காலிமுகத்திடலின் பசுமைப்பகுதியை பேண்தகு வகையில் மேம்படுத்தும் வருண் பிவறேஜஸ் லங்கா மற்றும் SLPMCS
இலங்கையின் முன்னணி காபன்சேர்க்கப்பட்ட மென்பான உற்பத்தியாளரும் பெப்சிக்கோ (Pepsico) நிறுவன உற்பத்தி பானங்களை போத்தலில் அடைத்தல் மற்றும் உத்தியோகபூர்வ விநியோகஸ்தருமான வருண் பிவறேஜஸ் லங்கா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் காலி முகத்திடலில் பிளாஸ்டிக் கழிவினால் மாசடைதலைத் தடுப்பதற்கான ஒரு புதிய முயற்சியை வெற்றிகரமாக ஆரம்பித்துள்ளது.
இலங்கைத் துறைமுக முகாமைத்துவம் மற்றும் ஆலோசனை சேவைகள் (SLPMCS) உடன் இணைந்து வருண் பிவறேஜஸ் லங்கா நிறுவனம் PET பிளாஸ்டிக் போத்தல் சேகரிப்புக்கான தொட்டிகளை (Drop Off Bins) இங்கு நிறுவியுள்ளது.
நிறுவனத்தின் நீடிக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு (ERP) மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை இது மேலும் உறுதியாக்குகின்றது. இந்த ஒப்பந்தத்தில் SLPMCS இன் பிரதம நிறைவேற்று அதிகாரியும் அதன் முகாமைத்துவ பணிப்பாளருமான திரு சூராஜ் கத்துருசிங்க மற்றும் வருண் பிவறேஜஸ் நிறுவன சட்டத்தரணியும் செயலாளரும் மற்றும் நிலைபேறான தன்மைப் பிரிவின் தலைவியுமான திருமதி இறேஷா கும்புருலந்த ஆகியோர் இதில் கைச்சாத்திட்டனர்.
காலி முகத்திடலுக்கு வருகை தரும் மக்களால் கைவிடப்படும் PET பிளாஸ்டிக் கழிவுகளை பொறுப்புடன் அகற்றுதை ஊக்குவிப்பதே இந்த முயற்சியின் நோக்கமாகும். இங்கு சேகரிக்கப்படும் போத்தல்கள் மீள்சுழற்சி செய்யப்படும் என்பதோடு இதன் மூலம் தூய்மையான மற்றும் பசுமையான சூழலை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதே இந்த திட்டமானது. வருண் பீவறேஜஸ் லங்கா நிறுவனத்தின் நிலைபேறான தன்மை தொடர்பான பரந்த இலக்குகளின் ஒரு அங்கமான கழிவுகளை முகாமைத்துவம் செய்வதற்கும் சுற்றுச் சூழல் மாசடைதலைக் குறைப்பதற்கும் மேற்கொள்ளும் முயற்சிகளுடன் இது இணைகின்றது.
இது குறித்து வருண் பிவறேஜஸ் லங்கா நிறுவனத்தின் நாட்டிற்கான தலைவர் திரு.சந்தீப் குமார் கருத்துத் தெரிவிக்கையில், ”இந்த முக்கியமான திட்டத்திற்காக SLPMCS உடன் இணைந்து செயற்படுத்துவதில் நாம் மிக்க மகிழ்ச்சியடைகின்றோம். பிளாஸ்டிக் கழிவுகளை குறைப்பதோடு, காலி முகத்திடலின் அழகைப் பாதுகாப்பதில் இந்தத் திட்டம் முக்கிய பங்கு வகிக்கும். இந்த ஒத்துழைப்பின் மூலம் மீள்சுழற்சி நடைமுறைகளை மேம்படுத்துவதையும், நிலைபேறான கழிவு முகாமைத்துவத்தில் எமது பங்களிப்பைத் தொடர்வதையும் நாம் நோக்கமாகக் கொண்டுள்ளோம்,” என்றார்.
Varun Beverages Lanka ( PVT) LTD நிறுவனத்தின் சட்ட இணக்கம் மற்றும் சுற்றுச்சூழல் பேண்தகு தலைவியும் நிறுவனத்தின் செயலாளருமான சட்டத்தரணி திருமதி இரேஸா கும்புருலந்த நிறுவனத்தின் (ERP) தொடர்பில் இங்கு சுட்டிக்காட்டினார். ”இந்த முயற்சியானது விரிவாக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு (ERP) தொடர்பில் நாம் கொண்டுள்ள உறுதிப்பாடு தொடர்பான அர்பணிப்பை நிரூபிக்கின்றது. PET பிளாஸ்டிக் போத்தல்களை இடுவதற்கு வசதியான இடங்களை வழங்குவதன் மூலம் கழிவுகளை சேகரிப்பதற்கான அடிப்படையை வழங்கி காலி முகத்திடலில் முறையான மீள்சுழற்சி முறையை அறிமுகப்படுத்தி அதன் மூலம் காலி முகத்திடலுக்கு வருகை தரும் மக்களை சுற்றுச் சூழலுக்கு உதவும் வகையிலான சாதகமான மாற்றத்தை ஏற்படுத்துவதை இந்தத் திட்டம் ஊக்குவிக்கின்றது,” என்றார்.
இந்த ஒத்துழைப்பில் தமது அமைப்பின் ஆர்வத்தை வெளிப்படுத்தி கருத்து தெரிவித்த SLPMCS இன் நிதி முகாமையாளர் திரு.சமீர அஸந்த, “இந்த திட்டத்தில் வருண் பீவரேஜஸ் நிறுவனத்துடன் கூட்டிணைவதில் நாம் பெருமை கொள்கின்றோம். ஒன்றாக இணைந்து செயலாற்றுவதன் மூலம் அனைவருக்கும் பொதுவான தூய்மையான மற்றும் பசுமையான காலிமுகத்திடலை உருவாக்க முடியும். அவ்வாறு செய்வதன் மூலம் இந்த முக்கிய அடையாளச் சின்னத்தைப் பாதுகாப்பதோடு மட்டுமன்றி இலங்கை முழுவதிலும் உள்ள சுற்றுச்சூழல் தொடர்பிலும் ஓர் பொறுப்பு ஏற்படுவதற்கு முன்னுதாரணமாகவும் நாம் திகழமுடியும்,” என்றார்.
Varun Beverages Lanka ( PVT) LTD நிறுவனம் கடந்த இரண்டு வருடங்களில் தனது மொத்த பிளாஸ்டிக் விற்பனையில் இருந்து சுமார் 50 வீதம் PET பிளாஸ்டிக் கழிவுகளை வெற்றிகரமாக மீள்சுழற்சி செய்து நீடித்த நிலைபேறான தன்மைக்கான வலுவான சாதனைப் பதிவை ஏற்டுத்தியுள்ளது. அந்த வகையில் Galle Face Green திட்டத்திற்காக SLPMCS உடனான நிறுவனத்தின் கூட்டுறவானது சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதில் அதன் தொடர்ச்சியான அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாக அமைகின்றது.