12 ஆவது வருடாந்த மூலதன சந்தை விருதுகள் 2024 இல் First Capital Holdings இரட்டை விருதுகளை சுவீகரிப்பு சுவீகரித்தது.

Off By Mic
கவின் கருணாமூர்த்தி – பிரதம நிறைவேற்று அதிகாரி – First Capital Asset Management Limited

JXG (ஜனசக்தி குழுமம்) இன் துணை நிறுவனமும், முன்னணி முதலீட்டு நிறுவனமுமான First Capital Holdings PLC, அண்மையில் CFA ஸ்ரீ லங்கா அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 12ஆவது வருடாந்த மூலதன சந்தை விருதுகள் 2024 இல் இரட்டை விருதுகளை சுவீகரித்திருந்தது. தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாகவும், இலங்கையின் மூலதன சந்தைகளில் உறுதியான மற்றும் செல்வாக்கு செலுத்தும் செயற்பாட்டாளர் எனும் First Capital இன் நிலையை இந்த மைல்கல் சாதனை உறுதி செய்துள்ளது.

இந்த ஆண்டின் பெருமைக்குரிய வைபவத்தின் போது, அதன் முன்னணி முதலீட்டு தீர்வான First Capital Money Market Fund (FC MMF) காக, First Capital சிறந்த நம்பிக்கை அலகு நிதிக்கான வெண்கல விருதை பெற்றது. மேலும், First Capital இல் இணை ஆய்வாளராக பணியாற்றும் மனுஷ கந்தனாராச்சியினால் JAT ஹோல்டிங்ஸை குறித்து தயாரிக்கப்பட்ட விரிவான ஆய்வு அறிக்கைக்கு, சிறந்த பங்கு ஆய்வு அறிக்கைக்கான வெள்ளி விருது வழங்கப்பட்டது.

FC MMF க்கு கிடைத்த கௌரவிப்பினூடாக, முதலீட்டாளர்களை மையமாகக் கொண்ட, ஒழுக்கமான இடர் மேலாண்மை மற்றும் சிறந்த நிர்வாகம் ஆகியவற்றில் உறுதியான நிதியின் வலுவான முதலீட்டுத் தத்துவம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. வெளிப்படைத்தன்மை மற்றும் இணக்கத்தின் மிக உயர்ந்த தரங்களைப் பராமரிக்கும் அதே வேளையில், நிலையான வருமானத்தை வழங்குவதற்கான நிதி நிர்வாகக் குழுவின் உறுதிப்பாட்டை இந்த விருது உறுதிப்படுத்துகிறது.

First Capital Asset Management Limited இன் பிரதம நிறைவேற்று அதிகாரி கவின் கருணாமூர்த்தி கருத்துத் தெரிவிக்கையில், “எமது நிதி முகாமைத்துவ அணியின் அர்ப்பணிப்பு மற்றும் ஒழுக்கத்தை உறுதி செய்வதாக இந்த விருது அமைந்துள்ளது. முதலீட்டாளர்களுக்கு தொடர்ச்சியான வினைத்திறனை வழங்கி மற்றும் அவர்களின் நம்பிக்கையை பேணும் வகையில் முறையான, மூலோபாயத்துடனான முதலீட்டுத் தீர்மானங்களை மேற்கொண்டு, அவர்களை வலுவூட்டும் நடவடிக்கைகளில் நாம் கவனம் செலுத்துகிறோம்.” என்றார்.

“பங்கு ஆய்வுக்கான வெள்ளி விருதினூடாக, சந்தை பற்றிய தகவல்களை உரிய நேரத்தில், பொருத்தமான மற்றும் ஆய்வின் அடிப்படையில் பெற்றுக் கொடுப்பதில் First Capital கொண்டுள்ள தலைமைத்துவம் பிரதிபலிக்கப்பட்டுள்ளது. மனுஷவின் அறிக்கைக்கு வழங்கப்பட்ட கௌரவிப்பினூடாக, அவர்களின் பகுப்பாய்வுத்திறமை, துறைசார் நிபுணத்துவம் மற்றும் இலக்குடனான அறிக்கையிடலுக்கான அர்ப்பணிப்பு போன்றன வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தும் First Capital இன் ஆய்வுக் கொள்கையின் உள்ளம்சங்களான அமைந்துள்ளன.”

First Capital Holdings PLC இன் பிரதம ஆய்வு மற்றும் மூலோபாய அதிகாரி, திந்த மெத்தியு, இந்த கௌரவிப்பின் பரந்த தாக்கம் பற்றி குறிப்பிடுகையில், “கௌரவிப்புகளுக்கு அப்பால், எமது ஆய்வு பொது மக்களால் எவ்வித கட்டணங்களுமின்றி பார்வையிடக்கூடிய வகையில் அமைந்துள்ளது. WhatsApp மற்றும் இதர டிஜிட்டல் கட்டமைப்புகளினூடாக, நாம் தினசரி ஆயிரக் கணக்கானவர்களை சென்றடைவதுடன், நாடு முழுவதிலும் நிதிசார் அறிவு மற்றும் உள்ளடக்கமான முதலீட்டுக் கல்வியை மேம்படுத்திய வண்ணமுள்ளோம். தகவலறிந்த மற்றும் வினைத்திறனான மூலதன சந்தைகளை உருவாக்கும் செயற்பாடுகளுக்கு சிறந்த ஆய்வுகள் மற்றும் அடிப்படை பகுப்பாய்வுகளின் சிறந்த செயன்முறைகள் போன்றவற்றுக்கான எமது அர்ப்பணிப்பை மேலும் உறுதி செய்யும் வகையில் இந்த விருது அமைந்துள்ளது.” என்றார்.

வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் மூலதன சந்தை விருதுகளினூடாக, சிறப்பு, புத்தாக்கம் மற்றும் இலங்கையின் முதலீட்டு சூழலமைப்பில் ஏற்படுத்தப்படும் மாற்றத்துடனான தாக்கம் போன்றன கொண்டாடப்படுகின்றன. இரு பிரதான பிரிவுகளில் First Capital இன் சாதனைகளினூடாக, நிதிய முகாமைத்துவம் முதல் மூலதன சந்தை மதிநுட்பம் வரையான நிபுணத்துவத்தின் பரந்த தன்மை பிரதிபலிக்கப்படுவது மாத்திரமன்றி, தொழிற்துறையின் நியமங்களை மேம்படுத்துவது மற்றும் நீண்ட கால முதலீட்டாளர் நம்பிக்கையை கட்டியெழுப்புவது போன்றவற்றுக்கான உறுதியான அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது.

திமந்த மெத்தியு – பிரதான ஆய்வு மற்றும் மூலோபாய அதிகாரி

மூலதன சந்தை வியாபிக்கும் நிலையில், நோக்கம், தனிநபர்களுக்கும், நிறுவனங்களுக்கும் வலுவூட்டல் மற்றும் பரந்த பொருளாதாரத்துக்கு நம்பிக்கையான முதலீட்டுத் தீர்வுகள், நிபுணத்துவ உள்ளார்ந்த தரவுகள் மற்றும் சிறப்புக்கான அர்ப்பணிப்புடன் First Capital தொடர்ந்தும் முன்னிலையில் திகழ்கிறது. இந்த கௌரவிப்புகளினூடாக, அனைத்து இலங்கையர்களுக்கும் உறுதியான, வெளிப்படையான மற்றும் நிலைபேறான வளர்ச்சியை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான முன்னணி முதலீட்டு பங்காளர் எனும் அதன் உறுதியான கீர்த்தி நாமம் மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

###.

First Capital Holdings PLC பற்றி

இலங்கையில் காணப்படும் பட்டியலிடப்பட்ட முழு-சேவை முதலீட்டு நிறுவனமாக First Capital Holdings PLC திகழ்வதுடன், பிரதான வணிகர், கூட்டாண்மை நிதி ஆலோசகர், வெல்த் முகாமையாளர் மற்றும் பங்குமுகவராக இயங்குகின்றது. உறுதித்தன்மையை கட்டியெழுப்புவது, போட்டிகரமான அனுகூலத்தை ஊக்குவிப்பது மற்றும் சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை பெற்றுக் கொடுப்பது போன்றவற்றில் உறுதியான கவனத்தை செலுத்துவதுடன், ஜனசக்தி குழுமத்தின் ஆதரவுடன், First Capital, ‘செயலாற்றுகை முதலில்’ எனும் தனது கோட்பாட்டுக்கமைய திகழ்வதில் கவனம் செலுத்துகின்றது. தொடர்ச்சியாக இரண்டு வருட காலமாக முதலீட்டு வங்கியியல் துறையில் மிகவும் பெறுமதி வாய்ந்த நுகர்வோர் வர்த்தக நாமமாக First Capital கௌரவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 2024 SLIM வர்த்தகநாம சிறப்புகள் விருதுகள் வழங்கும் நிகழ்வில் “ஆண்டின் சிறந்த வர்த்தக நாமம்” எனும் உயர்ந்த கௌரவிப்பையும் First Capital பெற்றுள்ளது. நான்கு தசாப்த காலத்துக்கு மேலாக மூலதன சந்தை தீர்வுகளை வழங்கும் நிபுணத்துவத்துடன், First Capital Holdings PLC மற்றும் First Capital Treasuries PLC ஆகியவற்றின், LRA இன் கடன் தரப்படுத்தல்கள் “A” இலிருந்து “A+” ஆக stable outlook உடன் வழங்கப்பட்டுள்ளது.