யூனியன் அஷ்யூரன்ஸ் துறையில் முதலாவது ‘Blog It Symposium 2025’ நிகழ்வை முன்னெடுப்பு

இலங்கையின் முன்னணி தனியார் ஆயுள் காப்புறுதி சேவைகள் வழங்குனரான யூனியன் அஷ்யூரன்ஸ், ஆயுள் காப்புறுதித் துறையில் முதன் முறையாக ‘Blog It Symposium 2025’ நிகழ்வை பெருமையுடன் ஏற்பாடு செய்திருந்தது. பொது மக்கள் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், இலக்கியத் துறையில் புகழ்பெற்ற பலரும் கலந்து கொண்டனர். அதில், பிரதான பேச்சாளராக அசோக் பெர்ரி, புகழ்பெற்றவர்களான லால் மெதவத்தேகெதர, சிராந்தி ராஜபக்ச, தர்ம ஸ்ரீ காரியவசம், சாவித்ரி ரொட்ரிகோ மற்றும் பேராசிரியர் கோபாலப்பிள்ளை அமிர்தலிங்கம் ஆகியோர் அடங்கியிருந்தனர். இந்த நிகழ்வில் ஈடுபாட்டை கொண்டிருந்த பல அம்சங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதில், குழுநிலை கலந்துரையாடல் மற்றும் விசேடத்துவம் வாய்ந்த பயிற்சிப் பட்டறைகள் போன்றன அறிவு பகிர்வு மற்றும் அடுத்த தலைமுறை எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அடங்கியிருந்தன. மேலும், யூனியன் அஷ்யூரன்ஸ் Blog It 3.0 போட்டியின் வெற்றியாளர்களின் சாதனைகளை கௌரவிக்கும் வகையில் விருதுகள் வழங்கும் நிகழ்வும் இதில் அடங்கியிருந்தது.
பொது மக்கள் மத்தியில் தமது நிதிசார் எதிர்கால அறிவை மேம்படுத்தல் மற்றும் வலுவூட்டல் தொடர்பில் யூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ச்சியாக காண்பிக்கும் அர்ப்பணிப்பின் நீட்சியாக அமைந்துள்ள Blog It இன் அங்கமாக ‘Blog It Symposium 2025’ அமைந்திருந்தது. 2022 ஆம் ஆண்டில், ஆயுள் காப்புறுதி விழிப்புணர்வை மாதத்தை குறிக்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட்ட துறையின் முன்னோடித் திட்டத்தினூடாக, நிதிசார் அறிவு தொடர்பில் முக்கியமான உரையாடல்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. விசேடமாக நபர் ஒருவரின் நிதிசார் எதிர்காலத்தில் ஆயுள் காப்புறுதியின் முக்கிய பங்கு பற்றி Blog It ஊடாக தெளிவுபடுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. Blog It திட்டம் கடந்த காலங்களில் பெருமளவு வளர்ச்சியை பதிவு செய்திருந்ததுடன், இதற்காக சமர்ப்பிக்கப்பட்ட ஆக்கங்களின் எண்ணிக்கையிலும் உறுதியான அதிகரிப்பை அவதானிக்க முடிந்தது. 2022 ஆம் ஆண்டில் 500 க்கும் அதிகமான ஆக்கங்கள் கிடைத்திருந்த நிலையில், 2023 ஆம் ஆண்டில் 900 க்கும் அதிகமான ஆக்கங்கள் கிடைத்திருந்தன. இந்தப் பெறுமதி 2024 இல் 1100 க்கு அதிகமானதாக உயர்ந்திருந்தது. இந்த அதிகரிப்பினூடாக, நிதிசார் அறிவு மற்றும் அர்த்தமுள்ள கலந்துரையாடல்களில் பொது மக்களின் ஆர்வம் அதிகரித்துள்ளமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
பங்குபற்றுனர்களின் சிறந்த பங்களிப்புகளை கௌரவிக்கும் வகையில், வெற்றியாளர்களுக்கு பெறுமதி வாய்ந்த பரிசுகளை யூனியன் அஷ்யூரன்ஸ் வழங்கியிருந்ததுடன், தெரிவு செய்யப்பட்ட ஆக்கங்களை சமூக ஊடக கட்டமைப்புகளிலும், பத்திரிகைகளிலும் பிரசுரித்து அவர்களை மேலும் ஊக்குவித்த வண்ணமுள்ளது. சிறந்த திறமைகளை கொண்டாடுவதில் காண்பிக்கும் இந்த அர்ப்பணிப்பினூடாக, இலங்கையில் நிதிசார் விழிப்புணர்வு மற்றும் அறிவை மேம்படுத்தும் ஒரு பலம் வாய்ந்த நடவடிக்கையாக Blog It அமைந்துள்ளதாக குறிப்பிடலாம்.
யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி மஹேன் குணரட்ன கருத்துத் தெரிவிக்கையில், “யூனியன் அஷ்யூரன்ஸ் ‘Blog It Symposium 2025’ முன்னெடுப்பதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். நிதிசார் அறிவை மேம்படுத்தி, அனைவரின் முன்னேற்றத்தக்கும் வலுச்சேர்க்கும் எமது உறுதியான அர்ப்பணிப்பை இது வெளிப்படுத்துகிறது. ஒவ்வொரு வருடமும் கடக்கும் நிலையில், Blog It ஊடாக நிதிசார் அறிவு தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த உரையாடல்கள் கட்டியெழுப்பப்பட்டுள்ளதுடன், எழுத்தாளர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் இணைந்து, எமது சமூகத்தில் அர்த்தமுள்ள மாற்றத்தை முன்னெடுக்கக்கூடியதாக இருக்கும். இந்தப் பயணத்தை நாம் தொடர்கையில், நாடு முழுவதிலும் நிதிசார் அறிவை மேலும் மேம்படுத்தும் புதிய மற்றும் புத்தாக்கமான வழிமுறைகளை நாம் கண்டறிந்த வண்ணமுள்ளதுடன், தனிநபர்களுக்கு பாதுகாப்பான மற்றும் சுபீட்சமான எதிர்காலத்தை கட்டியெழுப்பிக் கொள்ள வலுவூட்டுகிறோம்.” என்றார்.
கொழும்புப் பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் மிகப்பெரிய கூட்டுநிறுவனமான, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்சின் (ஜேகேஎச்) அங்கத்துவ நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது. இது 7 வகையான பரந்துபட்ட தொழில் துறைகளில் 80இற்கும் அதிகமான நிறுவனங்களைக் கொண்டு இயங்குகின்றது. அதன் அங்கத்துவ நிறுவனமாகத் திகழ்ந்து, துறையில் மூன்று தசாப்த கால வெற்றிகரமான சேவையை யூனியன் அஷ்யூரன்ஸ் பூர்த்தி செய்துள்ளதுடன், 2024 டிசம்பர் மாத இறுதியில் சந்தை மூலதனவாக்கமாக ரூ. 36.5 பில்லியனையும், ஆயுள் நிதியமாக ரூ. 77.5 பில்லியனையும் கொண்டிருந்தது. இலங்கையர்களின் கனவுக்கு வலுச்சேர்க்கும் வகையில் இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், கல்வி, ஆரோக்கியம், பாதுகாப்பு, ஓய்வூதியம் மற்றும் முதலீடு போன்ற ஆயுள் காப்புறுதியுடன் தொடர்புடைய தீர்வுகளை இலங்கையர்ளுக்கு வழங்குகின்றது. நாடளாவிய ரீதியில் பரந்த கிளை வலையமைப்பினூடாக 4,300 க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டு இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், தொடர்ச்சியான தனது ஊழியர்கள், தீர்வுகள் மற்றும் செயன்முறைகள் போன்றவற்றில் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய முன்னேற்றங்களை மேற்கொள்ளும் வகையில் முதலீடுகளை மேற்கொண்ட வண்ணமுள்ளது.