தெற்காசியாவின் புத்தாக்கங்களை வலுவூட்டும் நோக்கில் 1 மில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான நிதியுதவி மற்றும் பிராந்திய விரிவாக்கத்துடன் மீண்டும் ஆரம்பமாகும் ‘Hatch இன் First Capital Startup Nation’
இலங்கையின் மிகப்பெரிய வணிக தொடக்கங்களுக்கான கட்டமைப்பின் (Startup Ecosystem) முன்னணி அமைப்பான ‘Hatch’, தமது முதலாவது திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இலங்கையின் மூலதனச் சந்தையில் முக்கிய பங்கு வகிக்கும் JXG (ஜனசக்தி குழுமம்) நிறுவனத்தின் துணை நிறுவனமான First Capital Holdings PLC நிறுவனத்துடன் இணைந்து, ‘First Capital Startup Nation 2026’ எனும் புதிய பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. பிராந்திய விரிவுபடுத்தலுடனான நோக்கத்துடன் மீள ஆரம்பமாகியுள்ள இந்த திட்டமானது, தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்கும் இலங்கையின் புத்தாக்க சூழல் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும் இரு நிறுவனங்களுக்கும் இடையே நிலவும் நீண்டகால கூட்டாண்மையை மேலும் உறுதிப்படுத்துகிறது.
தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக நடத்தப்படும் இந்த திட்டமானது, முதன்முறையாக இலங்கையின் எல்லைகளுக்கு அப்பால் தொடுகின்ற ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது. இலங்கையின் தொழில்முனைவோரை மேம்படுத்துவதில் உறுதியாகச் செயற்படும் அதே வேளையில், Hatch வழங்கும் First Capital Startup Nation திட்டமானது, தெற்காசியா முழுவதிலுமிருந்தும் வணிக தொடக்கங்கள், முதலீட்டாளர்கள், வழிகாட்டிகள் (mentors) மற்றும் தொழில்துறை தலைவர்களை ஒன்றிணைத்து, அறிவுப் பகிர்வு, கூட்டுழைப்பு, வளர்ச்சி ஆகியவற்றிற்கான ஒரு மாறுபட்ட பிராந்திய தளத்தை உருவாக்குகிறது.
இந்த விரிவுபடுத்தப்பட்ட திட்டமானது ஏற்கனவே பிராந்திய ரீதியாக பெரும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளதுடன், இலங்கை, இந்தியா, நேபாளம், பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து 250 இற்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை ஈர்த்துள்ளது. இதில் பங்கேற்கும் பிராந்தியத்தை கட்டமைக்கும் பங்காளர்களாக இந்தியாவின் Founder Startup House (முன்னர் Draper Startup House என அழைக்கப்பட்டது), நேபாளத்தின் Pool Technologies, பங்களாதேஷின் Turtle Venture ஆகிய நிறுவனங்கள் இணைந்துள்ளமை அதிகரித்து வரும் இத்திட்டத்தின் பிராந்திய முக்கியத்துவத்தையும் ஈர்ப்பையும் பிரதிபலிக்கிறது.
இலங்கையின் மூலதனச் சந்தைத் துறையில் ஒரு முக்கிய பங்குதாரராக விளங்கும் First Capital நிறுவனம், தமது நிபுணத்துவத்தை பாரம்பரிய நிதிச் சேவைகளுக்கு அப்பால் விரிவுபடுத்துவதன் மூலம் நாட்டின் தொழில்முனைவுச் சூழலுக்கு தொடர்ச்சியாக முக்கிய பங்களிப்பை ஆற்றிய வருகிறது. மூலதனச் சந்தைகள், முதலீட்டு ஆலோசனை, நிதி திரட்டல் ஆகியவற்றில் தமக்குள்ள திறன்களின் மூலம், வணிக தொடக்கங்கள் நிலைபேறான முறையில் வளர்ச்சியடைவதற்குத் தேவையான மூலோபாய வழிகாட்டல், முதலீட்டாளருக்கான தயார்நிலை, வளர்ச்சிக்கான மூலதன அணுகல் ஆகியவற்றை வழங்குவதை இந்நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த அறிமுகம் குறித்து First Capital மற்றும் Hatch அமைப்புகளின் பிரதிநிதிகள் கருத்துத் தெரிவிக்கையில், இந்தத் தொடர்ச்சியான கூட்டாண்மையானது புத்தாக்கங்களை தொழில்முனைவோர் உருவாக்கவும், அர்த்தமுள்ள வாய்ப்புகளை அணுகவும், பிராந்திய அரங்கில் நம்பிக்கையுடன் போட்டியிடவும் கூடிய ஒரு கட்டமைப்பைக் கட்டியெழுப்புவதற்கான பகிரப்பட்ட நீண்டகால தொலைநோக்குப் பார்வையை பிரதிபலிக்கிறது என உறுதிப்படுத்தினர். First Capital நிறுவனத்தின் முதலீட்டு நிபுணத்துவத்தையும், வணிக தொடக்க மேம்பாடு மற்றும் அதன் கட்டமைப்பைக் கட்டியெழுப்புவதில் Hatch கொண்டுள்ள நிரூபிக்கப்பட்ட அனுபவத்தையும் இணைப்பதன் மூலம், இந்த திட்டமானது தொழில்முனைவோருக்கு நீடித்த மதிப்பை உருவாக்குவதுடன், இலங்கையின் பரந்த பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிப்பு செய்ய முயற்சி செய்கிறது.
இந்த பிராந்திய விரிவாக்கமானது, பரந்துபட்ட நிறுவுனர்கள், வழிகாட்டிகள், முதலீட்டாளர்களுடன் இலங்கை வணிக தொடக்கங்களை இணைப்பதன் மூலம் இத்திட்டத்தின் ஒட்டுமொத்த தரம் மற்றும் போட்டித் தன்மையை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது எல்லை கடந்த கூட்டாண்மைகள் உருவாவதை எளிதாக்குவதுடன், அறிவுப் பரிமாற்றத்தை ஊக்குவித்து, பங்கேற்பாளர்களுக்கு சர்வதேச சந்தை வாய்ப்புகளை வழங்குவதோடு, Hatch அமைப்பின் ‘புத்தாக்க வலயத்தின்’ (Innovation District by Hatch) தொடர்ச்சியான வளர்ச்சிக்கும் ஆதரவளிக்கும்.
Hatch இன் First Capital Startup Nation ஊடாக, வணிக தொடக்கங்கள் 1 மில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான நிதியுதவியைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பைப் பெறவுள்ளன.
இலங்கையின் முன்னணி வணிக தொடக்கங்களின் கட்டமைப்பைக் கட்டியெழுப்பும் அமைப்பாக விளங்கும் Hatch, தொழில்முனைவோருக்கு வழிகாட்டல், மூலோபாய கூட்டாண்மைகள், அறிவு வளங்கள், உலகளாவிய வலையமைப்புகள் உடனான அணுகல் ஆகியவற்றை வழங்குவதன் மூலம் புத்தாக்கங்களை நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து வருகிற ஒரு முன்னணி நிறுவனமாக உள்ளது.. இந்த திட்டத்தின் ஊடாக, ஆரம்ப கட்ட வணிக நிறுவுனர்கள் தமது நம்பிக்கைக்குரிய யோசனைகளை பிராந்திய மற்றும் உலகளாவிய ஆற்றல் கொண்ட மாபெரும் இடத்தை அடையக் கூடிய வணிகங்களாக மாற்றுவதற்கு உதவும் ஒரு ஊக்கியாக Hatch தனது பங்கை மேலும் பலப்படுத்துகிறது.
இரு நிறுவனங்களின் மூலோபாய கூட்டாண்மை மற்றும் பிராந்திய விரிவாக்கத்துடன் கூடிய ‘First Capital Startup Nation by Hatch 2026’ திட்டமானது, தொழில்முனைவோரை வலுவூட்டுவதற்கும், முதலீட்டு வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கும், இலங்கையின் நீண்டகால பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் நிலைபேறான புத்தாக்கங்களை ஊக்குவிப்பதற்கும் இரு அமைப்புகளும் கொண்டுள்ள பகிரப்பட்ட அர்ப்பணிப்பின் அடுத்த அத்தியாயமாக விளங்குகிறது.
ENDS