“வாழ்க்கை மிக ஃபன் ஆனது”: ஒரு கண்கவர் ஷொப்பிங் அனுபவத்திற்கான மகிழ்ச்சியைக் கொண்டுவரும் Miniso
உலகின் முன்னணி வாழ்க்கைமுறை பயன்பாட்டு பொருட்கள் விற்பனை வர்த்தகநாமங்களில் ஒன்றான Miniso, முன்னரை விட உங்கள் வாழ்க்கையை மிகவும் வசதியாகவும் மகிழ்ச்சியாகவும் மாற்றுவதற்கான அர்ப்பணிப்பில் உள்ளது. வாழ்க்கையைப் பற்றிய புத்துணர்ச்சியூட்டும் புதிய கண்ணோட்டத்துடன், இலங்கை வாடிக்கையாளர்களுக்கு இரு மடங்கு வேடிக்கை மற்றும் உற்சாகத்தை Miniso வழங்குகிறது. இலங்கையில் Miniso நிறுவனத்தின் முதன்மை உரிமையாளரான அபான்ஸ் நிறுவனம், நாடு முழுவதும் சிறந்த விஸ்தரிப்புத் திட்டத்துடன் அதனை மேம்படுத்தி வருகிறது. நாடளாவிய ரீதியில் ஏற்கனவே 10 இற்கும் மேற்பட்ட காட்சியறைகள் கொண்டுள்ள Miniso, தனித்துவமான ஷொப்பிங் அனுபவத்தை நுகர்வோருக்கு வழங்கும் புதிய திட்டத்துடன் அதன் செயற்பாட்டை இரட்டிப்பாக்குகிறது.
Miniso எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டது அல்ல, அது தரத்தை அடிப்படையிலானதாகும்! அதன் பரந்த தயாரிப்பு வகைகள் அனைவருக்கும், குறிப்பாக இளைஞர்களுக்கு, வசதி, பேஷன், தூய்மையான பொழுதுபோக்கு ஆகியவற்றின் கலவையை வழங்குகிறது. புதுமையான வீட்டுப் பொருட்கள் முதல் நவநாகரீக பேஷன் அணிகலன்கள் வரை, உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் மகிழ்ச்சியைச் சேர்க்க Miniso தயாராக உள்ளது. பொம்மைகள் மற்றும் வீட்டுப் பொருட்களுக்கு பிரபலமான Miniso, நீங்கள் ஒருமுறை பார்வையிட்டதும் பணம் செலுத்துவதைத் தடுக்க முடியாத விடயங்களுக்காக செல்ல வேண்டிய ஒரு இடமாக அறியப்படுகிறது.
அதில் மேற்கொள்ளப்பட்டுள்ள மறுசீரமைப்பு அம்சமானது, “வாழ்க்கை ஃபன் ஆனது” (“ஜீவிதே சோ ஃபன்!”) எனும் ஒரு புதிய எண்ணக்கருவின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது: அதன் உலகளாவிய கருப்பொருளான “Life is for Fun!” (வாழ்க்கை வேடிக்கைக்கானது) என்பதிலிருந்து இது உருவாக்கபட்டுள்ளது. எல்லோரும் தமது வாழ்க்கையில் மேலும் வேடிக்கையை விரும்புகிறார்கள் என்பதை Miniso அறிந்து வைத்துள்ளது. தங்களது கவர்ச்சிகரமான காட்சியறைகள் மற்றும் கவர்ச்சிகரமான தயாரிப்புத் தெரிவுகள் யாவும் உங்கள் முகத்தில் புன்னகையை வரவழைத்து, உங்கள் அன்றாட வாழ்வில் மாற்றத்தை சேர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒரு Miniso காட்சியறைக்குள் நுழைவதானது, பல வகையிலான வண்ணங்கள் நிறைந்த, அதிக வேடிக்கைகள் நிறைந்த ஒரு வித்தியாசமான உலகிற்குள் நுழைவது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றது.
Miniso முன்னெடுத்துள்ள மூலோபாய மேம்படுத்தலானது, உலகின் முன்னணி IP வடிவமைப்பு சில்லறை விற்பனைக் குழுவாக அதன் வர்த்ததகநாமத்தை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் இதுவரை சுமார் 100 புகழ்பெற்ற IP அனுமதிப்பத்திரதாரர்களுடன் ஒத்துழைப்பை முன்னெடுத்துள்ளது. குறிப்பாக Barbie, Care Bears, Mickey & Friends, Sanrio, Tom & Jerry உள்ளிட்ட பல்வேறு வர்த்தகநாமங்களுடன் Miniso கூட்டுச் சேர்ந்துள்ளதன் காரணமாக, இலங்கையிலுள்ள கொள்வனவாளர்கள் தங்களுக்குப் பிடித்தமான வர்த்தகநாம பொருட்களை மலிவு விலையில் கொள்வனவு செய்யக் கூடிய விற்பனை நிலையமாக Miniso மாறியுள்ளது. Harry Potter மற்றும் BT21 உடனான சமீபத்திய ஒத்துழைப்புகள் மூலம் Miniso மிகப் பாரிய இரசிகர் பட்டாளங்களை உருவாக்கியுள்ளதோடு, ஒரு அற்புதமான மற்றும் நாகரீகமான ஷொப்பிங் அனுபவத்தை” உறுதி செய்யும் இடமாக மாறியுள்ளது.
கட்டுப்படியான விலையில் உயர் தரத்திலான பொருட்களை விற்பனை செய்யும் Miniso, பதற்றமின்றி, மகிழ்ச்சியுடன் கொள்வனவு செய்தல் எனும் அதன் புதிய எண்ணக்கருவை வெளிப்படுத்தும் இடமாக அமைகிறது. மகிழ்ச்சியான மற்றும் உயர்தர வாழ்க்கை அனுபவங்கள் யாவும், அதிக செலவில்தான் வர வேண்டும் என அவசியமில்லை. அனைவரும் தங்களுக்கேற்ற கவர்ச்சிகரமான வடிவமைப்புகளுடனான, புத்தம் புதிய தொழில்நுட்ப பொருட்களை அணுகுவதன் மூலம் மகிழ்ச்சியை பெற உதவுவதிலும், பார்ப்பதற்கு அழகாகவும், பயன்படுத்த எளிதாகவும், வேடிக்கையாகவும் இருக்கும் தயாரிப்புகளை வெளியிடுவதில் Miniso ஆர்வமாக உள்ளது.
எனவே, நீங்கள் ஓய்வைக் களிக்க புதிய ஹெட்ஃபோன்களைத் தேடுகிறீர்களா, உங்கள் துணைக்கு அன்பளிப்பாக ஒரு பொம்மையை அல்லது உங்கள் தாய்க்கு சமையலறை தொகுதியொன்றை தேடுகிறீர்களா, அதற்கு நீங்கள் நாட வேண்டிய ஒரே இடம் Miniso ஆகும். சிறிய இன்பங்களில் மகிழ்ச்சியைக் கண்டறிவதே இப்புதிய மாற்றமாகும். இலங்கையில் உள்ள ஷொப்பிங் ஆர்வலர்கள் தற்போது Miniso வின் மகிழ்ச்சியை அனுபவிக்கவும், வாழ்க்கை எவ்வாறு வேடிக்கையாக இருக்கிறது என்பதைக் கண்டறியவும் தயாராகலாம்.