தென்னிலங்கையில் பத்தாண்டு நிறைவை கொண்டாடும் ஷங்கிரி-லா அம்பாந்தோட்டை

தென்னிலங்கையில் பத்தாண்டு நிறைவை கொண்டாடும் ஷங்கிரி-லா அம்பாந்தோட்டை

Off By

நாட்டின் வனப்புமிக்க தெற்கு கடற்கரையில் 145 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஷங்கிரி-லா அம்பாந்தோட்டை (Shangri-La Hambantota), இயற்கை, கலாசாரம், சமூகம், சிறந்த விருந்தோம்பல் ஆகியவற்றினூடாக பின்னப்பட்ட ஒரு தசாப்த கால கதைகளைக் கொண்டாடும் வகையில் இந்த ஆண்டு தனது 10ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.

ஜூன் 2016 இல் தனது முதலாவது விருந்தினரை வரவேற்றதில் இருந்து, இந்த ரிசோர்ட் வெறுமனே ஒரு தங்குமிடமாக மட்டுமன்றி அதற்கும் அப்பால் புதுப்பொலிவு பெற்றுள்ளது. அதிகாலையில் மயில்கள் உலா வரும், கைவினை மரபுகள் தொடர்ச்சியாக செழித்தோங்கும், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் ஏரிகளுக்கு அருகில் கோல்ஃப் விளையாட்டு விரிவடைகின்ற இலங்கையின் அமைதியான, வளமான பக்கத்திற்கான ஒரு நுழைவாயிலாக இது மாறியுள்ளதுடன், தலைமுறைகளைக் கடந்த பல குடும்பங்கள் ஒருவருக்கொருவர் இணைவதற்கும் இந்த இடத்தை அனுபவிப்பதற்கும் வருடாந்தம் இங்கு வருகை தருகின்றனர்.

இந்த மைல்கல்லை ‘A Decade, With Heart’ (இதயபூர்வமான ஒரு தசாப்தம்) எனும் கருப்பொருளின் கீழ் குறிக்கின்ற இவ்வருட நிறைவானது, கடந்த பத்து ஆண்டுகளில் ரிசோர்ட்டின் வளர்ச்சியை பிரதிபலிப்பதோடு மட்டுமல்லாமல், அதன் அடையாளத்தை வடிவமைத்த மனிதர்களையும் அவர்களின் கதைகளையும் நினைவுகூருகிறது.

இது குறித்து ஹோட்டலின் பொது முகாமையாளர் ரெபான் ரசீன் (Refhan Razeen) கருத்துத் தெரிவிக்கையில், “அடிப்படையில், இவ்வருட நிறைவு என்பது மனிதர்களைப் பற்றியதாகும். தொடக்கத்திலிருந்தே இந்த ரிசோர்ட்டை உருவாக்கிய எமது சக ஊழியர்கள், அதன் உயிரோட்டத்தை தொடர்ச்சியாக வடிவமைத்து வரும் உள்ளூர் சமூகங்கள் மற்றும் கைவினை கலைஞர்கள், மற்றும் பல வருடங்களாக நினைவுகளை உருவாக்க இங்கு மீண்டும் மீண்டும் வருகை தந்த விருந்தினர்கள் ஆகியோரை இது குறிக்கிறது. அம்பாந்தோட்டை எப்போதுமே வேறு எங்கும் இல்லாத ஒரு தனித்துவமான உயிர்ப்பை கொண்டுள்ளது. கடந்த ஒரு தசாப்த காலமாக அதை உலகத்துடன் பகிர்ந்து கொண்டமை தொடர்பில் நாம் பெருமடைகிறோம்” என்றார்.

பல ஆண்டுகளாக, இந்த ரிசோர்ட் அந்த இடத்தின் தனித்துவத்தை ஆழமாக பிரதிபலிக்கும் அனுபவங்களுக்கு பெயர் பெற்றுள்ளது. இலங்கையின் ஒரேயொரு ரிசோர்ட் கோல்ஃப் மைதானமான இதன் சம்பியன்ஷிப் கோல்ஃப் மைதானம் முதல், ஆழமான கலாசார சந்திப்புகள், வனவிலங்கு சாகசங்கள், ஆரோக்கிய பயணங்கள், திருமண நிகழ்வுகள் மற்றும் உள்ளூர் ஈர்ப்பைக் கொண்ட உணவு அனுபவங்கள் வரை, வெறுமனே தங்குமிடத்தை வழங்குவதற்கு அப்பால் அந்த இடத்துடன் அர்த்தமுள்ள தொடர்புகளை உருவாக்கும் தத்துவத்தை இந்த சொத்து தொடர்ச்சியாக பின்பற்றி வருகிறது.

அந்த இடத்தின் உணர்வானது, இவ்வருட நிறைவு கொண்டாட்டங்களின் மையமாகத் தொடர்கிறது.

தனது பத்தாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், இந்த ரிசோர்ட் தனது கொண்டாட்டங்களை சமூக நலன், நிலைபேறான தன்மை மற்றும் சக ஊழியர்களை பாராட்டுதல் ஆகியவற்றை மையமாகக் கொண்ட தொடர்ச்சியான முன்முயற்சிகள் மூலம் வளாகத்திற்கு அப்பாலும் விரிவுபடுத்துகிறது. சமூகத்திற்காக, சுற்றியுள்ள கிராமங்களுக்கு ஒரு கண் மருத்துவ முகாமை ஷங்கிரி-லா அம்பாந்தோட்டை முன்னெடுக்கவுள்ளதுடன், 2,000 இற்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு உணவளிக்கும் அதன் வருடாந்த வெசாக் தானசாலையை தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளது. மேலும் பார்வை குறைபாடுள்ள முதியோர்களுக்கான ‘சரண’ இல்லத்திற்கும் ஆதரவளிக்கவுள்ளது. பூமிக்காக, இலங்கையின் தென் கடற்கரை எல்லையை வரையறுக்கும் சூழல் தொகுதிகளைப் பாதுகாப்பதற்கான அதன் அர்ப்பணிப்பை வலுப்படுத்தும் வகையில், ரிசோர்ட் வளாகத்திலும் அதனை அண்டிய பகுதிகளிலும் 100 சதுப்புநில தாவரங்களை நடுகை செய்யவுள்ளது. ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இந்த பயணத்தின் ஒரு அங்கமாக இருந்து வரும் 95 இற்கும் மேற்பட்ட சக ஊழியர் குழு உறுப்பினர்கள், ஒரு விசேட ‘மகிழ்ச்சியின் மாதம்’ கொண்டாட்டத்தின் மூலம் கௌரவிக்கப்படவுள்ளனர். இது கடந்த தசாப்தத்தில் ரிசோர்ட்டை வடிவமைத்த அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் அக்கறையை அங்கீகரிப்பதாக அமையும்.

இந்த ரிசோர்ட் வருடம் முழுவதும் இலங்கையின் தென் பிராந்தியத்தின் உயிரோட்டத்தினால் ஈர்க்கப்பட்ட பல விசேட அனுபவங்கள், சமூக திட்டங்கள், கதைகளை கூறும் பிரசாரங்கள் மற்றும் விருந்தினர்களுக்கான தருணங்களை வெளிப்படுத்தவுள்ளது. இந்த ரிசோர்ட்டுடன் தொடர்புடைய கைவினை கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களின் கொண்டாட்டங்கள், இந்த சொத்துடன் இணைந்து வளர்ந்த நீண்டகால ஊழியர்களின் கதைகள், பரந்த தென் பிராந்தியத்தால் ஈர்க்கப்பட்ட அனுபவங்கள் மற்றும் எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கும் போது கடந்த தசாப்தத்தின் பயணத்தைக் கௌரவிக்கும் தருணங்கள் ஆகியனவும் இதில் உள்ளடங்கும்.

இயற்கையும் இந்த ரிசோர்ட்டின் அடையாளத்திலிருந்து பிரிக்க முடியாத ஒரு அங்கமாக தொடர்ச்சியாக திகழ்கிறது. புலம்பெயர் பறவைகள், பட்டாம்பூச்சிகள், மயில்கள், உள்ளூர் வனவிலங்குகள் உள்ளிட்ட வளமான உயிர்ப்பல்வகைமை பெருக்கத்தின் தாயகமாக விளங்கும் இந்த சொத்தானது, சூழவுள்ள நிலப்பரப்பின் தாளங்களுடன் நீண்ட காலமாக இணைந்து வாழ்கிறது. பாதுகாத்தல் சார்ந்த நடைமுறைகள் முதல் உள்ளூர் வாழ்வாதாரங்களை ஆதரித்தல், உள்ளூர் உற்பத்தி பொருட்களைப் பெற்றுக்கொள்ளுதல் வரை, இந்த ரிசோர்ட்டின் பல முன்முயற்சிகளை, நிலைபேறான தன்மை மற்றும் சூழல் பொறுப்புணர்வு ஆகியன தொடர்ந்து வழிநடத்துகின்றன.

கடந்த தசாப்தத்தில் கொண்டாட்டங்கள், திருமணங்கள், கோல்ஃப், சுற்றுலா, ஆரோக்கிய உலாக்கள் மற்றும் பல தலைமுறையினரின் குடும்பப் பயணங்களுக்கான இலங்கையின் முன்னணி இடமாக ஷங்கிரி-லா அம்பாந்தோட்டை உருவெடுத்துள்ளதுடன், உலகளாவிய சுற்றுலா வரைபடத்தில் அம்பாந்தோட்டையை நிலைநிறுத்த உதவியுள்ளது. இந்த ரிசோர்ட் தனது அடுத்த அத்தியாயத்தில் கால் பதிக்கும் நிலையில், அந்த இடத்தையும் அதன் மக்களையும் பிரதிபலிக்கும் ஆழமான அனுபவங்களை உருவாக்குவதில் அதன் கவனம் தொடர்கிறது. ஏனெனில் கடந்த பத்து வருடங்களில் பல விடயங்கள் மாறினாலும், அம்பாந்தோட்டையின் இதயம் மாறாமல் உள்ளது.

அத்துடன், இதுவே எப்போதும் கொண்டாடப்பட வேண்டிய கதையாக இருக்கலாம்.

Image Caption – இலங்கையின் தென் கடற்கரையில் தனது கதவுகளைத் திறந்து பத்து ஆண்டுகளின் பின்னர், வெறுமனே விருந்தோம்பலால் மட்டுமல்லாமல், மனிதர்கள், இடம், நோக்கம் ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்ட ஒரு பயணத்தை ஷங்கிரி-லா ஹம்பாந்தோட்டை பிரதிபலிக்கிறது.

Ends

ஊடகம் சார்ந்த தொடர்புக்கு:

Cheranka Mendis

Director of Communications

Shangri-La Colombo | Shangri-La Hambantota

T :  +94 76 191 5736

E : [email protected]

ஷங்கிரி-லா அம்பாந்தோட்டை பற்றி

இலங்கையின் வனப்புமிக்க தென் கடற்கரையில் அமைந்துள்ள ஷங்கிரி-லா அம்பாந்தோட்டை ஆனது, இயற்கை, கலாசாரம், இதயபூர்வமான விருந்தோம்பல் ஆகியவற்றில் வேரூன்றிய ஆழமான அனுபவங்களை வழங்கும் 145 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட ஒரு ரிசோர்ட் ஆகும். இலங்கையின் ஒரேயொரு ரிசோர்ட் கோல்ஃப் மைதானத்தைக் கொண்டுள்ள இந்த ரிசோர்ட், விசாலமான தங்குமிடங்கள், உணவு அனுபவங்கள், ஆரோக்கிய பயணங்கள், குடும்பத்திற்கு நட்பான வசதிகள், திருமணத்திற்கான இடங்கள் மற்றும் பரந்த தென் பிராந்தியத்தால் ஈர்க்கப்பட்ட தருணங்களைக் கொண்டுள்ளது. 2016 இல் திறக்கப்பட்டதிலிருந்து, உள்ளூர் சமூகங்கள் மற்றும் இயற்கைச் சூழலுடன் ஆழமாக இணைந்திருக்கும் அதே வேளையில், கோல்ஃப், ஆரோக்கியம், கொண்டாட்டங்கள் மற்றும் பல தலைமுறை குடும்பப் பயணங்களுக்கான இலங்கையின் முன்னணி இடங்களில் ஒன்றாக இந்த ரிசோர்ட் மாறியுள்ளது.

ஷங்கிரி-லா பற்றி:

ஷங்கிரி-லா குழுமத்தின் ஒரு சின்னமான முதன்மை வர்த்தகநாமமான ஷங்கிரி-லா, இதயபூர்வமான சேவையை அதன் தனித்துவமான ஆசிய விருந்தோம்பல் அனுபவத்தின் மையத்தில் வைக்கிறது. கற்பனை மற்றும் இயற்கையால் ஈர்க்கப்பட்ட வடிவமைப்பு, மகிழ்ச்சிகரமான சமையல் மற்றும் கலாசார அனுபவங்கள், மற்றும் அதன் உண்மையான மற்றும் சிந்தனைமிக்க சேவை ஆகியவற்றின் மூலம், இந்த வர்த்தகநாமம் விருந்தினர்கள் தங்களது சொந்த ஷங்கிரி-லா தருணங்களை உணர உதவுகிறது.

இன்று, ஆசிய பசிபிக், மத்திய கிழக்கு, ஐரோப்பா, வட அமெரிக்கா முழுவதும் உலகின் மிகச்சிறந்த இடங்களில் 90 இற்கும் மேற்பட்ட ஆடம்பர ஹோட்டல்கள் மற்றும் ரிசோர்ட்டுகளில் ஷங்கிரி-லாவின் அனுபவம் உயிர் பெறுகிறது.

ஷங்கிரி-லா வட்டம்

வாழ்க்கை என்பது மகிழ்ச்சியானது, எல்லையற்றது மற்றும் பல்வேறுபட்ட சாத்தியக்கூறுகளால் நிறைந்தது எனும் எண்ணத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஷங்கிரி-லா வட்டம் (Shangri-La Circle) ஆனது, ஒரு சமகால ஆசிய பயண வாழ்க்கை முறை தளமாகும்; இது உலகெங்கிலும் உள்ள 100 இற்கும் மேற்பட்ட Shangri-La, Shangri-La Signatures, Kerry, JEN by Shangri-La மற்றும் அதன் வணிக சொத்துகள் மற்றும் இக்குழுமத்தின் உணவகங்கள், ஆரோக்கிய வசதிகள் மற்றும் குடும்ப அனுபவங்களின் வசதிகளில் உறுப்பினர்களுக்கு தங்களது பயணத்தின் ஒவ்வொரு இடத்திலும் மேம்பட்ட நன்மைகளை வழங்குகின்றது. இந்த நன்மைகளின் விபரங்களை இங்கு காணலாம்.

உறுப்பினராக பதிவு செய்வதற்கும், சமீபத்திய ஷங்கிரி-லா வட்டத்தின் அறிவிப்புகள் மற்றும் சலுகைகளை பெறுவதற்கும், www.shangri-la.com/shangrilacircle எனும் இணையதளத்தைப் பார்வையிடவும். எம்மை Instagram, Facebook, Weibo, WeChat சமூகவலைத்தளங்களில் பின்தொடரலாம் அல்லது ஷங்கிரி-லா கையடக்கத் தொலைபேசி செயலியை பதிவிறக்கம் செய்யலாம்.