சுதேசி கொஹொம்ப தனது பிரபல மூலிகைத் தயாரிப்புகளில் மேலும் மூன்று புதிய வகைகளை அறிமுகப்படுத்துகிறது

சுதேசி கொஹொம்ப தனது பிரபல மூலிகைத் தயாரிப்புகளில் மேலும் மூன்று புதிய வகைகளை அறிமுகப்படுத்துகிறது

Off By

Lily & Gotukola, Lemongrass, Aloe & Cucumber தலைமுறை தலைமுறையாக விளங்கும் நம்பிக்கைக்கு புதிய மூலிகை அனுபவங்களை சேர்க்கின்றன

இலங்கையின் The Swadeshi Industrial Works PLC நிறுவனத்தின் முதலிடத்தில் உள்ள மூலிகை வர்த்தகநாமமான ‘சுதேசி கொஹொம்ப’, தனது எட்டு தசாப்தங்களுக்கும் மேலான பயணத்தில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கும் வகையில், அதன் பிரபல  ‘கொஹொம்ப ஹேர்பல்’ வர்த்தகாநாமத்திற்கு 3 புதிய தயாரிப்பு வகைகளான- ‘Lily & Gotukola’ (லில்லி மற்றும் வல்லாரை), ‘Lemongrass’ (எலுமிச்சம்புல்), Aloe & Cucumber’ (கற்றாழை மற்றும் வெள்ளரி) ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

முதன்முறையாக, சுதேசி கொஹொம்ப பல்வேறு நுகர்வோர் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் மேம்படுத்தப்பட்ட இம்மூன்று தனித்துவமான தயாரிப்பு வகைகளுடன் தனது மூலிகைத் தயாரிப்புகளை விரிவுபடுத்தும் அதே வேளையில், தலைமுறை தலைமுறையாக கொஹொம்பவினால் நம்பப்படும் அதன் இயற்கையான மூலிகை நன்மைகளில் இவை வேரூன்றியுள்ளன.

மூன்று புதிய சேர்க்கைகளாக இணைந்துள்ள, இளமையான சருமத்திற்கான ‘Swadeshi Khomba Lily & Gotukola’, நீண்டநேர புத்துணர்ச்சிக்கான ‘Swadeshi Khomba Lemongrass’, மற்றும் குளிர்மையான சருமத்திற்கான ‘Swadeshi Khomba Aloe & Cucumber’ ஆகியன அமைகின்றன.

இந்த மூன்று வகைகளின் மையத்திலும் உள்ளூர் மொழியில் கொஹொம்ப எனப்படும் வேம்பு (Margosa) உள்ளது. இது தலைமுறை தலைமுறையாக சுதேசி கொஹொம்ப வர்த்தகநாமத்தை வரையறுத்து வரும் நம்பிக்கையான தாவரவியல் மூலப்பொருள் என்பதுடன் தூய்மையான, ஆரோக்கியமான சருமத்தைப் பேண உதவுவதற்காக பெயர் பெற்று விளங்குகிறது. புதிய தயாரிப்புகள் கவர்ச்சிகரமான அட்டைப் பெட்டிகளில் வசதியாக அடைக்கப்பட்டு, கட்டுப்படியான விலையில் வழங்கப்படுவதன் மூலம் அன்றாட குடும்பப் பயன்பாட்டிற்கான ஒரு சிறந்த தெரிவாக அமைகிறது.

இளமையான சருமத்திற்கான சுதேசி கொஹொம்ப ‘Lily & Gotukola’ சவர்க்காரம், வேம்பின் நன்மைகளுடன் லில்லி பூ மற்றும் வல்லாரையை இணைக்கிறது. லில்லி அதன் மென்மையான உஷ்ணத்தை தணிக்கும் குணத்திற்குப் பெயர் பெற்று விளங்குகின்றது. இது சருமத்தை மென்மையாகவும், புத்துணர்ச்சியுடனும், அழகாகவும் பராமரிக்க உதவுகிறது. அதே வேளையில் பாரம்பரிய மூலிகைப் பராமரிப்பில் புகழ்பெற்ற வல்லாரையானது, சருமத்திற்கு போசணை அளித்து புத்துயிர் வழங்குவதன் மூலம் இயற்கையான ஆரோக்கியமான தோற்றத்திற்கு ஆதரவளிக்கிறது.

நீண்ட நேர புத்துணர்ச்சிக்கான சுதேசி கொஹொம்ப ‘Lemongrass’ சவர்க்காரம், வேம்பை எலுமிச்சம்புல் சாறின் புத்துணர்ச்சியூட்டும் நன்மைகளுடன் இணைக்கிறது. புதிய மூலிகைக் குணத்திற்குப் பெயர் பெற்ற இந்த எலுமிச்சம்புல் ஆனது, சருமத்தை புத்துணர்ச்சியுடனும் புதிதாதாகவும் உணர வைக்க உதவுகிறது. இது அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்ற ஒரு புத்துணர்ச்சியூட்டும் குளியல் அனுபவத்தை வழங்குகிறது.

குளிர்மையான சருமத்திற்கான சுதேசி கொஹொம்ப ‘Aloe & Cucumber’ சவர்க்காரம், இலங்கையின் வெப்ப மண்டல காலநிலைக்கு மிகவும் பொருத்தமான ஒரு புத்துணர்ச்சியூட்டும் சருமப் பராமரிப்பு அனுபவத்திற்காக வேம்பு, கற்றாழை (Aloe Vera), வெள்ளரி (Cucumber) ஆகியவற்றை இணைக்கிறது. கற்றாழையானது நாட்டின் கடுமையான வெயிலினால் வெளிப்படும் உஷ்ணத்தை சருமத்திலிருந்து தணிப்பதுடன், இலகுவான, பிசுபிசுப்பற்ற ஈரப்பதனை வழங்கும் அதே நேரத்தில், வெள்ளரி உடனடி குளிர்ச்சியுடன் புத்துணர்ச்சியையும் வழங்குகிறது.

இந்த மூன்று புதிய தயாரிப்பு வகைகளின் அறிமுகமானது, மூலிகை கொண்ட இலங்கையின் தனிநபர் பராமரிப்புப் பிரிவில் முன்னணியில் பங்காற்றிய ஒரு உள்நாட்டு வர்த்தகநாமத்தின் தொடர்ச்சியான பரிணாமத்தைக் குறிக்கிறது. The Swadeshi Industrial Works நிறுவனம் 1941இல் நிறுவப்பட்டதைத் தொடர்ந்து, கொஹொம்ப மூலிகை சவர்க்காரம் அறிமுகப்படுத்தப்பட்டது. அன்றைய காலத்தில் இருந்து, மூலிகைப் பாரம்பரியம், மென்மை, அதே சமயம் ஆழமான தூய்மையாக்கல் மற்றும் முழுக் குடும்பத்திற்கும் இயற்கையான பாதுகாப்பிற்கான வாக்குறுதி ஆகியவற்றின் தனித்துவமான கலவை மூலம் இலங்கை குடும்பங்களுடன் நீடித்த உறவைக் கட்டியெழுப்பியுள்ளது.

இந்த அறிமுகம் குறித்து சுதேசி நிறுவனத்தின் பிரதித் தலைவரும் முகாமைத்துவ பணிப்பாளருமான திருமதி சுலோதரா சமரசிங்க தெரிவிக்கையில், “எமது புதிய தயாரிப்பு வகைகள், புதிய தாவர அடிப்படையிலான மூலப்பொருட்களுடன், எமது தரம் மற்றும் நம்பிக்கையைப் பேணுகின்ற அதே வேளையில், மாற்றமடைகின்ற தனிநபர் பராமரிப்பு எதிர்பார்ப்புகளுடன் தொடர்ச்சியாக பரிணமித்து, கவனமாக தெரிவு செய்யப்பட்ட மூலிகைப் பொருட்களின் நன்மைகளை நவீன நுகர்வோருக்கு கொண்டு சேர்ப்பதற்கான சுதேசியின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது.” என்றார்.

“எட்டு தசாப்தங்களுக்கும் மேலாக, கொஹொம்ப எனும் பெயர், வேம்பின் நன்மைகளுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. ‘சுதேசி கொஹொம்ப ஒரிஜினல் ஹேர்பல்’ தனது முதன்மையான மூலப்பொருளாக இயற்கையான வேம்பு எண்ணெயைக் கொண்டுள்ளது. இது வர்த்தகநாமத்தை அதன் உள்நாட்டுப் பெயரைக் கொண்ட தாவரத்துடன் நேரடியாக இணைக்கிறது. நுகர்வோருக்கு அதிக தெரிவுகளையும் தனித்துவமான குளியல் அனுபவபத்தையும் வழங்க வடிவமைக்கப்பட்டுள்ள புதிய மூலிகை தயாரிப்புகள் மூலம், மூலிகையின் பாரம்பரியம் விரிவுபடுத்தப்படுவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம்.” என்றார்.

சுதேசி கொஹொம்பவின் நீண்டகால நுகர்வோர் நம்பிக்கைக்கு பின்னால் அதன் தயாரிப்புத் தரம், பாதுகாப்பு மற்றும் பொறுப்பான உற்பத்தி ஆகியவற்றிற்கான வலுவான அர்ப்பணிப்பு ஆகியன அமைகின்றது. சுதேசி கொஹொம்ப சுகாதார அமைச்சின் கீழுள்ள தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையில் (NMRA) பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், சுதேசி கொஹொம்பவில் பயன்படுத்தப்படும் வாசனைத் திரவியங்கள் உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச வாசனைத் திரவிய சங்கத்தினால் (IFRA) சான்றளிக்கப்பட்டவை ஆகும். சுதேசி கொஹொம்ப ஹேர்பல் ஆனது, ISO 9001:2015 மற்றும் GMP தரநிலைகளுக்கு இணங்க தயாரிக்கப்படுவதுடன், சர்வதேச ரீதியாக தோலியல் ரீதியான பரிசோதனைக்கு உட்பட்டதாகும்.

இவ்வர்த்தகநாமம் ஐக்கிய இராச்சியத்தின் சைவ சங்கத்தின் (Vegetarian Society of the UK) அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. சுதேசி கொஹொம்ப ஹேர்பல் ஆனது, சைவம் சார்ந்தது. அவை விலங்கு வன்கொடுமையற்றது என்பதுடன் விலங்குகளில் ஒருபோதும் பரிசோதிக்கப்படாதவை ஆகும். பொறுப்பான மற்றும் நெறிமுறை சார்ந்த தனிநபர் பராமரிப்பிற்கான சுதேசி நிறுவனத்தின் அர்ப்பணிப்பை இது எடுத்துக் காட்டுகிறது.

ஒரு உண்மையான இலங்கை நிறுவனம் எனும் வகையில், மூலிகைப் பொருட்களின் செயற்பாட்டு நன்மைகளை நுகர்வோர் புரிந்து கொள்ள உதவுவதற்கு, சுதேசி முக்கியத்துவம் அளிக்கிறது. கவனமாக தெரிவு செய்யப்பட்ட இலங்கை மூலிகைகளை நிறுவனம் பயன்படுத்துகிறது. தரத்தை உறுதி செய்வதற்காக மூலப்பொருட்கள் விரிவாக ஆராயப்பட்டு தயாரிப்புகள் முழுமையாகப் பரிசோதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தனிநபர் பராமரிப்பிற்கு அப்பால், சுதேசி கொஹொம்பவின் பராமரிப்புத் தத்துவமானது சூழல், சமூகங்கள் மற்றும் இலங்கைப் பாரம்பரியம் வரை மாத்திரமன்றி, பல்வேறு நிலைபேறான தன்மை மற்றும் நிறுவன பொறுப்பு முயற்சிகள் வரை விரிவடைந்து செல்கிறது. நாடு முழுவதிலும் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வழிபாட்டுத் தலங்களில் நடத்தப்படும் வருடாந்த ‘சுதேசி கொஹொம்ப ஆலோக பூஜா சத்காரய’, இலங்கை முழுவதும் கொஹொம்ப மரக்கன்றுகள் நடும் பிரசாரங்களுக்கு ஆதரவளிக்கும் ‘சுதேசி கொஹொம்ப மிஹிந்தல சத்காரய’, மற்றும் உலர் வலயத்தில் உள்ள சமூகங்கள், பாடசாலைகள் மற்றும் சமய தலங்களுக்கு நீர்த் தொட்டிகளை வழங்கும் ‘சுதேசி கொஹொம்ப கமட்ட சத்காரய’ உள்ளிட்டவை அதன் சமூக பொறுப்பு முயற்சிகளில் உள்ளடங்குகின்றன.

Lily & Gotukola, Lemongrass, Aloe & Cucumber ஆகிய புதிய அறிமுகங்கள் மூலம், சுதேசி கொஹொம்ப தனது நம்பிக்கையான மூலிகைப் பாரம்பரியத்தின் பலத்தையும் நவீன நுகர்வோர் தேவைகளையும் ஒன்றிணைத்து, இலங்கை இளைஞர், யுவதிகளுக்கு வேம்பின் இயற்கையான நன்மைகளை அனுபவிக்க மேலும் பல வழிகளை ஏற்படுத்துகிறது.

தலைமுறை தலைமுறையாக இலங்கை வீடுகளின் ஒரு அங்கமாக இருந்து வரும் ஒரு வர்த்தகநாமத்திலிருந்து, இந்த புதிய தயாரிப்பு வகைகள், பழக்கப்பட்ட வாக்குறுதியின் புதிய வெளிப்பாடாக அமைகின்றன. இயற்கையால் ஈர்க்கப்பட்டு முழுக் குடும்பத்திற்காகவும் உருவாக்கப்பட்ட நம்பிக்கையான மூலிகைப் பராமரிப்பு இதுவாகும்.

The Swadeshi Industrial Works PLC நிறுவனம், இலங்கையின் மூலிகைகளிலான தனிநபர் பராமரிப்புப் பிரிவில் முன்னோடியும் சந்தையின் தலைவருமாகும் என்பதுடன், நாட்டின் முதலிடத்தில் உள்ள மூலிகை வர்த்தகநாமமான சுதேசி கொஹொம்ப ஹேர்பலை தயாரித்து சந்தைப்படுத்துகிறது. 85 ஆண்டுகளாக, ஒரு உண்மையான இலங்கை நிறுவனம் எனும் வகையில், உள்ளூர் மூலிகைகளின் பாரம்பரியத்தை ஆராய்ச்சி, நவீன உற்பத்தித் தரநிலைகள், நெறிமுறை ரீதியான நடைமுறைகள் மற்றும் நுகர்வோர், சமூகங்கள் மற்றும் இயற்கை அன்னையான பூமிக்கான அர்ப்பணிப்புடன் இணைந்து செயற்பட்டு வருகிறது.