ஒன்லைன் முதலீட்டாளர்களுக்கான முன்னோடி தளமான ’Athena’ வை அறிமுகப்படுத்தும் Asia Securities
உலகளாவிய வர்த்தக தீர்வான TradingView-ஐ முழுமையாக ஒருங்கிணைத்த புத்தாக்கமான தீர்வு

இலங்கையின் முன்னணி பங்குப் பரிமாற்ற முகவரான Asia Securities, 200க்கும் மேற்பட்ட நாடுகளில் 100 மில்லியனுக்கும் அதிகமான முதலீட்டாளர்களால் பயன்படுத்தப்படும் ஒன்லைன் வர்த்தக மற்றும் பகுப்பாய்வு தளமும் மற்றும் சமூக ஊடகமுமான TradingView உடன் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட, இலங்கையின் முதலாவதும் ஒரேயொரு பங்குப் பரிமாற்ற வர்த்தக தளமான ‘Athena’ வினை அறிமுகப்படுத்தியுள்ளது.
Athena தளமானது மேம்பட்ட அட்டவணைகள், தேவைக்கேற்ற பகுப்பாய்வுகள் மற்றும் நேரடி வணிகச் செயற்பாடுகளை முன்னெடுக்க வசதியாக அமைக்கப்பட்டுள்ளது. Asia Securities நிறுவனத்தின் விருது பெற்ற ஆராய்ச்சி மற்றும் சந்தை நுண்ணறிவுத் தகவல்களுடன் இணைந்து, எளிதான மற்றும் நவீன இடைமுகத்துடன் இது அமைந்துள்ளது. இது இலங்கையின் மூலதனச் சந்தை வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது. முதலீட்டாளர்கள் ஒரே தளத்தில் உலகத் தரத்திலான கருவிகளுடன் முன்னெப்போதுமில்லாத கட்டுப்பாடையும், விரைவான அணுகலையும் பெறுகின்றனர்.

இதன் அறிமுக விழாவில் உரையாற்றிய Asia Securities இன் தலைவர் துமித் பெர்ணான்டோ, இந்த தளத்தின் உருவாக்கத்தின் பின்னணியில் உள்ள தொலைநோக்குப் பார்வையை எடுத்துரைத்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “இவ்வாறான நவீன பங்குப் பரிமாற்ற தளத்தை இலங்கையில் முதலாவதாக அறிமுகப்படுத்துவதில் Asia Secutiries மகிழ்ச்சியடைகின்றது. எமது அடிப்படை விழுமியங்களான நுண்ணறிவு மற்றும் புத்தாக்கத்தினை எமது வாடிக்கையாளர்களுக்கு வழங்க Athena தளமானது வடிவமைக்கப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளில் துடிப்பான பங்குச் சந்தையை உருவாக்குவதில் உள்நாட்டு முதலீட்டாளர்கள் இணையற்ற பங்களிப்பை வழங்கியுள்ளனர். உள்நாட்டு முதலீட்டாளர்களின் பங்கை நாங்கள் எப்போதும் மதிக்கின்றோம். மேலும், அவர்களின் மூலதனச் சந்தை பயணத்தில் இன்னும் பயனுள்ள கருவிகளைக் கொண்டு அவர்களுக்கு ஒத்துழைப்பை வழங்க விரும்புகிறோம். வாடிக்கையாளர்களுக்கான மிக உயர்ந்த தரமான சேவை, நேர்மை மற்றும் புத்தாக்கங்களில் முதலீடு செய்வதன் மூலம் இலங்கையின் மூலதனச் சந்தைகளை முன்னேற்றுவதற்கு நாங்கள் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம். Athena தளமானது அதைச் சரியாகச் செய்கிறது.”என்றார்.
இதற்கு முன்னர், சுயாதீன வர்த்தகத்தில் ஈடுபடுவோர், ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கும், ஒன்லைனில் வர்த்தகம் செய்யவும் பல்வேறுபட்ட கருவிகளைப் பயன்படுத்த வேண்டியிருந்தது. Athena அந்த சிக்கலை நீக்கி, கையடக்கத் தொலைபேசி மற்றும் இணைய வர்த்தகம், மேம்பட்ட ஓடர்களின் பதிவு, தனிப்பயனாக்கப்பட்ட பார்வையிடல் பட்டியல், நேரடி போர்ட்ஃபோலியோ கண்காணிப்பு, சந்தை ஆழமான பார்வை, தனிப்பயனாக்கப்பட்ட அறிவிப்புகள் (mobile and web trading, advanced order placement, custom watchlists, real-time portfolio monitoring, market depth views, personalized alerts) ஆகிய அனைத்தையும் ஒரே இடத்தில் வழங்குகிறது. இந்த தளத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம், இலங்கையின் மிகவும் முன்னோக்கிய சிந்தனையுடைய முதலீட்டு நிறுவனமாக Asia Securities தன்னை நிலைநிறுத்தி, நாட்டின் மூலதனச் சந்தைகளை நவீனப்படுத்தும் தனது பணி நோக்கத்தையும் முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்புகளையும் மேம்படுத்துகிறது.
Athena அறிமுகமானது Asia Securities நிறுவனத்தின் இவ்வாண்டின் பல்வேறு சாதனைகளின் ஒரு உச்சமாகும். Asia Securities ஆனது, கொழும்பு பங்குச் சந்தையில் மொத்தப்புரள்வு சந்தை பங்குகளின் அடிப்படையில் இலங்கையின் நம்பர் 1 பங்கு பரிமாற்ற முகவராக இடம்பிடித்ததுடன், இதேபோன்ற சாதனைகளை கடந்த சில வருடங்களாக தொடர்கின்றது. அத்துடன், 6 ஆவது முறையாகவும் FinanceAsia Awards 2025 இல் “Best Stockbroker – Sri Lanka” விருதையும், CFA Society of Sri Lanka Capital Market Awards 2025 இல் “Best Stockbroking Research Team” விருதையும் நிறுவனம் பெற்றது. இந்த சாதனைகள் நிறுவனத்தின் 35ஆவது ஆண்டு நிறைவுடன் இணைந்ததாக அமைகின்றமையானது, இத்துறையில் அதன் நீடித்த தலைமைத்துவத்தை வலுப்படுத்துகின்றன.
Athena தளத்தை தற்போது asecathena.asiasecurities.lk எனும் இணையத்தளம் மூலம் அணுக முடியும்.