வெசாக் தினத்தை அர்த்தமுள்ளதாகக் கொண்டாடிய தீவா – “தீவா ஃப்ரெஷ் நீலத் தாமரை மலர் தானம்” மூலம் கருணையும் தூய்மையும் வெளிப்படுத்தப்படுகிறது

இலங்கையின் நம்பகமான மற்றும் முன்னணி சலவைத் தூள் வர்த்தகநாமமான தீவா, வெசாக் காலத்தில் களனி ரஜ மஹா விகாரையில் “தீவா ஃப்ரெஷ் நீலத் தாமரை மலர் தானம்” நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. இதில், பௌத்த மக்கள் புனிதமாக கருதும் இலங்கையின் தேசிய மலரான நீலத் தாமரை மலர்களை பக்தர்களுக்கு வழங்கியதன் மூலம், தெய்வீக நம்பிக்கையுடனும், நாட்டின் கலாசார மரபுகளுக்கும் ஏற்ற வகையிலும் பக்தர்கள் வழிபாடுகளை மேற்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது.
நீலத் தாமரை மலரானது, அதன் அழகு, மணம் மற்றும் ஒரு ஆன்மீகப் பொருள் போன்ற விடயங்கள் காரணமாக இலங்கையர்களுக்கும் பெளத்த மதத்தை பின்பற்றுவோருக்கும் மிகுந்த மதிப்புடையதாக விளங்குகின்றது. இது நாட்டில் உள்ள பெரும்பாலான விகாரைகளில் தூய்மையின் அடையாளமாக சமர்ப்பிக்கப்படும் மலராகும். தீவா ஃப்ரெஷ் நீலத் தாமரை மலர் தானம் ஊடாக, பக்தர்கள் வெசாக் பண்டிகையின் போது தங்கள் ஆன்மீக நம்பிக்கையை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக அமைந்தது.
இந்நிகழ்வானது, தீவா வர்த்தகநாமத்தின் முக்கிய அடையாளமான தூய்மையை வலியுறுத்தும் நிகழ்வாகவும் அமைந்தது. தீவா ஃப்ரெஷ் சலவைத் தூள் தரும் உயர் தரமான தூய்மை மற்றும் சிறந்த நறுமணத்தைப் போலவே, இந்த மலரும் மனதையும் ஆன்மாவையும் தூய்மைப்படுத்தும், நற்குணங்களை பரப்பும் ஒரு ஆன்மீகச் சின்னம் என்பதை மக்கள் நினைவுகூரும் வகையில் அமைந்தது.
Hemas Consumer Brands நிறுவனத்தின் வீட்டுப் பராமரிப்பு தயாரிப்புகள் பிரிவின் தலைவர் நாமல் பெனாண்டோ இது பற்றித் தெரிவிக்கையில், “தீவா ஃப்ரெஷ் நீலத் தாமரை மலர் தான நிகழ்வானது, இந்த அர்த்தமிக்க நாட்களில் நாம் பெற்றதிலிருந்து எமது சமூகத்திற்கு மீளக் கொடுக்கும் ஒரு நிகழ்வாக அமைந்திருந்தது. இந்த தான நிகழ்வில் ஆர்வத்துடன் பங்குபற்றிய மக்கள் காட்டிய ஆதரவும், வரவேற்பும் எமக்கு மகிழ்ச்சியையும் பெருமையும் ஏற்படுத்தியது.” என்றார்.
இந்த நிகழ்வானது, தீவா ஃப்ரெஷ் பேர்பள் லோட்டஸ் சலவைத் தூள் (Diva Fresh Purple Lotus) பற்றி வலியுறுத்தும் ஒன்றாக அமைந்திருந்தது. இந்த தயாரிப்பானது, தீவா வர்த்தகநாமத்தின் இலங்கை மரபுகளுடனான உறவை பிரதிபலிப்பதோடு, நாட்டின் தேவைகளுக்கேற்ற சலவைப் பராமரிப்பு உற்பத்திகளை வழங்கும் தீவாவின் அர்ப்பணிப்பையும் உணர்த்துகிறது. தீவா ஃப்ரெஷ் நீலத் தாமரை தானம் போன்ற திட்டங்கள், உள்நாட்டு நுகர்வோருடன் தீவா கொண்டுள்ள உறவை மேலும் வலுப்படுத்துகின்றன. கடந்த 20 வருடங்களாக வெறுமனே சலவைப் பொருட்களை மட்டுமின்றி, இலங்கை மரபுகள், தூய்மை மற்றும் பராமரிப்பு ஆகியவற்றில் ஆழமாக வேரூன்றிய ஒரு அனுபவத்தை தீவா வழங்கி வருகிறது.
Hemas Consumer பற்றி
வீட்டு பயன்பாடு மற்றும் தனிநபர் பராமரிப்புத் தயாரிப்புகளில் இலங்கையின் முன்னணி உற்பத்தியாளராக திகழும் Hemas Consumer Brands நிறுவனம், வலுவான நோக்கம் கொண்ட வர்த்தகநாமங்கள் மற்றும் முற்போக்கான நிலைபேறான நடைமுறைகள் மூலம் பல ஆண்டுகளாக நுகர்வோர் இதயங்களை வென்றுள்ளது. Hemas Consumer Brands ஆனது, உலகத் தரம் வாய்ந்த தயாரிப்பு வகைகளின் மூலம், ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் தனிநபர் பராமரிப்புத் தீர்வுகளை வாழ்க்கையில் கொண்டு வர முயற்சிக்கிறது. வளர்ச்சியின் மூலம் ஈர்க்கப்பட்ட புத்தாக்கம் கொண்ட குழுக்கள் மூலம், உள்ளூர் தேவைகளை அறிந்து அதன் மூலம் சந்தையில் முன்னணியான மற்றும் விருதுகளை பெற்ற சிறந்த தயாரிப்புகளை உருவாக்குவதற்காக நிறுவனம் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. அர்த்தமுள்ள வரப்பிரசாதங்களை உருவாக்குவதன் மூலமும், நம்பகமான கூட்டாண்மைகளை வளர்ப்பதன் மூலமும் சூழலுக்கு உகந்த உலகத்தை உருவாக்குவதன் மூலமும் அது நாடு முழுவதிலுமுள்ள சமூகங்களின் வாழ்க்கையை சென்றடைகிறது.