புகைப் பிடித்தலில், ஒப்பீட்டளவில் ஆபத்தைக் குறைக்கும் வாய்ப்புள்ளமாற்று வழிமுறைகளை ஆராய்தல்
ஆவி முறையில் புகைப் பிடித்தலை (vaping) கொடூரமான ஒன்றாக உருவகப்படுத்தி, பிரதான மற்றும் சமூக ஊடகங்களில் அண்மைக்காலமாக அது ஒரு புதிய பேசுபொருளாக மாறியுள்ளது. பெரும்பாலான செய்தி வெளிப்பாடுகளில் போதிய நுணுக்கமான ஆராய்வோ, விழிப்புணர்வோ அல்லது துல்லியமோ கிடையாது என்பதுடன், ஆவி முறையில் புகைப் பிடித்தலுக்கு எதிராக முழுமையாக கண்டனத்தை வெளிப்படுத்துவதைத் தவிர, இது குறித்த உண்மைகளை ஆராய்ந்து அவை எவ்வகையிலும் கருத்துக்களை வெளியிடுவதில்லை. முற்றிலும் புகைப்பிடிக்காத ஒருவர் ஆவி முறையில் புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் கைக்கொள்ளும் போது ஆரோக்கியரீதியான சில அக்கறைகள் இருப்பினும் கூட, ஏற்கனவே புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் கொண்டவர்களை எடுத்துக்கொண்டால் இது மிகவும் சிக்கலான விடயமாகக் காணப்படுகின்றது.
ஒரு விடயத்தை பரப்பும் போது அவ்விடயத்தின் துல்லியத்தன்மையுடன் அது விளக்கப்பட வேண்டியது மிகவும் முக்கியமாகும். அத்துடன், எத்தரப்பினரை இலக்காகக் கொண்டு அது பரப்பப்படுகின்றது என்பதையும் தெளிவாக மனதில் கொள்ள வேண்டும். அந்த வகையில் புகையிலையை உள்ளடக்கிய ஆவி முறையில் புகைப் பிடித்தலுக்கும், புகையிலையைக் கொண்டிராத ஆவி முறை புகைப் பிடித்தலுக்கும் இடையிலுள்ள தனித்துவமான வேறுபாட்டை அடையாளம் காண்பது மிகவும் முக்கியமானது. உண்மையில், சிகரெட்டில் காணப்படும் ஆபத்தான பதார்த்தங்களில் பெரும்பாலானவை ஆவி முறை புகைப் பிடித்தலில் கிடையாது. ஏற்கனவே புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவர்களை இலக்காகக் கொண்ட செயற்பாட்டுக்கும், புகைப்பழக்கம் இல்லாதவர்களை இலக்காகக் கொண்ட செயற்பாட்டுக்கும் இடையில் காணப்படும் தனித்துவமான வேறுபாட்டை தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். ஆவி முறை புகைப் பிடித்தலின் பயன்கள் மற்றும் விளைவுகள் குறித்து விவாதிக்கும் போது, இந்த தயாரிப்பு எப்பேற்பட்டது மற்றும் எவரை இலக்காகக் கொண்டது என்பதிலேயே அனைத்தும் தங்கியுள்ளன. புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களை ஆவி முறை புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைக்கொள்வதை ஊக்குவிப்பதை விடுத்து, ஏற்கனவே புகைப் பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களை “புகையிலை அல்லாத” மாற்று நிக்கொட்டின் மூலமாக, ஆபத்தைக் குறைத்து, முழுமையாக இந்த பழக்கத்திற்கு மாறிக்கொள்வதை ஊக்குவிப்பதே இதன் பிரதான நோக்கம்.
உலகெங்கிலும் சுமார் 1.25 பேர் புகைப் பிடிக்கும் பழக்கம் கொண்டவர்களாக உள்ளனர் என உலக சுகாதார ஸ்தாபனம் கணித்துள்ளது. ‘புகைப் பிடிப்பவர்களின்’ எண்ணிக்கையைக் கருதுகையில், உலகில் சனத்தொகை கூடிய நாடுகளில் மூன்றாவது ஸ்தானத்திலுள்ள நாட்டிற்கு ஈடானது என்று கூற முடியும். இவர்களில் பலரும் சிகரெட்டுக்களுடன் ஒப்பிடுகையில், ஆபத்தைக் குறைக்கும் புகை வடிவமல்லாத தயாரிப்புக்களுக்கு மாறும் வழிமுறைகளை ஆராய்ந்து வருகின்றனர். எனினும் இதற்கான வழிமுறைகள் கைக்கெட்டும் வரை அவர்கள் அதனை ஆராய்வதற்கு தயக்கம் காட்டுவது தவிர்க்க முடியாதது.
அனுமானம்
ஒரு அனுமானமான சூழ்நிலையைக் கருத்தில் கொள்வோம். A என்பவர் புகைப் பிடிக்கும் பழக்கம் அற்றவர் என்றும், B என்பவர் புகைப் பிடிக்கும் பழக்கம் கொண்டவர் என்றும் வைத்துக்கொள்வோம். அவர்களின் உடல் ஆரோக்கியம் குறித்த மதிப்பீடு ஒன்றை மேற்கொண்டு, அவர்களுடைய வாழ்க்கைமுறை தெரிவுகளின் அடிப்படையில் நீண்ட கால உடல் ஆரோக்கிய நிலைமையை ஒரு எளிமையான, அனுமானத்தில் அடிப்படையில் உற்றுநோக்குவோம். A என்பவரின் உடல் ஆரோக்கிய மதிப்பீடு 9/10 எனவும், B என்பவரின் மதிப்பீடு 5/10 எனவும் கற்பனை செய்வோம். B என்பவர் வழக்கமாக புகைப் பிடிக்கும் பழக்கம் கொண்டவர் என்பதே அவரது மதிப்பீட்டில் பெருமளவு செல்வாக்குச் செலுத்தியுள்ளது.
B என்பவர் புகைப் பிடிக்கும் பழக்கத்தை அறவே விட முடியாத ஒரு சூழ்நிலை இருப்பின், இதற்கு மிகச் சிறந்த தெரிவாக ஆவி முறை புகைப் பிடிக்கும் தீர்வு அமையுமா என்ற கேள்வி எழுகின்றது. ஆவி முறை புகைப் பிடிக்கும் தயாரிப்புக்களுக்கு மாறிக் கொள்வதன் மூலமாக B என்பவரின் உடல் ஆரோக்கிய மதிப்பீடு 5/10 இலிருந்து 7/10 க்கு மேம்படும் சாத்தியம் காணப்படில், ஆவி முறை புகைப் பிடிக்கும் பழக்கத்தை ஒட்டுமொத்தமாக கண்டனம் செய்வது சரியாகுமா? இந்த சந்தர்ப்பத்தில், புகைப் பிடிக்கும் பழக்கத்திலிருந்து ஆவி முறை புகைப் பிடிக்கும் பழக்கத்திற்கு மாறுவதால் B ன் உடல் ஆரோக்கிய நிலைமை உண்மையாகவே மேம்படக்கூடும். ஆகவே, ஆவி முறை புகைப் பிடித்தல் என்பது முற்றிலும் ஆபத்து அற்றதாக இல்லாவிட்டாலும் கூட, ஆபத்தைக் குறைக்கும் கருவியாக பயன்படுத்தும் அதன் சாத்தியத்தை புறந்தள்ளி விடக்கூடாது.
உவமான விளக்கம்
புகையிலையை உள்ளிழுப்பது எமது நுரையீரலுக்கு தீங்கு விளைவிப்பதைப் போலவே, காபன் வெளியேற்றமும் எமது சூழலுக்கு தீங்கு விளைவிக்கின்றது என்ற உண்மையைக் கவனியுங்கள். எரிபொருள் தகன முறையைக் கொண்ட வாகனங்கள் சூழலை மிகவும் பாதிக்கின்றது என்பதுடன், சிறிதளவு ஆபத்தை ஏற்படுத்தும் அல்லது ஆபத்தை எவ்விதத்திலும் ஏற்படுத்தாத, மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டுக்கு மாறிக் கொள்வது சிறந்த வழிமுறையாகக் காணப்படுகின்றது. இதற்கிடையில், எரிபொருள் தகன செயற்பாடுகள் சிலவற்றுடன் தொடர்புபட்ட கலப்பு முறை வாகனங்கள் இந்த வரிசையில் அவை இரண்டிற்கும் நடுவில் காணப்படுகின்றன.
எமது செயற்பாடுகள் மூலமான காபன் வெளியீட்டினால் சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை அளவிடின், மின்சாரத்தில் இயங்கும் வாகனமொன்றை உபயோகிக்கும் ஒருவர், கலப்பு முறை வாகனமொன்றுக்கு மாறும் போது, காபன் வெளியீடு அதிகரிக்கின்றது. ஆகவே மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களைப் பாவிப்பவர்கள் மத்தியில் கலப்பு முறை வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பது சூழலின் தூய்மைக்கு நன்மை பயக்காது. எனினும் எரிபொருள் தகன முறை வாகனத்தைப் பயன்படுத்தும் ஒருவர், ஏதோவொரு காரணத்திற்காக மின்சாரத்தில் இயங்கும் வாகனத்தைப் பயன்படுத்துவதற்கு பின்னிற்கும் சந்தர்ப்பத்தில், கலப்பு முறை வாகனத்தைப் பயன்படுத்துமாறு அவரை ஊக்குவிப்பது சூழ்நிலைக்கேற்ற சிறந்ததொரு தீர்வாகும். இது அவர் மூலமான காபன் வெளியீட்டை நிச்சயமாகக் குறைக்கும்.
முடிவு
நோய், அங்கவீனம் அல்லது அகால மரணம் காரணமாக இழக்க நேரிடுகின்ற மொத்த ஆண்டுகளை அங்கவீனத்தை கருத்தில் கொண்டு சீரமைக்கப்படும் ஆயுட் கால முறைமை (Disability-Adjusted Life Years – DALY) அளவிடுகிறது. மரணத்தை விளைவிக்கின்ற மற்றும் விளைவிக்காத தாக்கங்களை இணைத்து, சனத்தொகை மீது நோய் ஒன்று ஏற்படுத்தக்கூடிய சுமையை சுகாதார வல்லுனர்கள் மதிப்பீடு செய்கின்ற ஒரு வழியாக இது காணப்படுகின்றது. எனினும் துரதிர்ஷ்டவசமாக, ஆவி முறை புகைப் பிடித்தலுடன் தொடர்புபட்ட DALY கணிப்பீடுகள் இன்னமும் ஆராயப்பட்டு வருகின்ற ஒரு சூழ்நிலையில், புகைப் பிடித்தலுடன் ஒப்பிடுகையில், இது ஆபத்தைக் கணிசமான அளவில் குறைக்கின்றது என்பதை கிடைக்கப்பெறும் மிகச் சிறந்த விஞ்ஞான மதிப்பீடுகள் வெளிப்படுத்துகின்றன. உதாரணத்திற்கு, ஐக்கிய இராச்சியத்தில் இங்கிலாந்து பொதுச் சுகாதாரத் துறையானது 2015 மற்றும் 2018ம் ஆண்டு ஆய்வுகளின் புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ளதுடன், புகைப் பிடிப்பதை விடவும், ஆவி முறையில் புகைப் பிடிப்பது ஆபத்தை 95% ஆல் குறைக்க வாய்ப்புள்ளதாக முடிவுக்கு வந்துள்ளது. இந்த மதிப்பீடு, ஐக்கிய இராச்சியத்தின் ஆபத்து குறைப்பு அணுகுமுறையின் அடிப்படையில் பிரதான மேற்கொள்ளப்பட்டு, வெளியிடப்பட்டுள்ளது.
ஆவி முறையில் புகைப் பிடிப்பது ஆபத்தற்றது என கூறி விட முடியாது. எனினும் உலகளாவிலுள்ள 1.25 பில்லியன் புகைப் பிடிப்பவர்கள் மத்தியில் நீங்களும் ஒருவராக இருப்பின், நீங்கள் புகைப் பிடிப்பதை தொடர்ந்து மேற்கொள்ள விரும்பாவிடின், உங்களுடைய மற்றும் சுகாதாரத் துறை கட்டமைப்பின் ஆபத்தைக் குறைப்பதற்கு சட்டதிட்டங்களுக்குட்பட்ட ஆவி முறை புகைப்பிடிக்கும் தயாரிப்புக்களுக்கு மாறிக் கொள்வது உதவக்கூடும். புகைப் பிடிப்பதால் இழந்து போன ஆயுட்காலத்தை மீட்டுக்கொள்வதற்கு இது வழிவகுக்கக்கூடும். இதன் பின்னணியில், புகைப் பிடிப்பதை குறைக்க வேண்டும் என்பதே இறுதி நோக்கமாகக் காணப்பட்டால், ஆவி முறைப் புகைப் பிடித்தலை கண்மூத்தனமாக சித்தரிப்பது பகுத்தறிவற்ற ஒரு செயல். இது தொடர்பில் ஊக்குவிக்கப்படுகின்ற தயாரிப்பு சட்டதிட்டங்களுக்கு உட்பட்டதாகவும், அது ஏற்கனவே புகைப் பிடிக்கும் பழக்கம் கொண்டவர்களை இலக்கு வைத்து ஊக்குவிப்படுவதாகவும் இருப்பின், ஆபத்தைக் கணிசமான அளவில் குறைக்கின்ற ‘கலப்பு’ தீர்வாக ஆவி முறையில் புகைப் பிடித்தல் அமையக்கூடும்.