புதிய Baling தளத்தில் முதலீடு செய்வதன் மூலம் பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பை துரிதப்படுத்தும் Hemas Consumer Brands

2024 ஓகஸ்ட் xx, கொழும்பு: வேகமாக நுகரப்படும் பாவனையாளர் பொருட்கள் துறையில் முன்னோடியாக விளங்கும் சுற்றாடல் நிலைபேறான தன்மையில் ஆர்வமுள்ள Hemas Consumer Brands, எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாப்பான, மாசடைவுகள் அற்ற நாளைய தினத்திற்காக பிளாஸ்டிக் வெளியீட்டை குறைப்பதற்கான முயற்சிகளை துரிதப்படுத்துகின்றது. 2030ஆம் ஆண்டளவில் 100% முழுமையான பிளாஸ்டிக் சேகரிப்பு மற்றும் மீள்சுழற்சியை அடைவதற்கான தனது பயணத்தில், இலங்கையின் மிகப்பெரிய பிளாஸ்டிக் மீள்சுழற்சி நிறுவனமான Eco Spindles (Pvt) Ltd. உடன் ஒரு முக்கிய பங்காளித்துவத்தை ஏற்படுத்தியுள்ள Hemas Consumer Brands நிறுவனம், காலியில் Baling தளத்தில் முதலீடு செய்கிறது. இது எதிர்வரும் 3 வருடங்களுக்குள் 360,000 கிலோகிராம் (360 மெட்ரிக் தொன்) பிளாஸ்டிக்கை சேகரிக்கும் இலக்கைக் கொண்டுள்ளது. பொறுப்பு வாய்ந்த நுகர்வு நடைமுறைகள், சூழலைப் பாதுகாத்தல், இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் Hemas குழுமத்தின் 2030 ஆம் ஆண்டை நோக்கிய சூழல் தொடர்பான நிகழ்ச்சி நிரலுக்கமைய, சமூகம், சூழல், ஆளுகை (ESG) சார்ந்த பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வதில் Hemas Consumer Brands முன்னணியில் இருந்து வருகின்றது.

பிளாஸ்டிக் கழிவுகளை குறைப்பதற்கான புதிய திட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த Hemas Consumer Brands சந்தைப்படுத்தல் பணிப்பாளர் ஷியான் ஜயவீர, “நிலைபேறாண்மையை ஆழமாக கவனத்தில் கொண்ட ஒரு நிறுவனம் எனும் வகையில், சேகரிப்பு மற்றும் மீள்சுழற்சி முயற்சிகள் மூலம், பிளாஸ்டிக் பொதிகளை சூழலிருந்து விரைவாகக் குறைப்பதற்கான வழிகளை நாம் தொடர்ச்சியாக ஆராய்ந்து வருகிறோம். அந்த வகையில் இலங்கையின் மிகப்பெரும் மீள்சுழற்சி பங்குதாரரான Eco Spindles (Pvt) Ltd நிறுவனத்துடன் இணைந்து ஒரு Baling தளத்தை நிறுவுவதன் மூலம் காலியில் பாரிய அளவிலான பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்துவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். பொதியிடல்களை சேகரித்து மீள்சுழற்சி செய்வதற்கான மீள்சுழற்சி கட்டமைப்பில் முதலீடு செய்வதற்கான எமது ஆர்வமானது, எமது தயாரிப்புகளின் பொதியிடல்களின் சூழல் தாக்கத்தைத் குறைப்பதற்கும் நிலைபேறான தன்மைக்கான எமது அர்ப்பணிப்பை நிரூபிப்பதையும் எடுத்துக் காட்டுகிறது,” என்றார்.

பொதியிடலில் பிளாஸ்டிக் பயன்பாட்டை 30% ஆக குறைக்கவும், உற்பத்தியின் போது உருவாகும் பிளாஸ்டிக் கழிவுகளை 100% முழுமையாக சேகரித்து மீள்சுழற்சி செய்வதை 2030 ஆம் ஆண்டுக்குள் அடைவதற்குமான இலக்கை நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை எளிதாக அடையும் வகையில், Hemas Consumer Brands கடந்த காலத்தில் Eco Spindles நிறுவனத்துடன் இணைந்து, பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்தல், செயலாக்கம் செய்தல், மீள்சுழற்சி செய்தல் ஆகியவற்றுக்கான ஒரு அதிநவீன Material Recovery Facility (MRF) தொழிற்சாலையை நிறுவியது. இது நிலைபேறான கழிவு முகாமைத்துவ நடைமுறைகளுக்கு பாரிய அளவில் பங்களிக்கிறது.

John Keells Holdings நிறுவனத்தின் பிளாஸ்டிக் மீள்சுழற்சி திட்டத்துடன் ஒரு முக்கிய பங்காளித்துவத்தின் மூலம் இணைந்து, கொழும்பிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் 30 சேகரிப்பு நிலையங்களை Hemas Consumer Brands நிறுவியது. இது பிளாஸ்டிக் மீள்சுழற்சியை ஊக்குவிப்பதோடு, ஒரு வட்டப் பொருளாதார மாதிரியைத் தழுவியது. அது மாத்திரமன்றி, Cleantech உடன் இணைந்து, பல்வேறு நிகழ்வுகளின் போது சேகரிக்கப்படுகின்ற மற்றும் நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள சேகரிப்பு மையங்களில் சேரும் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்க நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. அது மாத்திரமன்றி, Clean Ocean Force உடனான  கூட்டுறவு மூலம் நீர்கொழும்பு களப்பை சுத்தப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தமை மற்றுமொரு முன்மாதிரியான திட்டமாகும்.

Hemas Consumer Brands தனது செயற்பாடுகள் முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அதன் கீழுள்ள வர்த்தகநாமங்கள் தமது தயாரிப்புகளில் பிளாஸ்டிக்கைக் குறைக்கின்றன. குமாரிகா வர்த்தகநாமம் சமீபத்தில் அதன் பொதியிடல் மூலப்பொருட்களிலான பிளாஸ்டிக்கை 20% ஆகக் குறைத்தது. அந்த வகையில், ஏனைய வர்த்தகநாமங்கள் இதை பின்பற்றுவதற்கான பாதையை நிறுவனம் அமைத்துள்ளது.

பொறுப்பான நுகர்வு நடைமுறைகளில் கவனம் செலுத்துவதன் மூலம் நிலைபேறான தன்மை மற்றும் சூழல் பொறுப்புணர்வு ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை நிறுவனம் மேற்கொண்டுள்ளது. Wildlife and Nature Protection Society (WNPS) அமைப்புடன் இணைந்து, ஆனைவிழுந்தான் சதுப்புநில மீளுருவாக்க முயற்சிகளை முன்னெடுத்துள்ள நிறுவனம், கடலோர வாழ்விடங்களைப் பாதுகாப்பதற்கும் கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாப்பதற்கும், 2024 ஆம் ஆண்டிற்கான பெறுமதி வாய்ந்த ஐ.நா. பத்தாண்டு மறுசீரமைப்பு முதன்மை விருதைப் பெற்றுள்ளது. அத்துடன், இயற்கை வாழ்விடங்கள் மற்றும் உயிர்ப்பல்வகைமையை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, காடழிப்பை எதிர்த்துப் போராடுவதற்கும், நிலைபேறான நில முகாமைத்துவ நடைமுறைகளை மேம்படுத்துவதற்குமான முயற்சிகளை Hemas Consumer Brands முன்னெடுத்துள்ளது.

Hemas Consumer Brands நிறுவனம் உற்பத்தி செய்யும் தயாரிப்புகள் மற்றும் அதன் பெருநிறுவன பொறுப்பு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேம்படுத்துவதன் மூலம், சூழல் பாதிப்பைத் குறைப்பதோடு மட்டுமல்லாமல், நிலைபேறான தன்மையை ஒரு அடிப்படை விடயமாக ஏற்றுக்கொள்ள ஏனையோரை ஊக்குவிக்கிறது. அத்துடன் அனைத்து பங்குதாரர்களுக்கும் பிரகாசமான, நிலைபேறான எதிர்காலத்திற்கு வழி வகுக்கிறது.

Hemas Consumer Brands நிறுவனம் உற்பத்தி செய்யும் தயாரிப்புகள் மற்றும் அதன் பெருநிறுவன பொறுப்பு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேம்படுத்துவதன் மூலம், சூழல் பாதிப்பைத் குறைப்பதோடு மட்டுமல்லாமல், நிலைபேறான தன்மையை ஒரு அடிப்படை விடயமாக ஏற்றுக்கொள்ள ஏனையோரை ஊக்குவிக்கிறது. அத்துடன் அனைத்து பங்குதாரர்களுக்கும் பிரகாசமான, நிலைபேறான எதிர்காலத்திற்கு வழி வகுக்கிறது.

புகைப்பட தலைப்பு

இலங்கையின் மிகப்பெரிய பிளாஸ்டிக் மீள்சுழற்சி நிறுவனமான Eco Spindles உடன் கைகோர்த்துள்ள Hemas Consumer Brands நிறுவனம், காலியில் Baling தளத்தில் முதலீடு செய்கிறது. (இடமிருந்து வலமாக) இசுறு நிலேஷ் – அதிகாரி – Sourcing – Eco Spindles, நிசன்சலா டீ கொஸ்டா – நிலைபேறாண்மை மற்றும் திட்ட முகாமைத்துவ செயலதிகாரி – Eco Spindles, திலீப சில்வா – தலைவர்-Sourcing – Eco Spindles, பிரசாந்த மாலிம்படகே – பிரதான நிறைவேற்று அதிகாரி – Eco Spindles, ஷியான் ஜயவீர – சந்தைப்படுத்தல் பணிப்பாளர் – Hemas Consumer Brands, மிந்திக்கா திலகரத்ன – குழும நிலைபேறாண்மை மற்றும் விசேட திட்டங்களுக்கான சிரேஷ்ட முகாமையாளர் – Hemas Holdings PLC, அனுஷ்கா சபாநாயகம் – வர்த்தகநாம நோக்கம் மற்றும் பெருநிறுவன விவகார  பிரிவு முகாமையாளர் – Hemas Consumer Brands.

Hemas Consumer Brands பற்றி

கடந்த 60 வருடங்களாக வீடு மற்றும் தனிநபர் பராமரிப்புத் தயாரிப்புகளின் இலங்கையின் முன்னணி உற்பத்தியாளராக திகழும் Hemas Consumer Brands நிறுவனம், குடும்பங்கள் சிறந்த நாளைய தினத்தை அனுபவிப்பதற்காக வலுவூட்டுவதில் கவனம் செலுத்துகிறது. இலங்கையில் நம்பகமான வீட்டுப் பெயர் வர்த்தக நாமமாக தங்களை நிறுவ உதவிய நுகர்வோரை மையமாகக் கொண்ட முன்மொழிவுகளில் புத்தாக்கத்தை ஏற்படுத்தவும், மேம்படுத்தவும் உள்ளூர் தகவல் தரவுகளைப் பயன்படுத்துவதில் நிறுவனம் பெருமை கொள்கிறது. இலங்கையின் நுகர்வோர் பற்றிய ஆழமான புரிதல் மற்றும் அதன் தயாரிப்புகளில் உயர் தரம் மற்றும் பெறுமதியை வழங்குவதற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பினால் உந்தப்பட்டுள்ள Hemas Consumer Brands, நாடு முழுவதும் உள்ள சமூகங்களின் வாழ்க்கையை தொடர்ச்சியாக வளப்படுத்துகிறது.