புத்தாக்கம், நம்பிக்கை மற்றும் தேசத்திற்கான சேவையின் 175 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் டெல்மெஜ்

புத்தாக்கம், நம்பிக்கை மற்றும் தேசத்திற்கான சேவையின் 175 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் டெல்மெஜ்

Off By Mic

இலங்கையின் நீடித்த, பல்துறை வணிகக் குழுமங்களில் ஒன்றான Delmege (டெல்மெஜ்), தனது வணிகப் பயணத்தின் 175ஆவது ஆண்டு நிறைவை பெருமையுடன் கொண்டாடுகிறது. 1850ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட டெல்மெஜ், தனது வர்த்தக பாரம்பரியத்திலிருந்து பல்துறை வல்லமை கொண்ட நிறுவனமாக வளர்ந்து, மக்களின் அன்றாட வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும் இடம்பிடிக்கும் நம்பகமான மற்றும் அர்த்தமுள்ள தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்கி வருகிறது.

நுகர்வோர் பொருட்கள் முதல் உள்ளக வடிவமைப்பு அம்சங்கள் வரை, சுகாதாரம் முதல் கப்பல் போக்குவரத்து வரை, காப்புறுதி முதல் சுற்றுலா வரை பல தலைமுறை உறுதிப்பாடு, புத்தாக்கம் மற்றும் தரமான சேவைக்கு பெயர் பெற்ற நிறுவனமாக டெல்மெஜ் இன்று திகழ்கிறது.

தனது தொழில்முனைவு நோக்கத்தை பேணியவாறு, தமது பல்வேறு வர்த்தகநாமங்களுடன் பல்வேறு மதிப்புமிக்க உலகளாவிய வர்த்தகநாமங்களை பிரதிநிதித்துவப்படுத்தியவாறு, தொடர்ச்சியாக அதிகரிக்கும் டெல்மெஜ் வர்த்தகநாமங்கள் மற்றும் பரந்த விரிவான சேவைகளுடன் தனது செயல்பாடுகளை நிறுவனம் விரிவுபடுத்தியுள்ளது.

நுகர்வு பொருட்கள்நாம் உத்தரவாதம் அளிக்கும் தரம்
ஒரு முன்னணி குழுமம் எனும் வகையில் Delmege Consumer நிறுவனம் இலங்கையிலுள்ள கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு நம்பகமான அத்தியாவசிய பொருட்களை தொடர்ச்சியாக வழங்கி வருகிறது. இதன் தயாரிப்பு வகைகளில் டெல்மெஜ் சோயா, ஹிரு கஹட்ட தேயிலை, ரின் மீன், டெலிசியா பாஸ்தா, நூடில்ஸ் மற்றும் மிகவும் பிரபலமான மோதா இனிப்பு வகைகள் உள்ளிட்ட குடும்பத்தினரின் பிரியமான பொருட்கள் உள்ளடங்குகின்றன. Kellogg’s மற்றும் Ferrero போன்ற உலகப் புகழ்பெற்ற வர்த்தகநாமங்களுடன், தரம், மலிவான விலை மற்றும் நாடு முழுவதும் அணுகக்கூடிய தன்மையை டெல்மெஜ் உறுதிப்படுத்துகிறது.

உள்ளக வடிவமைப்பு மற்றும் கட்டடத் தீர்வுகள்நாம் உருவாக்கும் கனவுகள்
Brinton Carpets, Interface, Quick Step, Gerflor, Hunter Douglas போன்ற உலகப் புகழ்பெற்ற வர்த்தகநாமங்கள் மூலம் வாழ்விடங்கள் மற்றும் பணியிடங்களை டெல்மெஜ் உள்ளக வடிவமைப்புத் தீர்வுகள் மாற்றியமைக்கிறது. அதே நேரத்தில், டெல்மெஜ் கட்டட நிர்மாணப் பொருட்கள் பிரிவானது, குடியிருப்பு மற்றும் வணிக மற்றும் முக்கியமான திட்டங்களுக்கான நிலைபேறான தன்மை கொண்ட மற்றும் நம்பகமான தீர்வுகளை வழங்குகிறது. இதில் மின்விளக்குகள் மற்றும் சுவிட்கள் முதல் குழாய்கள் மற்றும் அலுமினிய பெனல்கள் வரையான தயாரிப்புகள் உள்ளடங்குகின்றன.

உற்பத்திநாம் உறுதிப்படுத்தும் செயல்திறன்
குழுமத்தின் உற்பத்திப் பிரிவான Grip Delmege ஆனது வீடுகள், அலுவலகங்கள் மற்றும் ஏற்றுமதி பொருட்களுக்கான உயர்தர மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட தளபாடங்களை உற்பத்தி செய்து, முழுமையான உள்ளக வடிவமைப்பு மற்றும் நிர்மாணத் திட்டத்திற்கான தீர்வுகளை வழங்குகிறது. Warisandor Malaysia மற்றும் Hettich ஆகியவற்றுடன் ஏற்படுத்தப்பட்டுள்ள மூலோபாய கூட்டாண்மைகள் இதன் நிபுணத்துவத்தை வலுப்படுத்துகின்றன. இதன் மூலம் காலத்திற்கேற்ற ஸ்டைலான, நீடித்த மற்றும் நிலைபேறான தன்மை கொண்ட தீர்வுகளை நிறுவனம் உற்பத்தி செய்கின்றது.

சுகாதாரம்நாம் வழங்கும் குணப்படுத்தல்
Delmege Healthcare ஆனது, உலகத் தரமான மருத்துவ மற்றும் ஆய்வக உபகரணங்கள், அறுவை சிகிச்சைக் கருவிகள், நோயாளர் கண்காணிப்பு கட்டமைப்புகளை வழங்கி வருகிறது. இதன் சேவைகள், இதய நோய், புற்றுநோய் மற்றும் சிசு பராமரிப்பு போன்ற முக்கிய துறைகளுக்கு ஆதரவளிக்கின்றன. உலகளாவிய கூட்டாண்மைகள் மற்றும் உள்ளூர் நிபுணத்துவத்துடன், இலங்கையின் சுகாதார உட்கட்டமைப்பை வலுப்படுத்துவதில் நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கிறது.

வலுசக்திநாம் வழங்கும் சக்தி
Delmege Forsyth Energy, இலங்கையில் Shell Lubricants நிறுவனத்தின் பிரத்தியேக விநியோகஸ்தராக பெருமையுடன் செயற்படுகிறது. தொடர்ச்சியாக 18 வருடங்களாக உலகின் முன்னணி லூப்ரிகன்ட் நிறுவனமாக திகழும் Shell நிறுவனத்துடன் இணைந்து, இப்பிரிவானது நுகர்வோர், கைத்தொழில் துறை, வணிக மற்றும் கடல்சார் சந்தைகளில் செயல்திறன் சார்ந்த தீர்வுகளை வழங்குகிறது.

காப்புறுதிநாம் உறுதிப்படுத்தும் பாதுகாப்பு
Delmege Insurance Brokers, 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் IRCSL இனால் இலங்கையின் முதல் தர காப்புறுதி இடைத்தரகு நிறுவனமாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இது முழுமையான அபாய முகாமைத்துவ தீர்வுகளை வழங்குகிறது. மூன்று தசாப்தங்களுக்கும் மேலான அனுபவத்துடன், நிறுவனங்கள், சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறைகள் மற்றும் தனிநபர்களுக்கான தனிப்பயனாக்கப்பட்ட காப்புறுதித் திட்டங்களை அது வழங்கி வருகிறது. காப்புறுதி கோரல்களுக்கான சிறந்த ஆதரவு மற்றும் AON போன்ற வலுவான உலகளாவிய கூட்டாண்மைகள் போன்ற விடயங்கள் இதற்கு பின்புலமாக விளங்குகின்றன.

கப்பல் போக்குவரத்துநாம் பயணிக்கும் பெருங்கடல்கள்
Delmege Shipping நிறுவனமானது, கொள்கலன் சரக்குகள் மற்றும் திட்டங்களுக்கான சரக்குகள் முதல் களஞ்சிய வசதிகள், சுங்க அனுமதி மற்றும் சென்றடைய வேண்டிய இறுதி இடம் வரையான விநியோக வசதி வரை முழுமையான கடல் சேவைகளை வழங்குகிறது.

கொழும்பு, காலி, திருகோணமலை, அம்பாந்தோட்டையில் செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் டெல்மெஜ், தொழில்வாண்மை மற்றும் திறமையான சேவைக்காக புகழ் பெற்று விளங்குகின்றது. உலகளாவிய மற்றும் உள்நாட்டு கப்பல் கூட்டாளர்களுக்கான கப்பல் முகவர் சேவைகள், பணிக்குழு மாறல்கள், பழுதுபார்ப்பு மற்றும் உதிரிப்பாகங்கள் போன்றவற்றை துல்லியமாக கையாள்வதன் மூலம், தொடரான செயற்பாடுகளை உறுதிப்படுத்துகிறது.

பயணம் மற்றும் பொழுதுபோக்குநாம் உருவாக்கும் நினைவுகள்
Delair Travels மூலம், ‘Wonder Without Worry‘ (கவலையின்றி அதிசயம் காண்) எனும் வாக்குறுதியுடன் பயணங்கள் எளிதாக்கப்படுகின்றன. தனிப்பயனாக்கப்பட்ட குழுப் பயணங்கள் மற்றும் நிறுவனப் பயணங்கள் முதல் மிக நுணுக்கமாக தெரிவு செய்யப்பட்ட வெளிநாட்டு விடுமுறைகள் வரை, தனிப்பயனாக்கப்பட்ட சேவை மற்றும் உலகளாவிய கூட்டாண்மைகளுக்காக Delair புகழ்பெற்று விளங்குகிறது.

Delair இன் வீசா ஹவுஸ் ஆனது, நிபுணத்துவ வீசா சேவைகள் இதற்கு மேலதிக மதிப்பை சேர்க்கிறது. அதே நேரத்தில், இலங்கையின் செழுமையான கலாசாரம், சாகசம் மற்றும் விருந்தோம்பலை வெளிநாட்டு பயணிகளுக்கு வெளிப்படுத்தும் உள்ளக சுற்றுலா சேவைகளையும் நிறுவனம் வழங்குகிறது. ஒவ்வொரு பயணமும் சீரானதும், மறக்கமுடியாததும் ஊக்கமளிப்பவையாகவும் அமைகிறது.

நம்பிக்கையின் பாரம்பரியம், புத்தாக்கத்தின் எதிர்காலம்
இது குறித்து டெல்மெஜ் குழுமத்தின் தாய்நிறுவனமான Vallibel One குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் தினூஷா பாஸ்கரன் தெரிவிக்கையில், “175 ஆண்டுகளை கொண்டாடும் இவ்வேளையில், நம்பிக்கை, உறுதிப்பாடு மற்றும் சேவை ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும் வாய்ப்பு எமக்கு கிடைத்திருப்பதானது பெருமை அளிக்கிறது. இந்த முக்கிய சாதனையானது எமது கடந்த காலத்தைப் பற்றியது மட்டுமல்லாமல், நாம் உருவாக்கி வரும் எதிர்காலத்தையும் பற்றியதுமாகும். புத்தாக்கம், நிலைபேறான தன்மை மற்றும் எமது மக்கள் மற்றும் சமூகங்களுக்கு ஆழ்ந்த அர்ப்பணிப்புடன், மேலும் வலுப்பெற்று, இலங்கையின் முன்னேற்றத்திற்கு அர்த்தமுள்ள பங்களிப்பைத் தொடர்ச்சியாக வழங்க டெல்மெஜ் தயாராக உள்ளது.” என்றார்

டெல்மெஜ் நிறுவனம் அதன் 175ஆவது வருட நிறைவைக் கொண்டாடும் இந்நேரத்தில், தனது உறுதிப்பாடு, தழுவிக் கொள்ளும் திறன் மற்றும் சேவையின் பாரம்பரியத்தை மேம்படுத்துவதில் அர்ப்பணிப்புடன் தொடர்ந்தும் உள்ளது. புத்தாக்கம், நிலைபேறான தன்மை மற்றும் சமூக தாக்கத்தை மையப்படுத்தி, எதிர்காலத்தை நம்பிக்கையுடனும், இலங்கையின் வளர்ச்சி வரலாற்றை பல தலைமுறைகள் அனுபவிக்கும் வகையில் செயற்பட குழுமம் தொடர்ச்சியாக தயாராக உள்ளது.

Image Caption: இடமிருந்து வலம் – Delmege Forsyth பணிப்பாளர் அம்ரித் அதிஹெட்டி, Vallibel One முகாமைத்துவ பணிப்பாளர் தினூஷா பாஸ்கரன், டெல்மெஜ் குழும பிரதம நிதி அலுவலர் புபுது டி அல்விஸ் ஆகியோரை படத்தில் காணலாம்.