விவசாயிகளை விவசாய தொழில்முயற்சியாளராக மாற்றும் DIMO Agribusinesses

Off By Mic

இலங்கையின் பாரம்பரிய விவசாய சமூகங்களை, தரவுகள் சார்ந்த விவசாயம் மற்றும் தொழில்முறை ஆலோசனைகளை ஊக்குவிப்பதன் மூலம், DIMO Agribusinesses விவசாய தொழில் முயற்சியாளர்களாக மாற்றி வருகின்றது. இந்த நோக்கத்திற்காக, விவசாய சமூகங்களின் மனநிலையை மாற்றவும் நடைமுறை ரீதியான அறிவை வழங்கவும் DIMO Agribusinesses நடவடிக்கை எடுத்துள்ளது.  விவசாயத்தை நிலைபேறான தன்மையுடன் கூடிய, இலாபகரமான தொழிலாக நிலைநிறுத்துவதுடன், நாட்டின் விவசாயத் துறையில் உண்மையான வணிக வாய்ப்புகளை அடையாளம் காண இந்த முயற்சி பெரிதும் நன்மை பயக்கின்றது.

இந்த மாற்றத்தை மேற்கொள்வதற்காக DIMO நிறுவனத்தின் விவசாயப் பிரிவான DIMO Agribusinesses, தனது Agri Consultancy பிரிவின் கீழ் தொழில்முறை சேவைகளின் தொகுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவைகள் மூலம் பாரிய மற்றும் சிறிய மட்டத்திலான செய்கையாளர்களுக்கு அவர்களுக்கு ஏற்ற வகையிலான தொழில்நுட்பம் மற்றும் ஆலோசனை சேவைகள் வழங்கப்படுவதோடு, பயிரின் விளைச்சல் திறன், இலாபமீட்டும் தன்மை மற்றும் நிலைபேறான தன்மையை அதிகரிக்கும் நோக்குடன் இந்த சேவைகள் வழங்கப்படுகின்றன. தொழில்முறை சாத்தியக்கூறு ஆய்வுகள், உத்திகளுடனான வணிக திட்டமிடல், பயிர் முகாமைத்துவ ஆலோசனை, சந்தை இணைப்புக்கான ஏற்பாடுகள் மற்றும் அதனுடன் இணைந்த திறன்களை மேம்படுத்தும் திட்டங்கள் உள்ளிட்ட சேவைகள் இதில் உள்ளடங்குகின்றன. அத்துடன், இந்த பிரிவின் மூலம், தெங்கு போன்ற பயிர்களுக்கான தோட்ட முகாமைத்துவ சேவைகளும் வழங்கப்படுவதோடு, அதன் மூலம் ஆரம்பம் முதலே சிறந்த தோட்ட செயற்பாட்டு நடவடிக்கைகள் நிலைநிறுத்தப்படுவது உறுதிப்படுத்தப்படுகின்றது.

இது தொடர்பாக DIMO Agribusinesses நிறுவனத்தின் பிரதான செயற்பாட்டு அதிகாரி பிரியங்க தெமட்டவ தெரிவிக்கையில், “தரவுகளை அடிப்படையாகக் கொண்ட அறிவானது எமது விவசாய தொழில்முயற்சித் திட்டத்தின் முக்கியமான அங்கமாகும். உதாரணமாக, எமது உள்ளக ஆய்வக வசதியின் மூலம் மண் தொடர்பான பரிசோதனை சேவைகள் வழங்கப்படுகின்றன. அதன் மூலம் உரத்திற்கான பரிந்துரை, பீடைகள் மற்றும் நோய் முகாமைத்துவ உத்திகள் மற்றும் இறுதி விளைச்சலை அதிகரிப்பதற்கான அடிப்படை அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இது விஞ்ஞான ரீதியான, திறனான விவசாய நடைமுறைகளுக்கு உதவுகின்றது.” என்றார்.

துல்லியமான விளைவுகளைக் கொண்ட விவசாயத்தை மேம்படுத்துவதற்காக நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் பணியிலும் DIMO நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. ட்ரோன் தொழில்நுட்பத்தின் மூலம் விவசாய உரமிடல் மற்றும் விதைகளை நடுதல் ஆகியன இதற்கு சிறந்த உதாரணமாகும். இந்த சேவைகள், வீணாவதை குறைத்தல், செயல்திறனை அதிகரித்து, விளைச்சலை மேம்படுத்த உதவுகிறது. அவை தவிர, இலங்கையின் புவியியல் மற்றும் காலநிலைச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப சிறப்பாக பொருந்தும் நுண் நீர்ப்பாசன தீர்வுகளும் DIMO நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, தேயிலை, தெங்கு போன்ற பருவமழை சார்ந்த பயிர்களுக்கு இது பெரிதும் பயனுள்ளதாக அமைகிறது. இந்த நடைமுறையை மேலும் நவீன தொழில்நுட்பத்துடன் இணைத்து DIMO நிறுவனத்தினால், நீர்ப்பாசனம் ஊடாக உரங்களை வழங்கும் வகையில் நீரில் கரையும் உரங்கள் (water-soluble fertilizers) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதோடு, இதன் மூலம் மிக இலகுவாக திறனான பயிர்ச் செய்கை முகாமைத்துவத்தை மேற்கொள்ளும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த முன்னேற்றகரமான வசதிகள் மூலம் பயிர்ச் செய்கை நடவடிக்கைகளில் காணப்படும் பாதிப்புகளைக் குறைத்து, விவசாய தொழில்முயற்சி தொடர்பான வலுவூட்டலை விவசாயிகள் மத்தியில் ஏற்படுத்துகின்றது.

இது குறித்து பிரியங்க தெமட்டவ மேலும் தெரிவிக்கையில், “உள்ளூர் வங்கிகள், அபிவிருத்தி நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளுடனான கூட்டாண்மைகள் மூலம் இந்த நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகள் கட்டுப்படியான விலையில் பெற்றுக்கொள்ள DIMO Agribusinesses நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த வசதிகள் ஊடாக நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கு ஏற்படும் நிதிச் சுமையை குறைத்து, விவசாய நடவடிக்கைகளுக்கு அத்தியாவசியமான மூலதனத்தை பெற விவசாயிகளுக்கு உதவுகிறது. மீள் கொள்வனவு உத்தரவாதம் (Buy-back guarantees), உற்பத்தித் தவணைக் கடன்கள், உபகரணக் கடன்கள் போன்ற முறைகள் மூலம் விவசாயத் தொழில்துறையை ஒரு நம்பகமான தொழிலாக மேற்கொள்வதற்கான நம்பிக்கையை விவசாயிகள் மத்தியில் ஏற்படுத்த முடியும்.” என்றார்.

DIMO Agribusinesses நிறுவனத்தின் நீண்ட தூரநோக்கின் ஒரு அங்கமாக, கல்வி மற்றும் திறன்வள மேம்பாட்டிலும் முதலீடு செய்ய நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள், தொழில்பயிற்சி நிறுவனங்களுடன் இணைந்து, ஒத்துழைப்பை ஏற்படுத்தி, விவசாயம் தொடர்பில் ஆர்வம் கொண்ட இளைஞர் யுவதிகளுக்கு நடைமுறை ரீதியான பயிற்சி, பயிலுனர் வாய்ப்புகள் (Internships), ஆராய்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளை வழங்க DIMO Agribusinesses நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் தொழில்நுட்ப அறிவுடனும், பிரயோக ரீதியான பயிற்சியுடனும் கூடிய சிறந்த விவசாய தொழில்முயற்சி படையணியை புதிய தலைமுறையினர் மத்தியில் உருவாக்கும் வாய்ப்பு உருவாகின்றது.

விவசாயத் தொழில்துறை தொடர்பான இந்த ஒன்றிணைந்த அணுகுமுறையின் மூலம், இலங்கையின் விவசாயத் துறைக்கு DIMO Agribusinesses புதிய அர்த்தத்தை ஏற்படுத்துகிறது. புத்தாக்க தொழில்நுட்பங்கள் மற்றும் நடைமுறைகளை ஊக்குவித்தல், சந்தை தொடர்புகளை வலுப்படுத்துதல், புதிய அறிவுடன் விவசாயிகளை வலுப்படுத்துவதன் மூலம், பாரம்பரிய விவசாயத்திற்கு அப்பாற்பட்ட விவசாய வணிகத்தை நோக்கி விவசாய சமூகத்தை வழிநடத்துவதில் DIMO Agribusinesses தனது மும்முரமான பங்களிப்பை வழங்குகின்றது. இதன் மூலம் கிராமிய சமூகங்களிடையே நிலையான சமூக மற்றும் பொருளாதாரத் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இது சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நீண்டகால சாதகமான தாக்கத்தை சமூகங்களிடையே உருவாக்கும்.