
ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகளில் பிரகாசித்த லிங்க் நெச்சுரல்
இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையினால் (EDB) வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் மதிப்புமிக்க ஜனாதிபதி ஏற்றுமதி விருது விழாவில் ‘2023/24 ஆண்டிற்கான வளர்ந்து வரும் ஏற்றுமதியாளர்’ (Emerging Exporter of the Year 2023/24) மற்றும் ‘சிறந்த ஏற்றுமதியாளர் – மூலிகை மற்றும் ஆயுர்வேத பொருட்கள் பிரிவு (துறை)’ (‘Best Exporter – Herbal & Ayurveda Products Category) (Sectoral) விருதுகளைப் பெற்று, முன்னணி ஏற்றுமதியாளர் எனும் பெயரை பெற்று Link Natural Products மீண்டுமொரு முறை தனது நிலையை உறுதிப்படுத்தியுள்ளது.
நாட்டின் ஏற்றுமதித் துறை மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஒப்பிட முடியாத பங்களிப்பைச் செய்த ஏற்றுமதியாளர்களுக்கு இலங்கையின் ஜனாதிபதியால் வழங்கப்படும் அங்கீகாரத்தின் உச்சமாக ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகள் (PEA) அமைகின்றது. நிதியாண்டில் நிறுவனத்தின் செயற்றிறன் மற்றும் ஏற்றுமதி வருமானம், ஏற்றுமதி வருமானத்தை மீளப் பெறுதல், நிகர அந்நியச் செலாவணி வருமானம், சந்தைப் பல்வகைத் தன்மை, தயாரிப்பு பல்வகைத் தன்மை, பெறுமதி சேர்த்தல், புத்தாக்கங்கள் மற்றும் ஏற்றுமதிச் சந்தையில் நிலைபேறான முயற்சிகள் போன்ற அளவீடுகளின் அடிப்படையில் Link Natural Products மதிப்பாய்வு செய்யப்பட்டு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இன்று, உள்ளூர் சந்தையில் லிங்க் நெச்சுரல் புரடக்ட்ஸ் பல்வேறு மூலிகை சுகாதாரம் மற்றும் தனிநபர் பராமரிப்புத் தயாரிப்புள் மூலம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. உலகளாவிய துறையில் கிடைக்கும் வாய்ப்புகள் மற்றும் ஒழுங்குமுறை அனுமதிகளைப் பெறுவதில் கொண்டுள்ள அதன் வெற்றியானது, தயாரிப்பு பாதுகாப்பு மற்றும் தரத் தேவைகளுடனான அதன் வலுவான இணக்கத்தை வெளிப்படுத்துகிறது. அதிநவீன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் மற்றும் அமெரிக்க Food and Drug Administration (FDA) கணக்காய்வு இணக்கத்தைக் கொண்ட உற்பத்தி தொழிற்சாலையுடன் கூடிய லிங்க் நெச்சுரல் புரடக்ட்ஸ் ஆனது, மூலிகை தயாரிப்புத் துறையில் புதிய அளவுகோல்களை தொடர்ச்சியாக அமைத்து வருகிறது.
லிங்க் நெச்சுரலின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷான் ரன்சிலிகே இதுபற்றித் தெரிவிக்கையில், “எமது வெற்றியானது, தரம் மற்றும் நிலைபேறான தன்மைக்கான இடைவிடாத முயற்சியால் இயக்கப்படுகிறது. ஒவ்வொரு தயாரிப்பும் எமது வளமான பாரம்பரியத்தையும், ஆரோக்கியம் மற்றும் சுகவாழ்வுக்கான ஆழமாக வேரூன்றிய அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது என்பதை உறுதி செய்கிறது. இந்த விருதானது, எமது முக்கிய மதிப்புகளுக்காக நாம் உண்மையாக இருந்து சர்வதேச சந்தைகளில் எமது இருப்பைத் தொடர்ச்சியாக புத்தாக்கத்திற்கு உள்ளாக்குதல், விரிவுபடுத்துதல் மற்றும் வலுப்படுத்துவதற்கான ஒரு மைல்கல் என்பதுடன் எமக்கான ஒரு உந்துதலுமாகும். லிங்க் நெச்சுரல் புரடக்ட்ஸ் நிர்வாகம் அதன் செயற்திறன் மிக்க பயணத்தின் பங்காளர்களான அதன் அர்ப்பணிப்புள்ள குழுக்கள், விநியோக கூட்டாளர்கள் மற்றும் உலகளாவிய விசுவாசமான நுகர்வோருக்கு மனமார்ந்த நன்றியை இவ்வேளையில் தெரிவித்துக் கொள்கிறது. அத்துடன் ஒன்றாக புதிய உயரங்களை எட்டுவதற்கான நம்பிக்கையை அது கொண்டுள்ளது.” என்றார்.
லிங்க் நெச்சுரல் புரடக்ட்ஸ் நிறுவனத்தின் பயணமானது, 1982ஆம் ஆண்டு ஆரம்பமானது. ஏற்றுமதிச் சந்தைக்கான வாசனைத் திரவிய அத்தியாவசிய எண்ணெய்களை உற்பத்தி செய்வதில் வேரூன்றி, இன்று உலகளாவிய ரீதியில் நம்பகமான மூலிகை தயாரிப்புகளாக வளர்ந்துள்ளது. ஆயுர்வேத ஞானம் மற்றும் நவீன விஞ்ஞானத்தின் கலவையின் மூலம் தரம் மற்றும் புத்தாக்கத்திற்கான அதன் அர்ப்பணிப்பால் உந்தப்பட்டது. லிங்க் சமஹன், சுதந்த, ஸ்வஸ்தா அமுர்தா, ஸ்வஸ்தா திரிபலா, மஸல்கார்ட், எஸ்பி பாம் மற்றும் கேஷா போன்ற சர்வதேச அளவில் நம்பகமான மற்றும் காலத்தால் அழியாத தயாரிப்புகளுக்கான தாயகமாக லிங்க் நெச்சுரல் திகழ்கிறது. இது நுகர்வோருக்கு தலைமுறை தலைமுறையாக முழுமையான சுகவாழ்வை வழங்குகிறது. முதன்மையான வர்த்தகநாமமான லிங்க் சமஹன், தற்போது அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, செக் குடியரசு, கனடா, அவுஸ்திரேலியா, மத்திய கிழக்கு உள்ளிட்ட 30 இற்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இது காஸ்ட்கோ ஜப்பான் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள லுலு ஹைப்பர் மார்க்கெட்டுகள் உள்ளிட்ட பல பிரபலமான விற்பனையாளர்களிடம் கிடைக்கிறது. அத்துடன், எமது தேசிய விமான நிறுவனமான ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸில் பரிமாறப்படும் பெருமையையும் பெற்றுள்ளது. இந்த தனித்துவமான இலங்கை மூலிகை பானம் முக்கிய உலகளாவிய வெளியீடுகளில் இடம் பிடித்துள்ளதுடன், அதன் செயல்திறன் காரணமாக அமிதாப் பச்சன் மற்றும் நவோமி கெம்பல் போன்ற பல பிரபலமான உலகளாவிய பிரபலங்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அத்துடன் The Times of India மற்றும் The Juggernaut போன்ற சர்வதேச ஊடகங்களிலும் அது இடம்பிடித்துள்ளது.
லிங்க் நெச்சுரலின் பிரதம செயற்பாட்டு அதிகாரி சமரி விக்ரமதிலக இது பற்றித் தெரிவிக்கையில், “ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகளில் நாம் அடைந்த கௌரவமானது, எமது குழுக்கள், வெளிநாட்டு வணிக கூட்டாளர்கள் மற்றும் எங்கள் பயணத்தில் ஒருங்கிணைந்த வாடிக்கையாளர்களின் அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வத்திற்கு ஒரு சான்றாகும். இந்த விருதைப் பெறுவதில் நாம் பெருமைப்படுகிறோம். இது இலங்கை மூலிகைத் தயாரிப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் எமது நோக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் அதே நேரத்தில் தரம் மற்றும் பாதுகாப்பின் மிக உயர்ந்த தரத்தைப் பேணுகிறது.” என்றார்.
லிங்க் நெச்சுரல் புரடக்ட்ஸ் நிறுவனத்தின் செயற்பாடுகளின் மையத்தில் நிலைபேறான தன்மை விளங்குகின்றது. நெறிமுறை ஆதாரம் மற்றும் சூழல் கண்காணிப்பில் ஒரு முன்னோடியான பங்கை நிறுவனம் வகிக்கிறது. ஆரோக்கியமான தாவர மூலிகைப் பொருட்கள், மீள கொள்வனவு செய்யும் ஒப்பந்தங்கள், நிலைபேறான விலை நிர்ணயம், விவசாய தொழில்நுட்ப பயிற்சி மற்றும் நிதி ஆதரவை அணுகுவதன் மூலம், உயர்தர மூலப்பொருட்களின் நிலைபேறான விநியோகத்தை உறுதி செய்வதன் மூலம், கிராமிய விவசாய சமூகங்களுடன் மதிப்புமிக்க விநியோகச் சங்கிலி கூட்டாளராக நிறுவனம் ஈடுபடுகிறது. இத்தகைய நீண்டகால கூட்டாண்மைகளை வளர்ப்பதன் மூலம், லிங்க் நெச்சுரல் புரடக்ட்ஸ் இறக்குமதிகளை நம்பியிருப்பதைக் குறைத்து உள்ளூர் சமூகங்களின் பொருளாதார வளர்ச்சியை செயற்படுத்தும் நிலைபேறான வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்குகிறது.
Photo Caption: ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகளில், லிங்க் நெச்சுரல் புரடக்ட்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷான் ரன்சிலிகே மற்றும் லிங்க் நெச்சுரல் புரடக்ட்ஸ்(பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் பணிப்பாளர் டாக்டர் டி.எம்.எஸ்.ஜி. தென்னகோன் ஆகியோர் ‘2023/24 ஆம் ஆண்டின் வளர்ந்து வரும் ஏற்றுமதியாளர்’ மற்றும் ‘சிறந்த ஏற்றுமதியாளர் – மூலிகை மற்றும் ஆயுர்வேத பொருட்கள் பிரிவு (துறை)’ விருதைப் பெற்ற போது…