ஒரு தசாப்தத்தை கொண்டாடும் ‘Xterm’: இலங்கையின் கறையான் ஒழிப்பு தீர்வுகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் Suren Cooke Agencies
Xterm Termite Baiting System ஆனது இலங்கையின் கறையான் கட்டுப்பாட்டு முறைமையை மாற்றியமைத்த 10 வருட நிறைவைக் கொண்டாடுகிறது. இந்த முக்கிய தீர்வானது, 2015 இல் உள்ளூர் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, பாரம்பரிய திரவ இரசாயனப் பயன்பாடுகளை மாற்றி, ராணி கறையான் உட்பட, முழு கறையான் கூட்டத்தையும் அழிக்கும் திறமையான, சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் ஊடுருவிச் செல்லும் தன்மையற்ற அணுகுமுறைக்கு மாற்றியுள்ளது.
நாடு முழுவதும் Xterm இன் வெற்றிகரமான பயன்பாடானது, இலங்கையின் முன்னணி பூச்சிக் கட்டுப்பாடு நிறுவனமான Suren Cooke Agencies மற்றும் Sumitomo Chemical Asia ஆகியவற்றுக்கு இடையே ஏற்பட்ட கூட்டுறவின் மூலம் சாத்தியமானது.
இது குறித்து Suren Cooke Agencies இன் பணிப்பாளர் ஷெரான் குக் (Sheran Cooke) தெரிவிக்கையில், “கறையான் கட்டுப்பாட்டுத் தீர்வு எனும் வகையில் Xterm ஆனது தரை அல்லது அடித்தளங்களை துளையிடுவதற்கான தேவையை நீக்கியுள்ளது.” என்றார்
இலங்கையில் அதிவேகமாக அதிகரித்து வரும் உயரமான கட்டடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் அபார்ட்மென்ட் வளாகங்களில் கறையான்களை வெற்றிகரமாக நிர்வகிப்பதில் Xterm இன் முதல் தசாப்தம் முக்கிய பங்கு வகித்துள்ளது.
இது குறித்து ஷெரான் குக் மேலும் தெரிவிக்கையில், “உயரமான கட்டடங்களில் கறையான் நிர்வாகத்திற்கு நடைமுறைச் சாத்தியமான, ஊடுருசிச் செல்லும் தன்மை அற்ற (non-intrusive) தீர்வை வழங்குவதன் மூலம் Xterm ஒரு முக்கியமான தேவையை பூர்த்தி செய்துள்ளது. அத்துடன், துளையிடுதல் அல்லது கட்டுமான மாற்றங்கள் உள்ளிட்டவை முற்றாக தடை செய்யப்பட்டுள்ள, இலங்கையின் புகழ்பெற்ற அடையாளச் சின்னங்கள் மற்றும் தொல்பொருள் ரீதியாகப் பாதுகாக்கப்பட்ட தளங்களைப் பாதுகாப்பதில் இந்த தீர்வின் மதிப்பு நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தக் காரணிகளால், கடந்த 10 வருடங்களாக இலங்கைச் சந்தை இந்த தயாரிப்பை சாதகமான வகையில் ஏற்றுக்கொண்டுள்ளது.” என்றார்.
இந்தப் பூச்சிக் கட்டுப்பாட்டு முறையானது களஞ்சியசாலைகள் மற்றும் உணவுத் தொழிற்சாலைகளின் கறையான் முகாமைத்துவத்தில் மிகவும் வெற்றிகரமாக செயற்பட்டுள்ளது. ஏனெனில், பாரம்பரியமான திரவப் பயன்பாட்டு முறையின் போது, குறித்த வளாகத்தை விட்டு அனைவரும் வெளியேற வேண்டிய அவசியம் ஏற்படும். ஆனால் இந்த முறையில் அன்றாடச் செயற்பாடுகளுக்கு எவ்விதமான தடையும் ஏற்படுவதில்லை.
Xterm Termite Bating, ஒவ்வொரு வருடமும் பரவும் பூச்சிகளை கட்டுப்படுத்துவதில் அதிகளவிலான இரசாயனங்கள் வெளியேறுவதைத் தடுப்பதன் மூலம் நீண்டகால நிலைபேறான தன்மை கொண்ட நன்மைகளையும் வழங்கியுள்ளது. இதன் மூலம் சூழல் பாதுகாப்புக்கு ஒரு சாதகமான பங்களிப்பை அது மேற்கொள்கிறது.
Suren Cooke Agencies மற்றும் Sumitomo Chemical Asia ஆகிய இரு நிறுவனங்களும் மனிதர்களையும் சூழலையும் பாதுகாக்கும் தயாரிப்புகளை வழங்குவது தொடர்பான ஒரு பொதுவான உறுதிப்பாட்டைக் கொண்டுள்ளன. கறையான் கட்டுப்பாட்டை ஈர்ப்பதில் Xterm ஐ மிகவும் பயனுள்ளதாக மாற்றும் வகையிலான காலப்போக்குடனான மேம்பாடுகள் அதில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன், Sumitomo Chemical Asia உடனான Suren Cooke Agencies நிறுவனத்தின் கூட்டணியானது, இலங்கையின் பூச்சிக் கட்டுப்பாட்டு வல்லுநர்களுக்கு அதன் பாதுகாப்பான மற்றும் பயனுள்ள பயன்பாடு குறித்த பயிற்சிகளை வழங்குவதன் மூலம் உள்ளூர் நிபுணத்துவத்தை உருவாக்குவதற்குப் பங்களித்துள்ளது. எதிர்காலத்தில், மேலும் புத்தாக்கமான மற்றும் சூழல் நட்பு பூச்சிக் கட்டுப்பாட்டுத் தயாரிப்புகளைச் சந்தைக்கு வழங்குவதற்காக இந்த கூட்டணியானது மேலும் விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் இப்பொருளைப் பயன்படுத்த அங்கீகரிக்கப்பட்ட அனுமதி பெற்ற வல்லுநர்களில் Suren Cooke Agencies, John Piper International (Pvt) Ltd., Ultrakleen (Pvt) Ltd Pest Control Division, Abans Pest Control, Eco Services (Pvt) Ltd. ஆகிய நிறுவனங்கள் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.