வங்கியின் முக்கிய உட்கட்டமைப்பில் புரட்சியை ஏற்படுத்த Huawei உடன் இணைந்த LB Finance PLC
இலங்கை மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளில் வங்கியல்லாத முதன்மையான நிதியியல் அதிகாரத்தைக் கொண்டுள்ள LB Finance PLC நிறுவனம், அதன் முக்கிய வங்கிக் கட்டமைப்பை மாற்றியமைப்பதற்காக Huawei உடனான கூட்டணியை அறிவித்துள்ளது. Huawei நிறுவனத்தின் அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, டிஜிட்டல் பணப்பை, டிஜிட்டல் வங்கி, கடன்கள், குத்தகை, சேமிப்பு மற்றும் வைப்பிடல், நுண்கடன்கள், கட்டண அட்டைகள் உள்ளிட்ட LB Finance இன் விரிவான சேவைகளின் தொகுப்பை மேம்படுத்தும் வகையில் இந்த மூலோபாய ஒத்துழைப்பு அமைந்துள்ளது.
இந்த திட்டத்தை ஆரம்பிக்கும் வகையில், LB Finance ஆனது Huawei இன் OceanStor Dorado 5000 All-Flash சேமிப்பக தொகுதிகளை ஒருங்கிணைத்துள்ளது. அதிவேக பரிவர்த்தனைகள், பாரிய அளவிலான தரவு செயலாக்கம் மற்றும் நிகழ்நேர கண்காணிப்பு ஆகியவற்றைக் கையாள இந்த அதிநவீன, cloud-ready தயார்நிலை தொகுதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், முக்கியமான தரவு செயற்பாடுகளின் ஒருங்கிணைவு மற்றும் செயல்திறன் உறுதி செய்யப்படுகின்றன.
இதன் ஒரு முக்கிய படியாக, Huawei OceanStor Dorado தொகுதியானது, 2023 நவம்பரில் LB Finance நிறுவனம் ஏற்கனவே கொண்டிருந்த சேமிப்பக உட்கட்டமைப்பை மூன்று வாரங்களுக்குள் மாற்றியமைகப்பட்டது. உச்ச பயன்பாட்டுத் தேவை கொண்ட காலப் பகுதியில் தங்கு தடையின்றி இந்த மாற்றம் மேற்கொள்ளப்படுகின்றது. இந்த தொகுதியானது செயற்பாட்டை ஆரம்பித்தது முதல், virtual servers, databases, application servers, development environments, and AI/BI tools போன்ற தனது தயாரிப்பு சேவைகள் மற்றும் தரவுகளை புதிய தளத்திற்கு LB Finance இடம் மாற்றியுள்ளது. இதன் மூலம், Input/Output Operations Per Second (IOPS) (செக்கனுக்கான உள்ளீடு/ வெளியீட்டு செயற்பாடு) ஆனது, செயல்திறன், நிலைப்புத்தன்மை, பதிலளிப்பு நேரம் ஆகியவற்றில் முக்கிய மேம்பாடுகள், செயற்பாட்டு அழுத்தங்களைக் குறைத்தல் மற்றும் வாடிக்கையாளர் திருப்தியை கணிசமாக அதிகரித்தல் ஆகியவற்றுடன் அசாதாரணமான பெறுபேறுகளை வெளிப்படுத்தியுள்ளது.
இந்த கூட்டாண்மையானது, டிஜிட்டல் மாற்றத்திற்கான LB Finance இன் அசைக்க முடியாத உறுதிப்பாட்டிற்கு ஒரு சான்றாகும். உயர்ந்த நிதிச் சேவைகளை வழங்குவதற்காக தனது தொழில்நுட்ப திறன்களை தொடர்ச்சியாக மேம்படுத்துவதற்கு நிறுவனம் உறுதி பூண்டுள்ளது. அதிநவீன தீர்வுகளை தழுவுவதன் மூலம், வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் துறையில் முன்னேறுவதை LB Finance நோக்கமாகக் கொண்டுள்ளது. தனது வாடிக்கையாளர்கள் நிதித் தொழில்நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்புகள் மூலம் பயனடைவதை இது உறுதி செய்கிறது.
இக்கூட்டாண்மை தொடர்பில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய LB Finance நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சுமித் ஆதிஹெட்டி, “ஒரு விரைவான மற்றும் வலுவான தீர்வை Huawei வழங்கியுள்ளது. இது வாடிக்கையாளர்களின் பரந்த அளவிலான தேவைகளை பூர்த்தி செய்வதோடு, நம்பகமான கூட்டாளராக அதன் நிலையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. அவர்களது ஒப்பிட முடியாத சேவையானது, எமது தரவு மையத்தின் நம்பகத்தன்மையை உறுதி செய்து, இக்கூட்டாண்மையில் எமது நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது. தேவைப்படும் பணிச்சுமைகளின் கீழ் உற்பத்தி மற்றும் இரண்டாம் நிலை சூழல்களில் அதன் செயல்திறனை வெளிப்படுத்தியதன் மூலம், எமது கடுமையான மதிப்பீடுகளைத் தொடர்ந்து, எமக்கான சிறந்த தெரிவாக Huawei தெரிவு செய்யப்பட்டது.
இந்த ஒத்துழைப்பு குறித்துக் குறிப்பிட்ட Huawei Sri Lanka நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி Zhang Jinze, “LB Finance நிறுவனத்தின் டிஜிட்டல் மாற்றப் பயணத்தில் பங்காளியாக இருப்பதில் Huawei மகிழ்ச்சி அடைகிறது. செயல்திறனை மேம்படுத்துதல் மற்றும் எதிர்கால வளர்ச்சியை ஆதரிக்கும் தீர்வுகளை வழங்குதல் ஆகியன தொடர்பான மமது அர்ப்பணிப்பை இந்த கூட்டாண்மை சுட்டிட்டுக் காட்டுகிறது. ஒன்றாக இணைந்து, முன்னோடியான டிஜிட்டல் தயாரிப்புகளை அறிமுகப்படுத்த LB Finance நிறுவனத்தை நாம் வலுவூட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
இலங்கையில் டிஜிட்டல் நிதிச் சேவைகளில் முன்னோடியாக காணப்படும் LB Finance தனது இறுதி இலக்கை அடைய Huawei உடனான டிஜிட்டல் பயணத்தைத் தொடர உறுதி பூண்டுள்ளது. புத்தாக்கம் மற்றும் விசேடத்துவத்திற்கான இந்த உறுதியான அர்ப்பணிப்பானது, தனது வாடிக்கையாளர்களுக்கு இணையற்ற மதிப்பை வழங்குவதன் மூலம் தொழிற்துறையில் தாம் முன்னணியில் இருப்பதை LB Finance உறுதி செய்கிறது.
இந்த ஒத்துழைப்பு குறித்துக் குறிப்பிட்ட Huawei Sri Lanka நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி Zhang Jinze, “LB Finance நிறுவனத்தின் டிஜிட்டல் மாற்றப் பயணத்தில் பங்காளியாக இருப்பதில் Huawei மகிழ்ச்சி அடைகிறது. செயல்திறனை மேம்படுத்துதல் மற்றும் எதிர்கால வளர்ச்சியை ஆதரிக்கும் தீர்வுகளை வழங்குதல் ஆகியன தொடர்பான மமது அர்ப்பணிப்பை இந்த கூட்டாண்மை சுட்டிட்டுக் காட்டுகிறது. ஒன்றாக இணைந்து, முன்னோடியான டிஜிட்டல் தயாரிப்புகளை அறிமுகப்படுத்த LB Finance நிறுவனத்திற்கு நாம் வலுவூட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
இலங்கையில் டிஜிட்டல் நிதிச் சேவைகளில் முன்னோடியாக காணப்படும் LB Finance தனது இறுதி இலக்கை அடைய Huawei உடனான டிஜிட்டல் பயணத்தைத் தொடர உறுதி பூண்டுள்ளது. புத்தாக்கம் மற்றும் விசேடத்துவத்திற்கான இந்த உறுதியான அர்ப்பணிப்பானது, தனது வாடிக்கையாளர்களுக்கு இணையற்ற மதிப்பை வழங்குவதன் மூலம் தொழிற்துறையில் தாம் முன்னணியில் இருப்பதை LB Finance உறுதி செய்கிறது.