நவீன Sedan அனுபவத்தை மீள்வரையறை செய்து புதிய Almera வாகனத்தை இலங்கையில் அறிமுகப்படுத்தும் Nissan

நவீன Sedan அனுபவத்தை மீள்வரையறை செய்து புதிய Almera வாகனத்தை இலங்கையில் அறிமுகப்படுத்தும் Nissan

Off By Mic

இலங்கையில் Nissan வாகனங்களுக்கான ஒரேயொரு அங்கீகாரம் பெற்ற விநியோகஸ்தரான Associated Motorways (Private) Limited (AMW), கொழும்பு யூனியன் பிளேஸில் உள்ள Nissan காட்சியறையில் இடம்பெற்ற விசேட நிகழ்வின் போது புதிய Nissan Almera வாகனங்களை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியது. இந்நிகழ்வு, வாடிக்கையாளர்கள், AMW இன் சிரேஷ்ட முகாமைத்துவக் குழுவினர், நிசான் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பல்வேறு தரப்பினரின் பங்கேற்புடன் நடைபெற்றது. இந்த புதிய மாதிரிகள் சந்தையின் பெரும் எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய வாகன செலுத்துனர்களின் மாறிவரும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள Nissan Almera ஆனது, Nissan Intelligent Mobility அம்சங்கள், உயர்தர வசதிகள், மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் சிறந்த எரிபொருள் வினைத்திறன் ஆகியவற்றை ஒன்றிணைத்து ஒரு நவீன செடான் வாகனமாக உள்ளூர் சந்தையில் பிரவேசிக்கிறது. AMW நிறுவனத்தினால் VE Turbo CVT மற்றும் VL Turbo CVT ஆகிய தரங்களில் (Grades) வழங்கப்படும் Almera, நீண்டகால மதிப்பையும் நவீனத்துவத்தையும் எதிர்பார்க்கின்ற நகர்ப்புற இளம் தொழில் வல்லுநர்கள், நிறைவேற்று அதிகாரிகள் மற்றும் குடும்பங்களுக்கு மிகவும் பொருத்தமானதாக அமையவுள்ளது.

“விரும்பிய வேகத்தில்” பயணித்தல்

Nissan வர்த்தகநாமத்தின் பிரத்தியேகமான HRA0 1.0 litre turbo அம்சமானது, வாகனம் ஒன்றை முந்திச் செல்லும் போது சாரதிகளுக்கு உரிய செயற்பாட்டுத் திறனுடன், துரிதமான செயல்திறன் மற்றும் நம்பிக்கையை  உறுதி செய்கிறது. இந்த எஞ்சின் உச்சபட்சமாக 100 குதிரைவலு (Ps) மற்றும் 152 Nm முறுக்குவிசையை (torque) உருவாக்குகிறது. இது வேகமான மற்றும் உறுதியான வேக அதிகரிப்பை வழங்குகிறது. Nissan Almera அறிமுகப்படுத்தப்பட்டது முதல், “உங்களுக்குத் தேவையான அனைத்தும், உங்களுக்கு விருப்பமான வேகத்தில்” எனும் விசேடத்துவத்திற்காக சந்தையில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அத்துடன், பயன்படுத்தாத வேளைகளில் எரிபொருளை சேமிக்க உதவும் வகையில், எஞ்சினை தானாகவே நிறுத்துகின்ற ‘Idling Stop’ வசதியும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

Quole Modure ஆசனங்கள் மற்றும் intelligent key வசதியுடன் “உங்களுக்கு தேவையான அனைத்தும்” உள்ளடக்கம்

வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், VE Turbo CVT மற்றும் VL Turbo CVT தரங்களில் உயர்தர ‘Quole Modure’ ஆசனங்களை Nissan அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நவீன ஆசனம் வடிவமைக்கப்பட்டுள்ள மூலப்பொருளானது, வெப்பத்தை வினைத்திறனாக கையள்வதன் மூலம், நீண்ட பயணங்களின் போதும் சாரதி மற்றும் பயணிகளுக்கு உச்ச வசதியை உறுதி செய்கிறது. இதனுடன், கார் கதவுகளைத் தானாகவே பூட்டவும் திறக்கவும் உதவும் ‘Intelligent Key’ வசதியானது இரண்டு வாகன வகைகளிலும் சேர்க்கப்பட்டுள்ளது. இது அன்றாட பயன்பாட்டின் பாதுகாப்பையும் வசதியையும் அதிகரிக்கிறது.

நவீன வாழ்க்கை முறைக்கு ஏற்ற பல வசதிகள் Nissan Almera வாகனத்தில் உள்ளன. விசாலமான உட்புறம், கால் வைப்பதற்கான போதிய இடைவெளி, பொதிகளை வைப்பதற்கான சீரான இடவசதி (trunk layout), வாகன கட்டுப்பாட்டு அம்சங்கள் (cruise control), வயர்லெஸ் சார்ஜர் மற்றும் 8 அங்குல தொடுதிரையுடனான மேம்பட்ட தகவல் பொழுதுபோக்கு கட்டமைப்பு (infotainment system) ஆகியன இதில் உள்ளடங்கும். இதிலுள்ள Android Auto மற்றும் Apple CarPlay வசதிகள் மூலம் ஸ்மார்ட்போன்களை எளிதாக இணைக்க முடியும்.

வெளிப்புறத் தோற்றத்தைப் பொறுத்தவரை, Nissan இன் கம்பீரமான ‘V-Motion’ grille, புதிய Nissan இலச்சினை மற்றும் நவீனத்துவத்தை வெளிப்படுத்தும் உடலின் வடிவமைப்பு ஆகியவற்றை Almera கொண்டுள்ளது. உட்புறத்தில், sporty நீல நிறத்திலான அலங்காரங்கள் மற்றும் கதவு பெனல்களில் உள்ள நீல நிற வேலைப்பாடுகள் ஒரு நவீன சூழலை உருவாக்குகின்றன. அத்துடன், நீண்ட தூரப் பயணங்களின் போது ஏற்படும் உடல் சோர்வைக் குறைக்கும் வகையில் 14 புள்ளிகளிலான உடலுக்கு ஆதாரத்தை வழங்கும் Nissan இன் புகழ்பெற்ற Zero Gravity முன் ஆசனங்களும் இதில் பொருத்தப்பட்டுள்ளன.

சிறந்த தொழில்நுட்பம் மற்றும் முழுமையான 360° பாதுகாப்பு கவசம்

பாதுகாப்பு என்பது Nissan Almera வாகனத்தின் முக்கிய தூணாகும். டயரின் காற்றழுத்தத்தைக் கண்காணிக்கும் முறைமை (TPMS), High Beam Assist மற்றும் Lane Departure Warning போன்ற சிறப்பம்சங்கள் இதில் உள்ளன. Nissan வாகனத்தின் 360° Safety Shield தொழில்நுட்பமானது, Intelligent Around View Monitor, Intelligent Forward Collision Warning (மோதல் எச்சரிக்கை), கண்ணுக்கு எட்டாத இடங்களை கண்காணிக்கும் Blind Spot Warning போன்ற பல்வேறு பாதுகாப்பு வசதிகளை வழங்குகிறது. அத்துடன், 6 SRS பாதுகாப்பு காற்றுப்பைகள், ABS, EBD மற்றும் Vehicle Dynamic Control (VDC) போன்ற முழுமையான பாதுகாப்பு அம்சங்கள் ஆகியன அதன் அனைத்து வகைகளிலும் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த அறிமுக நிகழ்வில் AMW குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ஜவஹர் கணேஷ் கருத்துத் தெரிவிக்கையில், “புதிய Nissan Almera தற்கால இலங்கை வாடிக்கையாளர்கள் உண்மையாகவே எதிர்பார்க்கும் வினைத்திறன், பாதுகாப்பு, வசதி மற்றும் புத்திசாலித்தனமான வடிவமைப்பு ஆகியவற்றை கருத்திற்கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. Nissan வர்த்தகநாமத்தின் உலகளாவிய நிபுணத்துவம் மற்றும் Al-Futtaim குழுமத்தின் தலைமைத்துவத்துடன், தொடர்ச்சியாக உலகத்தரம் வாய்ந்த போக்குவரத்து தீர்வுகளை AMW இலங்கைக்கு கொண்டு வருகிறது.” என்றார்.

இது குறித்து, Nissan Motor Corporation நிறுவனத்தின் தெற்காசிய வணிகப் பிரிவின் பணிப்பாளர் அதுல் அகர்வால் தெரிவிக்கையில்: “அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான AMW ஊடாக Nissan Almera வாகனத்தை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மன நிறைவு ஏற்படுகின்றது. காரணம் இவ்வாகனத்திற்காக 3 வருடங்கள் அல்லது 100,000 கி.மீ. உத்தரவாதம், Nissan அசல் உதிரிப்பாகங்கள் மற்றும் பயிற்சி பெற்ற தொழில்நுட்ப வல்லுநர்களின் சேவையை நாடு தழுவிய ரீதியில் வாடிக்கையாளர்களால் பெற்றுக்கொள்ள முடியும். எமது Nissan Magnite போலவே இந்த புதிய Almera மாதிரியும் இலங்கை வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என நாம் நம்புகிறோம்.” என்றார்.

அது மாத்திரமன்றி, வாடிக்கையாளர்கள் மையப்படுத்திய, தமக்கு ஏற்ற நெகிழ்வுத்தன்மை கொண்ட நிதி வசதிகளையும் AMW Capital Leasing ஊடாக வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

புதிய Nissan Almera அதன் வகையின் அடிப்படையில், தற்போது monotone (ஒற்றை வர்ண) two-tone (இரட்டை வர்ண) நிறங்களில் கிடைப்பதோடு, உடனடியாகக் கொள்வனவு செய்யும் வகையில், வாகனங்களின்  தொகுதிகளும் உள்ளன.

புத்தம் புதிய Almera வாகனத்தின் அனுபவத்தை பெறவும், இலங்கையின் நவீன வாழ்க்கை முறைக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு ஸ்மார்ட்டான, மிகவும் புதிய அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்ட செடான் குறித்து அறியவும், அருகிலுள்ள நிசான் காட்சியறைக்கு வருகை தருமாறு வாடிக்கையாளர்கள் அழைக்கப்படுகிறார்கள்.

Associated Motorways (Private) Ltd. பற்றி

Associated Motorways (Private) Ltd. நிறுவனமானது 1950 இல் தனது செயற்பாடுகளை ஆரம்பித்ததோடு, 1957 முதல் ஜப்பானிலுள்ள Nissan தொழிற்சாலையிலிருந்து வாகனங்களை இறக்குமதி செய்ததன் மூலம் Nissan நிறுவனத்துடன் இணைந்து செயற்பட்டு வருகிறது. மேலதிக விபரங்களுக்கு www.nissanlk.com எனும் இணையதளத்தைப் பார்வையிடவும்.

Photo Caption:

இடமிருந்து வலமாக: Nissan நிறுவனத்தின் தெற்காசிய வர்த்தகப் பிரிவின் தலைவர் திரு. ரகுநாத் நாயர், AMW நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. ஜவஹர் கணேஷ் மற்றும் AMW நிறுவனத்தின் விற்பனைப் பணிப்பாளர் திரு. பிரசன்ன டி சில்வா ஆகியோர் கொழும்பு, யூனியன் பிளேஸில் அமைந்துள்ள Nissan காட்சியறையில் இடம்பெற்ற புத்தம் புதிய Nissan Almera உத்தியோகபூர்வ அறிமுக நிகழ்வில் கலந்துகொண்டபோது.