பேண்தகு தீர்வுகள் மூலம் இலங்கையின் எதிர்காலத்தை உருமாற்றும் COMPLAST & RUBEXPO 2024
முழுமையான பிளாஸ்டிக் பொருட்கள் கண்காட்சி மற்றும் இறப்பர் எக்ஸ்போ (COMPLAST & RUBEXPO 2024) நிகழ்வானது ஓகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 1 ஆம் திகதி வரை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. SMART Expos & Fairs India Pvt Ltd மற்றும் இலங்கை பிளாஸ்டிக் மற்றும் இறப்பர் நிறுவகம் (PRISL) ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வுக்கு Industrial Development Board (IDB) ஆதரவு வழங்கியது. Shibaura Machine India, SDD Polymers, Lanka IOC, FMJ Plastics, Acteil Innovative மற்றும் NCS Holdings ஆகியன இந்நிகழ்வின் பிரதான அனுசரணையாளர்களாகும்.
மூன்று நாட்கள் இடம்பெற்ற இக் கண்காட்சியில், பிளாஸ்டிக், இறப்பர் மற்றும் பொதியிடல் உள்ளிட்ட துறைகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட தொழில் வல்லுநர்கள் மற்றும் 200க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த இரட்டைக் கண்காட்சிக்கு வருகை தந்திருந்தோர், பிளாஸ்டிக் மற்றும் இறப்பர் தொழிற்துறைகளின் நவீன தயாரிப்புகள், தொழில்நுட்பங்கள் மற்றும் புத்தாக்கங்கள் ஆகியவற்றை பார்வையிட்டதுடன், அதிநவீன தீர்வுகளின் பல்வேறு நேரடி விளக்கங்களையும் பெற்றுக் கொண்டனர்.
இந்த நிகழ்வுகள் நாட்டின் நீண்ட கால இலக்குகளான வட்டப் பொருளாதாரங்கள் மற்றும் பேண்தகு அபிவிருத்தி ஆகியவற்றுடன் பெரிதும் ஒத்திசையும் மீள்சுழற்சியில் கவனம் செலுத்துகின்றன.
சூழல் மீதான தாக்கத்தைக் கட்டுப்படுத்துதல், கழிவு முகாமைத்துவத்தை மேம்படுத்தல், வளங்களைப் பாதுகாத்தல், வேலைவாய்ப்பை உருவாக்குதல் மற்றும் சூழலுக்கு ஏற்ற தொழில்கள் மூலம் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல் உட்பட பல இலங்கைக்கான நன்மைகளை வட்டப் பொருளாதாரம் கொண்டுள்ளது. இது உலக அளவில் இலங்கையின் மதிப்பை உயர்த்த உதவுகின்றது.
COMPLAST & RUBEXPO 2024 கண்காட்சியானது, பங்கேற்பாளர்களுக்கு முதற்தர உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களிடமிருந்து தங்களின் சொந்த பிளாஸ்டிக் மற்றும் இறப்பர் தொழிற்சாலைகளை அமைப்பதற்கான முக்கிய ஆலோசனை மற்றும் அறிவூட்டல் உட்பட வளர்ச்சி மற்றும் பல்வகைப்படுத்துதலுக்கான இணையற்ற வாய்ப்புகளையும் வழங்கியது.
குறிப்பாக இலங்கையில் மீள்சுழற்சி செய்யும் சூழலில் பேண்தகைமையின் முக்கியத்துவத்தையும் இக் கண்காட்சிகள் வலியுறுத்தின. மேலும், கழிவுகளை குறைக்க உதவும் புத்தாக மீள்சுழற்சி தொழில்நுட்பம் மற்றும் அதன் மூலம் பெறக்கூடிய குறிப்பிடத்தக்க பொருளாதார நன்மைகள் தொடர்பில் பங்கேற்பாளர்கள் அறிந்து கொள்ள முடிந்தது.
இந்த நிகழ்வு தொடர்பில், Smart Expos India (Pvt) Ltd. இன் பிரதான நிறைவேற்று அதிகாரி பி. சுவாமிநாதன் கருத்து தெரிவிக்கையில்,“COMPLAST & RUBEXPO 2024 கண்காட்சிக்கு கிடைத்த வரவேற்பானது, இலங்கையில் பிளாஸ்டிக் மற்றும் இறப்பர் கைத்தொழில்களுக்கான தொடர்ந்து அதிகரித்து வரும் முக்கியத்துவத்திற்கான உண்மையான சான்றாகும். கண்காட்சியாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களின் ஆர்வத்தைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம். இந்த கண்காட்சிகள் புத்தாக்கம், ஒத்துழைப்பு மற்றும் வணிக வளர்ச்சிக்கான வழிகாட்டியாக திகழ்வதுடன், பிளாஸ்டிக் மற்றும் இறப்பர் தொழிற்துறைகளின்பயணத்தில் அவற்றுக்கு தொடர்ந்து ஆதரவளிக்க நாம் எதிர்பார்க்கின்றோம்,”என்றார்.
பங்கேற்பாளர்கள் சர்வதேச உற்பத்தியாளர்களுடன் தொடர்பை ஏற்படுத்தவும், அவர்களின் உள்நாட்டு பிரதிநிதிகளாக இருப்பதற்கான வாய்ப்புகளை ஆராய்வதற்கான வாய்ப்பும் கிடைத்தது. இக் கண்காட்சிகள் வழங்குநர்கள் மற்றும் விநியோகஸ்தர்களை ஒன்றிணைத்ததுடன், இது இறக்குமதி செய்யப்பட்ட மூலப்பொருட்கள், பூர்த்தி செய்யப்பட்ட மற்றும் பாதி பூர்த்தி செய்யப்பட்ட பொருட்களுக்கான அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்ய உதவுவதற்காக தயாரிப்பு வரிசைகளை விரிவாக்கவும் உதவியது. இதன்போது சில்லறை விற்பனையாளர்களும் சிறந்த பலன்களைப் பெற்றனர். அவர்கள் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட தயாரிப்புகளையும், உலகளாவிய பார்வையாளர்களுக்கு உன்னத தரம் மற்றும் புத்தாக்கங்களை காட்சிப்படுத்தியமை சிறப்பம்சமாகும்.