நாளைய தலைவர்களுக்கு வாய்ப்புகளைத் திறக்கும் EDEX Mid-Year Expo 2025

இலங்கையின் முன்னணி கல்வி மற்றும் தொழில் வாய்ப்புக் கண்காட்சியான EDEX Mid-Year Expo 2025, எதிர்வரும் செப்டெம்பர் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் கொழும்பு BMICH வளாகத்தில் நடைபெறவுள்ளது. மாணவர்கள், வேலை தேடுபவர்கள், துறைசார் நிபுணர்களுக்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச கல்விப் பாதைகள் மற்றும் தொழில் வாய்ப்புகளை ஆராயும் வாய்ப்பை இந்தக் கண்காட்சி வழங்குகிறது.
இவ்வாண்டு சுமார் 50 முன்னணி கல்வி நிறுவனங்கள், 10 நிறுவனங்கள் மற்றும் துபாய் மற்றும் இந்தோனேசியாவிலிருந்து நேரடி சர்வதேச பங்கேற்பாளர்கள் இக்கண்காட்சியில் பங்கேற்கின்றனர். இதன் மூலம் இலங்கை மற்றும் வெளிநாடுகளில் உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை நாடுவோருக்கு விரிவான வாய்ப்புகளை இக்கண்காட்சி வழங்குகிறது. இலங்கை இளைஞர்களை உலகளாவிய ரீதியில் போட்டித் தன்மையுடன் இருப்பதற்கு ஊக்குவிக்கவும், வலுவூட்டவுமான EDEX இன் தொடர்ச்சியான நோக்கத்தை இந்தக் கண்காட்சி முழுமைப்படுத்துகிறது.
இது தொடர்பில் EDEX தலைவர் மஹிந்த கலகெதர தெரிவிக்கையில், “தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருக்கும் உலகில், இளைஞர்கள் வெற்றி பெறத் தேவையான அறிவு, திறன்கள் மற்றும் வாய்ப்புகளை வழங்குவதிலேயே எப்போதும் எமது கவனம் உள்ளது. EDEX Mid-Year Expo கண்காட்சியானது கல்வி மற்றும் தொழிலுக்கான தளம் மட்டுமல்ல, அது உலகளாவிய போட்டித் திறனை நோக்கிச் செல்லும் பாலமாகும்.” என்றார்.
கல்வியைக் கடந்து, EDEX இன் நிறுவன சமூக பொறுப்பு (CSR) திட்டமான EDEX 365, செப்டெம்பர் 05 ஆம் திகதி “சிறந்த கல்விக்காக சிறந்த உடல்நலன்” எனும் கருப்பொருளின் கீழ் விசேட நிகழ்வொன்றை கெக்கிராவையில் நடத்துகிறது. இதில் கற்றலுக்கான அடிப்படை அம்சமான உடல்நலனின் முக்கியத்துவத்தை உணர்ந்து, 28 பாடசாலைகளில் தரம் 1 மாணவர்கள் 1,000 பேருக்கு காது கேட்கும் திறன் சோதனையை மேற்கொள்ள உள்ளது.
இந்த திட்டத்தில் EDEX குழுவுடன், 10 தகுதி வாய்ந்த மருத்துவர்கள் இணைந்து இந்த சோதனைகளை முன்னெடுக்கின்றனர். இத்திட்டமானது, கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு, இரத்மலானை கேள்வித் திறன் மையம் (Ratmalana Audiology Center) மற்றும் K20 Society அமைப்பு ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கேள்வித் திறன் பிரச்சினை காரணமாக எந்தவொரு மாணவரும் கைவிடப்படக் கூடாது எனும் நோக்குடன், இரத்மலானை கேள்வித் திறன் மையமானது நவீன டிஜிட்டல் உபகரணங்களைப் பயன்படுத்தி, அடையாளம் காணப்படும் மாணவர்களை மேலும் பரிசோதித்து, பின்தங்கிய மாணவர்களுக்கு கேட்டல் கருவிகளை வழங்க உள்ளது.
EDEX Mid-Year Expo 2025 திட்டத் தலைவர் சதுஷிக நிஸ்ஸங்க இது குறித்து குறிப்பிடுகையில், “இந்த திட்டமானது, கல்வி தொடர்பான பெரும்பாலான கவனிக்கப்படாத தடைகளை நீக்கி, இளைஞர்களை ஊக்குவிப்பதற்கான எமது அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. மிகவும் அவசியமான சந்தர்ப்பங்களில் நீண்ட தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக EDEX இன் வளங்களை நாம் இங்கு முதலீடு செய்கிறோம்.” என்றார்.
இவ்வாண்டின் கண்காட்சியானது, தொழில் தயார்நிலை (Career Readiness) மீது வலுவான கவனத்தை செலுத்துகிறது. EDEX Careers மூலமாக வழங்கப்படும் Career Key மனநிலைப்பரிசோதனை (Psychometric Test) மூலம், இளைஞர்கள் தங்களின் திறன்கள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ற தொழில் பாதைகளை அடையாளம் காண முடியும். அது மாத்திரமன்றி, துபாய், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் கல்வி வாய்ப்புகளை ஆராயவும், கண்காட்சியில் பங்கேற்கும் நிறுவனங்களிடமிருந்து எதிர்கால வேலை வாய்ப்புகள் மற்றும் உலகளாவிய திறன் போக்குகள் குறித்து மதிப்புமிக்க தகவல்களை பார்வையாளர்களால் பெற முடியும். கல்வியும் தொழிலும் ஒரே தளத்தில் வழிகாட்டலுடன் கிடைக்கும் இந்த நிகழ்வானது, இலங்கை இளைஞர்களை உலகளாவிய போட்டியாளர்களாக உருவாக்கத் தேவையான கருவிகளை வழங்கி தயார்படுத்துகிறது.
இரண்டாவது முறையாக EDEX Mid-Year Expo 2025 இற்காக, International Student Identity Card (ISIC) உடன் EDEX இணைந்துள்ளது. UNESCO அங்கீகாரம் பெற்ற ISIC உலகளாவிய ரீதியில் உள்ள ஒரேயொரு சர்வதேச மாணவர் அடையாள அட்டையாகும். இது உங்கள் மாணவர் அந்தஸ்தை நிரூபிக்கவும், 98 இற்கும் மேற்பட்ட நாடுகளில் 150,000 இற்கும் அதிகமான சலுகைகளைப் பெறவும் உதவுகிறது. இலங்கையில் Pizza Hut, Taco Bell, Dinemore, Baskin-Robbins உள்ளிட்ட பிரபல வர்த்தகநாமங்களில் 10% தள்ளுபடி உள்ளிட்ட சலுகைகளை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம். பார்வையாளர்கள் ISIC குறித்த தகவல்களுக்கு அவர்களின் காட்சிக் கூடங்களைப் பார்வையிடுமாறு ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
இந்த நிகழ்வானது பிரதமர் அலுவலகம், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சு, இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சு, தொழில் அமைச்சு, சுற்றாடல் அமைச்சு ஆகியவற்றின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. இது இதன் தேசிய முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. அத்துடன், Ceylon Employers Federation, Ceylon Chamber of Commerce, Ceylon Careers Guidance Association போன்ற மூலோபாய கூட்டாளர்களின் இணைவானது, இந்நிகழ்வின் தாக்கத்தையும் அதன் விரிவாக்கத்தையும் அதிகரித்துள்ளது.
இந்தக் கண்காட்சியின் பிளாட்டினம் அனுசரணையாளர்களாக APIIT மற்றும் Mogo Media Academy, கோல்ட் அனுசரணையாளராக CINEC Campus ஆகியன இணைந்துள்ளன. காப்புறுதி கூட்டாளராக Allianz Insurance Lanka Ltd, உத்தியோகபூர்வ தாகம் தணிக்கும் கூட்டாளராக American Water, மக்கள் தொடர்பு கூட்டாளராக PR Wire ஆகியன இணைந்துள்ளன.
இந்நிகழ்வில், “Your Writer by Nazran Baba” சேவையும் இடம்பெறுகிறது. இதன் மூலம் இந்நிகழ்வு மேலும் சிறப்பை பெறுகின்றது. தொழில்முறை LinkedIn பயனர் கணக்குகள், தொழில் விண்ணப்ப கடிதங்கள் (cover letters) மற்றும் சுயவிபர கோவைகள் (resumes) உருவாக்குவதில் விசேடத்தும் கொண்ட இந்த சேவையானது, மாணவர்களுக்கும் தொழில்முறை நிபுணர்களுக்கும் தங்கள் திறமைகள் மற்றும் சாதனைகளை வெளிப்படுத்தி, தாம் விரும்பும் தொழிலை அடைய உதவுகிறது.
இக்கண்காட்சி கொழும்பில், செப்டெம்பர் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில், மு.ப. 9.30 மணி முதல் பி.ப. 6.00 மணி வரை, பொதுமக்கள் பார்வைக்காக திறந்திருக்கும். கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டலுக்கான ஒப்பிட முடியாத வாய்ப்புகளை வழங்கும் EDEX Mid-Year Expo 2025 ஆனது, இலங்கை இளைஞர்களை உலகளாவிய ரீதியில் போட்டியிட வலுவூட்டுகிறது.
உங்கள் எதிர்காலத்தை உருவாக்கும் இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள். EDEX Mid-Year Expo 2025 இல் பங்குபற்றுவதன் மூலம், மாற்றத்தின் ஒரு பங்காளராக மாறுங்கள்.
இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு: EDEX Secretariat – 011 3091086 / 076 8204975
END