நெல்லியடி மற்றும் மானிப்பாய் ஆகிய இடங்களில் புதிய கிளைகளுடன் மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் தனது அடிச்சுவட்டை விரிவுபடுத்தியுள்ளது
இலங்கையின் வட பிராந்தியத்திற்கு சேவைகளை வழங்கும் தனது அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், தனது 70வது மற்றும் 71வது கிளைகளை நெல்லியடி மற்றும் மானிப்பாய் ஆகிய இடங்களில் திறந்து வைத்துள்ளமை குறித்து மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனம் பெருமையுடன் அறிவித்துள்ளது. நெல்லியடி, மானிப்பாய் மற்றும் அவற்றை அண்டிய பிரதேசங்களில் வசிப்பவர்களுக்கு நன்மையளிக்கும் வகையில், அணுகக்கூடிய, நம்பகமான நிதிச் சேவைகளை அங்குள்ள உள்ளூர் சமூகங்களுக்கு கிடைக்கச் செய்யும் நோக்குடன் இந்த மூலோபாய விரிவாக்க நடவடிக்கை அமைந்துள்ளது. மிகவும் விமரிசையாக இடம்பெற்ற இக்கிளைகளின் திறப்பு விழாவில் மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் பிரதம செயற்பாட்டு அதிகாரி லக்சந்த குணவர்த்தன அவர்களும், நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திலிருந்து சிரேஷ்ட முகாமைத்துவ அதிகாரிகளும், உள்ளூர் பிரமுகர்களும் மற்றும் பிராந்திய வாடிக்கையாளர் சேவை அதிகாரிகளும் கலந்து சிறப்பித்துள்ளனர். முழுமையான சேவைகளை வழங்கும் இந்த இரு புதிய கிளைகளும், பிராந்தியத்தில் வசிப்பவர்களின் பல்வேறுபட்ட தேவைகளுக்கு உதவும் வகையில் பல்வகைப்பட்ட நிதித் தீர்வுகளை வழங்குகின்றன. இலங்கை எங்கிலும் தனது கிளை வலையமைப்பை துரிதமாக அதிகரிக்க வேண்டும் என்ற அதன் மூலோபாய குறிக்கோளின் ஒரு அங்கமாக வட மாகாணத்தில் மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தின் தற்போதைய விரிவாக்க நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது. அனைவரையும் உள்ளடக்கி, அனைத்து கலாச்சார, சமய மற்றும் சமூக பின்னணிகளைச் சார்ந்த சமூகங்களுக்கும் உதவுவதில் இந்நிறுவனம் அர்ப்பணிப்புடன் உள்ளது.
163, புதிய சந்தைத் தொகுதி, பருத்தித்துறை வீதி என்ற முகவரியில் அமைந்துள்ள நெல்லியடி கிளையின் முகாமையாளராக செல்வராசா டிலக்ஷன் அவர்கள் கடமையாற்றுவதுடன், 176, யாழ் வீதியில் அமைந்துள்ள மானிப்பாய் கிளையின் முகாமையாளராக குமாரசாமி கபிலன் அவர்களும் கடமையாற்றுவதுடன், அவர்களுக்கு இருவருக்கும் துணையாக அவர்களுடைய அணிகளும் சேவைகளை வழங்குவர். நம்பிக்கை, ஸ்திரத்தன்மை மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட அணுகுமுறை ஆகியவற்றுடன் கட்டியெழுப்பப்பட்டுள்ள நன்மதிப்புடன், தனது வர்த்தகநாமத்தின் மீதான நம்பிக்கையை ஊக்குவிப்பதே நிறுவனத்தின் நோக்கமாக உள்ளதுடன், இப்பிராந்தியத்தின் அபிவிருத்தியில் தனது நீண்ட கால அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தியுள்ளது.
இப்புதிய கிளைகளைத் திறந்து வைத்துள்ளதன் மூலமாக, பல்வேறு துறைகளையும் சார்ந்த வாடிக்கையாளர்கள், குத்தகை, தங்கக் கடன்கள், நிலையான வைப்புக்கள் மற்றும் சிறுவர் சேமிப்புக்கள் உள்ளிட்ட உயர் தர நிதித் சேவைக்கான மகத்தான அணுகலைக் கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நீண்ட வெற்றி வரலாற்றைக் கொண்டுள்ள மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ், புத்தாக்கமான மற்றும் தனிப்பயனாக்கம் செய்யப்பட்ட நிதித் தீர்வுகளை வழங்குவதில் தொடர்ந்தும் முன்னிலை வகித்து வருகின்றது. சமூகங்களின் அபிவிருத்தி அதன் வணிக அணுகுமுறையின் மையமாக உள்ளதுடன், இப்புதிய கிளைகள் உள்ளூர் வணிகங்கள் மற்றும் தனிநபர்களுக்கு நேரடிப் பயன்களை வழங்கும்.
இந்நிறுவனம் நாடெங்கிலும் தனது பிரசன்னத்தை வலுப்படுத்தி வரும் நிலையில், ஒவ்வொரு கிளையிலும் மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் வழங்கும் சௌகரியமான, அணுகக்கூடிய மற்றும் தனிப்பயனாக்கம் செய்யப்பட்ட சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு வாடிக்கையாளர்கள் ஊக்குவிக்கப்படுகின்றார்கள். சமூகத்தில் அனைத்து மட்டங்களையும் சார்ந்த வாடிக்கையாளர்களுக்கு உயர் மட்ட நிதித் சேவைகளை வழங்குவதில் நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை இந்த விரிவாக்கம் அடிக்கோடிட்டுக் காண்பிக்கின்றது.