‘தீவா குடும்பத்தின் அதிர்ஷ்டம்’ மாபெரும் நுகர்வோர் ஊக்குவிப்புத் திட்டத்தின் இறுதி மாதாந்த வெற்றியாளர்களுக்கு பரிசளித்த Diva

Off By Mic

ஹேமாஸ் கன்ஸ்யூமர் பிராண்ட்ஸ் (Hemas Consumer Brands) நிறுவனத்தின் இலங்கையின் மிகவும் நம்பகமான சலவைத் தயாரிப்பு வர்த்தகநாமங்களில் ஒன்றான தீவா (Diva), ‘தீவா குடும்பத்தின் அதிர்ஷ்டம்’ (Diva Pawule Wasanawa) எனும் மாபெரும் நுகர்வோர் ஊக்குவிப்புத் திட்டம் மூலம் தமது நுகர்வோரின் விசுவாசத்தைத் தொடர்ச்சியாக கொண்டாடி வருகிறது. இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான பாரம்பரியத்தைக் கொண்டுள்ள இந்த வர்த்தகநாமம், நம்பிக்கை, நிலைபேறான தன்மை மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் செயற்படுத்தப்படும் இந்த திட்டம் மூலம் இலங்கை குடும்பங்களுடனான தனது ஆழமான தொடர்பை தொடர்ச்சியாக உறுதிப்படுத்துகிறது.

தீவாவின் விசுவாசமான நுகர்வோருக்குப் பரிசளிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ‘தீவா குடும்பத்தின் அதிர்ஷ்டம்’ ஊக்குவிப்புத் திட்டம், அண்மையில் தனது மூன்றாவதும் இறுதி மாதத்திற்கான மாதாந்த வெற்றியாளர்களை அறிவித்தது. இந்த நிகழ்வில், சலவை இயந்திரங்கள், தொலைக்காட்சிகள், மடிகணனிகள் உள்ளிட்ட மதிப்புமிக்க பரிசுகளைப் பெற்று, மகிழ்ச்சியடைந்த ஏராளமான பங்கேற்பாளர்கள் தங்களது பரிசுகளை வீட்டிற்கு எடுத்துச் சென்றனர். வெற்றியாளர்களில், ஜா-எலவைச் சேர்ந்த பியுமாலி ஹேரத் மற்றும் அநுராதபுரத்தைச் சேர்ந்த சமணி கலகொட ஆகியோர் சலவை இயந்திரங்களை வென்றனர். இரத்மலானையைச் சேர்ந்த கலணி அசந்திகா டி சொய்சா, காலியைச் சேர்ந்த நிசன்சலா சந்தமாலி ஆகியோர் தொலைக்காட்சிகளை வென்றனர். அத்துடன், அம்பலாங்கொடையைச் சேர்ந்த இரொஷானி குமாரி மற்றும் கம்பளையைச் சேர்ந்த மல்காந்தி தயானந்த ஆகியோர் மடிகணனிகளை வென்றனர்.

இந்த வெற்றியாளர்கள் தீவாவின் இலங்கை குடும்பங்களுடனான நீண்டகாலப் பிணைப்புக்கு சான்றாகும். அத்துடன், 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வர்த்தகநாமம் சம்பாதித்துள்ள நம்பிக்கையையும் விசுவாசத்தையும் இது எடுத்துக் காட்டுகிறது. சலவைத் தயாரிப்பு வகையைப் புரட்சிகரமாக்கிய வர்த்தகநாமம் எனும் வகையில், Diva தனது வர்த்தகநாம வாக்குறுதியைத் தொடர்ச்சியாகவும் சரியான நேரத்திலும் நிறைவேற்றி வருகிறது.

20 ஆண்டுகாலப் பயணத்தில், இலங்கை குடும்பங்களிடையே தரம், நம்பகத்தன்மை, பராமரிப்பு ஆகியவற்றை வழங்கும் ஒரு நீண்டகால, நம்பகமான வர்த்தகநாமமாக தீவா வளர்ந்துள்ளது. ‘தீவா குடும்பத்தின் அதிர்ஷ்டம்’ போன்ற முயற்சிகள் மூலம், இவ்வர்த்தகநாமம், அதை ஒரு வீட்டுப் பெயராக மாற்றியவர்களுக்கு தலை வணங்குவதுடன், அவர்களின் விசுவாசத்தை மிகவும் பலனளிக்கும் வகையில் கொண்டாடுகிறது.

Hemas Consumer Brands பற்றி

60 வருடங்களாக வீடு மற்றும் தனிநபர் பராமரிப்புத் தயாரிப்புகளின் இலங்கையின் முன்னணி உற்பத்தியாளரான Hemas Consumer Brands, குடும்பங்கள் சிறந்த நாளைய தினத்தை அனுபவிப்பதற்கு வலுவூட்டுவதில் கவனம் செலுத்துகிறது. வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட முன்மொழிவுகளில் புத்தாக்கத்தை ஏற்படுத்தவும், மேம்படுத்தவும் உள்ளூர் தகவல் தரவுகளைப் பயன்படுத்துவதில் பெருமை கொள்கிறது. இது இலங்கையில் நம்பகமான வீட்டுப் பெயர் வர்த்தக நாமமாக தன்னை நிறுவுதல் எனும் அவர்களது நோக்கத்தை அடைய உதவியுள்ளது. இலங்கையின் நுகர்வோர் பற்றிய ஆழமான புரிதல் மற்றும் அதன் தயாரிப்புகளில் உயர் தரம் மற்றும் பெறுமதியை வழங்குவதற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பினால் உந்தப்பட்டுள்ள Hemas Consumer Brands, நாடு முழுவதும் உள்ள சமூகங்களின் வாழ்க்கையை தொடர்ச்சியாக வளப்படுத்துகிறது.