3 / i5 / i7 அல்லது Intel 300 Processor
  • Graphics: Intel UHD Graphics 710 / 730 / 770 அல்லது Intel Arc A310 LP
  • Memory: 64GB DDR5-5600 வரை (dual-channel)
  • Storage: 1TB M.2 SSD வரை மற்றும் விரும்பும் பட்சத்தில் 2TB வரையான HDD
  • இணைப்புத்திறன்: HDMI, DisplayPort, VGA, 15W சார்ஜ் உடன்USB-C, Wi-Fi 6, மற்றும்Bluetooth 5.3
  • வடிவமைப்பு: Smart Power On உடன் கையடக்கமான 13.6L tower மற்றும் விரும்பும் பட்சத்தில் மேம்பட்ட குளிர்படுத்தலுக்காக rear system fan

வாடிக்கையாளர்களின் திருப்தியை மேம்படுத்தும் வகையில், தனது சேவை அர்ப்பணிப்பு குறித்து முக்கியமான மேம்பாடு தொடர்பான அறிவிப்பொன்றையும் Lenovo விடுத்துள்ளது. உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் வர்த்தக தயாரிப்புக்கள் அனைத்திற்கும் 1 முதல் 5 வரையான ஆண்டுகளுக்கு அவை பயன்படுத்தப்படுகின்ற இடங்களிலேயே உத்தரவாதத்தை வழங்கி, தொழிற்துறையில் இத்தகைய முன்னோடி அறிவிப்பொன்றையும் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவாத நீட்டிப்பு குறித்த அறிவிப்பானது, நம்பகமான மற்றும் வலுவான விற்பனைக்குப் பின்னரான ஆதரவை வழங்குவதில் Lenovo கொண்டுள்ள இடைவிடாத அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கின்றது. தற்போது வர்த்தக வாடிக்கையாளர்கள் அனைவரும் தமது அலுவலக வளாகங்களிலேயே Lenovo அங்கீகாரம் பெற்ற பொறியியலாளர்களால் தமது கணினிகளின் பராமரிப்புச் சேவைகளைப் பெற்றுக்கொள்ள வழிகிடைத்துள்ளதுடன், விரைவான, மற்றும் சிரமங்களற்ற தீர்வை இது உறுதி செய்கின்றது.      

Lenovo வெளிநாட்டு வணிகத்திற்கான பணிப்பாளர் நவீன் கெஜ்ரிவால் அவர்கள் நிகழ்வில் உரையாற்றுகையில், இலங்கையிலுள்ள எமது கூட்டாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு அதிநவீன ThinkCentre Neo 50t Gen 5ஐ அறிமுகம் செய்து வைப்பதையிட்டு மிகவும் மகிழ்ச்சி அடைகின்றோம். இப்புதிய தலைமுறை கணினியானது செயல்திறன், பாதுகாப்பு மற்றும் நிலைபேற்றியல் ஆகியவற்றின் ஒப்பற்ற இணைப்பை வழங்குகின்றது. பரிணாம வளர்ச்சி இடம்பெற்று வருகின்ற டிஜிட்டல் துறையில் போட்டி நிறுவனங்களை விடவும் முன்னிலையில் திகழ்வதற்கு இவை இடமளிக்கின்றன. மேலும், நாம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள Onsite warranty எமது வாடிக்கையாளர்களுக்கு நம்பகமான மற்றும் நீண்ட கால அடிப்படையிலான ஆதரவை வழங்குவதில் நாம் கொண்டுள்ள அர்ப்பணிப்பையும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது,”என்று குறிப்பிட்டார்.         

IT Gallery Computers Pvt Ltd முகாமைத்துவப் பணிப்பாளர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலாந்த பெரேரா அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், Lenovo உடன் நாம் கொண்டுள்ள கூட்டாண்மையின் மூலமாக, இலங்கைச் சந்தைக்கு எப்போதும் மிகச் சிறந்த தொழில்நுட்ப தீர்வுகளை வழங்கி வந்துள்ளோம். ThinkCentre Neo 50t Gen 5மற்றும் அதனுடன் சேர்ந்த மேம்பட்ட உத்தரவாதம் ஆகியன தலைசிறந்த பராமரிப்பு சேவையின் பக்கபலத்துடன், அதிநவீன சாதனங்களை வணிக நிறுவனங்களுக்கு வழங்குவதில் ஒரு பாரிய முன்னேற்றத்தைக் குறித்து நிற்கின்றது. புத்தாக்கமான தகவல் தொழில்நுட்பத் தீர்வுகளுடன், வாடிக்கையாளர்களுடனான எமது ஒத்துழைப்பை வலுப்படுத்தி, அவர்களுக்கு உதவுவதற்கு ஆவலாக உள்ளோம்,”என்று குறிப்பிட்டார்.

ThinkCentre Neo 50t Gen 5 ன் அடிச்சட்டம் மற்றும் பொதியிடல் என்பவை 85% அளவில் நுகர்வுக்குப் பின்னர் மீள்சுழற்சி செய்யப்படக்கூடிய மூலப்பொருட்களைக் கொண்டுள்ளமை நிலைபேற்றியல் மீது Lenovo எந்தளவு தூரம் அக்கறை கொண்டுள்ளது என்பதையும் இந்நிகழ்வின் மூலமாக அது காண்பித்துள்ளது. மேம்பட்ட நிர்வகிக்கும் திறன், பாதுகாப்பு சிறப்பம்சங்கள் மற்றும் தனிப்பயனாக்கம் செய்யக்கூடிய கட்டமைப்பு ஆகியவற்றுடன், நிறுவன மட்டத்தில் பெறுபேற்றுத்திறனை அதியுச்சமாக்கும் வகையில் இந்த மேசைக்கணினி கட்டமைப்புச் செய்யப்பட்டுள்ளது.      

புகைப்பட்டத்தில் தோன்றும் காட்சி – Desktop neo50T G5 மற்றும் Thinkbook G7 மடிகணினி வரிசை ஆகிய வர்த்தக தயாரிப்புக்களை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட  IT Gallery Computers மற்றும் Lenovo India ஆகிய நிறுவனங்களின் பிரமுகர்கள்.

(இடமிருந்து வலப்புறமாக) – ஜெரால்ட் ஜோன், நுவன் பெரேரா, சச்சின் கினகி, சமீர் வர்ஷ்ணய், ஷானிகா பெரேரா, டிலாந்த பெரேரா (முகாமைத்துவப் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி – ITG), நவீன் கெஜ்ரிவால் (வெளிநாட்டு வணிகத்திற்கான பணிப்பாளர், Lenovo India), சுபோத் தேஷ்பாண்டே, சிராஜ் ஜாபிர், பிரசன்ன குலசிங்க, மொஹமட் றிகாஷ், டிலோன் பீரிஸ்

Lenovo குறித்த விபரங்கள்

57 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்துடன், சர்வதேச தொழில்நுட்ப வலு மையமாகத் திகழ்ந்து வருகின்ற Lenovo நிறுவனம், Fortune Global 500 பட்டியலில் 248வது ஸ்தானத்தில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளதுடன், 180 சந்தைகளில் தினந்தோறும் பல மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்கி வருகின்றது. அனைவருக்கு திறன்மிக்க தொழில்நுட்பத்தை கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற தைரியமான நோக்கத்தில் கவனம் செலுத்தியவாறு, செயற்கை நுண்ணறிவு இடமளிக்கப்பட்ட, தயார்படுத்தப்பட்ட மற்றும் உச்சமயமாக்கப்பட்ட சாதனங்கள் (தனிப்பட்ட பயன்பாட்டு கணினிகள், பணி மையங்கள், ஸ்மார்ட்போன்கள், டெப்லெட் சாதனங்கள்), உட்கட்டமைப்பு (server, storage, edge, உயர் செயல்திறன் கொண்ட கணினி மற்றும் மென்பொருள் வரையறுக்கப்பட்ட உட்கட்டமைப்பு), மென்பொருள், தீர்வுகள் மற்றும் சேவைகள் அடங்கிய ஒட்டுமொத்த வரிசையையும் கொண்ட உலகின் மிகப் பாரிய தனிப்பட்ட பயன்பாட்டுக் கணினி நிறுவனம் என்ற வெற்றியை அத்திவாரமாகக் கொண்டு மென்மேலும் சிறப்பான தீர்வுகளையும், சேவைகளையும் Lenovo கட்டமைத்து வருகின்றது. எங்கும், அனைவருக்கும் சமத்துவமான, நம்பகமான மற்றும் திறன்மிக்க எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்காக உலகத்தில் மாற்றத்திற்கு வித்திடும் புத்தாக்கத்தின் மீது Lenovo தொடர்ந்தும் முதலீடு செய்து வருகின்றது. Lenovo Group Limited (HKSE: 992) (ADR: LNVGY) என்ற பெயரின் கீழ் ஹொங்கொங் பங்குச்சந்தையில் Lenovo நிரற்படுத்தப்பட்டுள்ளது. மேலதிக விபரங்களை https://www.lenovo.com மூலமாகவும், உடனுக்குடன் வெளிவரும் செய்திகளை StoryHub மூலமாகவும் அறிந்து கொள்ள முடியும்.