வித்தியார்த்த கல்லூரி ரக்பியுடன் கைகோர்த்த Swisstek

– சீருடை அறிமுகம் மூலம் புதிய அனுசரணை ஆரம்பம் ; பாடசாலை விளையாட்டுகளுக்கு புதிய உந்துசக்தி
கொழும்பில் இடம்பெற்ற ஜெர்சி (சீருடை) வெளியீட்டின் மூலம் Swisstek Ceylon PLC நிறுவனம், 2025 பருவத்திற்கான கண்டி வித்தியார்த்த கல்லூரியின் 1st XV ரக்பி அணியின் உத்தியோகபூர்வ அனுசரணையாளராக இணைந்துள்ளது. கட்டடத் துறையில் சீரமைப்பு, புனரமைப்பு, அழகுபடுத்தல் உள்ளிட்ட தரம் மிக்க பணிகளை முன்னெடுப்பத்தில் முன்னணி நிறுவனமாக விளங்கும் Swisstek, தனது சமூகப் பொறுப்பின் ஒரு அங்கமாக மாணவர்களுக்கும் விளையாட்டு வளர்ச்சிக்கும் துணை நின்று வருகிறது.
சுவிஸ்டெக் தனது தயாரிப்புகள் மற்றும் நடைமுறைகளில் தரம் மற்றும் தரநிலைகளுக்கு அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு நன்கு அறியப்பட்ட ஒரு வர்த்தகநாமமாகும். “For the Perfect Finish” எனும் குறிக்கோளை கொண்டுள்ள Swisstek, தமக்கு வெற்றியை கொண்டு வந்த சமூகத்திற்கு திருப்பித் தர வேண்டிய காலம் இது என நம்புகிறது. பரிபூரணத்திற்காக பாடுபடும் அதன் வர்த்தகநாமத்திற்கு உண்மையாக இருப்பதன் மூலம், சரியான சமுதாயம் ஒன்றை உருவாக்க, அடுத்த தலைமுறையை வழிநடத்த வேண்டும் என்பது Swisstek நிறுவனத்தின் நம்பிக்கையாகும். இக்கோட்பாட்டின் அடிப்படையில், விளையாட்டு என்பது ஒழுக்கம், சகிப்புத்தன்மை மற்றும் குழுப்பணி ஆகியவற்றைக்கொண்ட பிறழாத மனிதர்களை உருவாக்கும் மேடையாக கருதப்படுகிறது. இதன் மூலம் அவர்களை நன்கு முதிர்ச்சியடைந்த தனிநபர்களாகவும் எதிர்காலத் தலைவர்களாகவும் வடிவமைக்க முடியுமென நிறுவனம் கருதுகிறது.
Swisstek Ceylon PLC நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் உதவி முகாமையாளர், சித்திர கருணாதிலக இது பற்றித் தெரிவிக்கையில், “விசேடத்துவம், நேர்மை ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் நிறுவப்பட்ட ஒரு நிறுவனம் எனும் வகையில், நிறைவான பணியை வழங்குவதே எமது அடிப்படை நோக்கமாகும். ஆயினும் அதைவிட முக்கியமாக, நாங்கள் ஒரு வலிமையான சமுதாயத்தை உருவாக்கத் துணை நிற்க விரும்புகிறோம். வித்தியார்த்த கல்லூரி ரக்பி அணியுடன் இணையும் இந்த முயற்சியானது, அந்த எண்ணத்தின் இயற்கையான ஒரு தொடர் செயற்பாடாகும். வித்தியார்த்த கல்லூரி, தேசிய அளவிலான வீரர்களை உருவாக்கிய பெருமைக்குரிய விளையாட்டு பாரம்பரியத்தைக் கொண்ட கல்வி நிலையமாகும். இந்த ஒத்துழைப்பின் ஊடாக, நாம் விளையாட்டில் ஈடுபாடு கொண்டவர்களை ஊக்குவித்து, விடாமுயற்சி மற்றும் விளையாட்டுத் திறனைக் கொண்டாடுவதோடு, பொறுப்புடன் செயற்படும் எதிர்காலத் தலைமுயையினரான நாளைய தலைவர்களை உருவாக்க விரும்புகிறோம்.” என்றார்.

இந்த நிகழ்வில் ரக்பி மேம்பாட்டுச் சபையின் தலைவர் ரஞ்சித் வீரசிங்க உரையாற்றியபோது, “Swisstek போன்ற சிறந்த நிறுவனத்துடன் இணைவது எமக்கு பெருமை அளிக்கிறது. இது நம் அணியின் உற்சாகத்தையும், செயல்திறனையும் அதிகரிக்கும். இந்த ஒத்துழைப்பானது, வெறுமனே ஒரு அனுசரணைக்கு அப்பாற்பட்டதாகும். அது விளையாட்டு தளத்திலும் அதற்குப் வெளியிலும் ஒழுக்கமுள்ள மாணவர்களை உருவாக்கும் பொறுப்பை எடுத்துள்ள ஒரு முயற்சியாகும்.” என்றார்.
பாடசாலை விளையாட்டுகளுக்கான Swisstek கொண்டுள்ள அர்ப்பணிப்பானது, மூலோபாய கூட்டாண்மைகள் மூலம் அடுத்த தலைமுறையை ஊக்குவிக்கவும் மேம்படுத்தவுமான நீண்டகால திட்டத்தின் ஒரு அங்கமாகும். இம்முயற்சியானது, நிறுவனத்தின் பரந்த பார்வையின் முதல் படியாகும். அதாவது, ஒரு சிறந்த சமூகத்தை வடிவமைப்பது, நிறுவனத்தை அதன் துறையில் ஒரு தலைவராக மாற்றிய அதே பரிபூரணத்தையும், ஒருமைப்பாட்டின் தரநிலைகளில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு சிறந்த மற்றும் சரியான எதிர்காலத்தை உருவாக்குவதன் அர்த்தம் என்ன என்பதை நிறுவனம் எப்போதும் மீள்வரையறை செய்து வருகிறது. அதே நேரத்தில், தனது “For the Perfect Finish” எனும் வர்த்தகநாம வாக்குறுதியை தொடர்ந்து நிலைநாட்டும் முயற்சிக்கு எப்போதும் உண்மையாக செயற்படும்.
END