
ஐந்தாண்டு புத்தாக்க கொண்டாட்டம்: பணமற்ற இலங்கைக்கு வழி வகுக்கும் Marx – CrossBorder Payments
Marx எனும் வர்த்தகநாமத்தரின் கீழ் செயற்படும் CrossBorder Payments (Pvt) Ltd, இலங்கையின் நிதி தொழில்நுட்ப (fintech) துறையில் ஒரு முன்னணி சக்தியாக விளங்குகின்றது. நிறுவனம் அதன் ஐந்தாவது வருட நிறைவை பெருமையுடன் கொண்டாடும் இவ்வேளையில் படைப்பாற்றல், ஈடுகொடுக்கும் தன்மை, புரட்சிகர செல்வாக்கு ஆகிய அதன் கடந்து வந்த பாதையைக் காண்பிக்கிறது. நிறுவனம் அதன் ஆரம்பத்திலிருந்து ஒரு நம்பிக்கைக்குரிய ஆரம்ப நிலை வணிகமாக இருந்து தற்போது ஒரு முன்னோடியான நிதி தொழில்நுட்பமாக மாறியுள்ளது. அனைத்து மட்டத்திலான நிறுவனங்களுக்கும் இது வசதி வழங்குவதோடு, நாட்டின் டிஜிட்டல் கொடுப்பனவு செலுத்தலில் புரட்சியை ஏற்படுத்துகிறது.
இந்த மைல்கல் தொடர்பில் கருத்து வெளியிட்ட Marx CrossBorder Payments நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரோஹித பெரேரா, “டிஜிட்டல் மாற்றம் என்பது இனியும் ஒரு ஆடம்பரமான ஒன்றாக இருக்காது. அது ஒரு அவசியமான ஒன்றாகும். இலங்கை பணத்தால் இயக்கப்படும் அதே வேளையில், உலகளாவிய பொருளாதாரம் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை நோக்கி வேகமாக நகர்கிறது. ஆக்கபூர்வமான, எளிதில் அணுகக்கூடிய கட்டணத் தீர்வுகளை வழங்குவதன் மூலம் இந்த இடைவெளியைக் குறைக்க Marx CrossBorder Payments தன்னை அர்ப்பணித்துள்ளது. உலகில் முதன்முதலில் உருவாக்கப்பட்ட அனைத்தையும் ஒரே புள்ளியில் இணைக்கும் எமது விற்பனைத் தொகுதி கட்டமைப்பு (all-in-one point-of-sale system), வர்த்தகம் மற்றும் வாணிபத்தில் புரட்சியை ஏற்படுத்தும் என்பதுடன், டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் உலகில், எமது பொருளாதாரத்தின் அடித்தளமாக காணப்படும் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்கள் (SMEs) வளர்ச்சியடையத் தேவையான வளங்களைக் கொண்டிருப்பதையும் உறுதி செய்யும்.” என்றார்.
Marx CrossBorder Payments கடந்த ஐந்து வருடங்களாக டிஜிட்டல் புத்தாக்க கண்டுபிடிப்புகளில் முன்னணியில் திகழ்வதோடு, பணமில்லா சமூகத்தை உருவாக்குவது தொடர்பான இலங்கையின் மாற்றத்திற்கு அவசியமாக உள்ளது. National ICT Awards (2022, 2023, 2024), Innovate Lanka Awards (2022), the South Asia Startup ICT Award 2023 (Top 5) போன்ற பல்வேறு கௌரவங்களை இந்நிறுவனம் பெற்றுள்ளது. 2023 ஆம் ஆண்டு Asia Pacific ICT Alliance Awards விருதுகளுக்கு இந்நிறுவனம் பரிந்துரை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் இந்த சாதனைகள் தொழில்நுட்ப புத்தாக்க கண்டுபிடிப்பு மற்றும் நிதி உள்ளீர்ப்பு தொடர்பில் அது கொண்டுள்ள உறுதியான அர்ப்பணிப்பை காண்பிக்கின்றன.
எந்தவொரு iOS அல்லது Android சாதனத்தையும் ஒரு சக்திவாய்ந்த விற்பனை கட்டமைப்பாக மாற்றும் all-in-one point-of-sale (POS) தீர்வை நிறுவனம் உருவாக்கியுள்ளது. இவ்வாறான தொழில்நுட்பங்கள் மூலம் தமது வணிகங்களை தனியக்கமாக்குவதற்கு அதிக முதலீடுகள் தேவைப்படுகின்ற சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்கள் (SMEs) எதிர்கொள்ளும் முக்கியமான சிரமங்களை கருத்தில் கொண்டு இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புரட்சிகரமான தொழில்நுட்பத்தில் எட்டு உள்ளூர் மற்றும் சர்வதேச கொடுப்பனவு முறைகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இது சிறிய நிறுவனங்களுக்கு முக்கியமான பாரிய விற்பனையாளர்கள் பெறுகின்ற அதே தொழில்நுட்ப நன்மைகளை வழங்குகிறது. இலங்கையை பணமில்லா சமூகமாக மாற்றும் வகையில், டிஜிட்டல் கொள்வனவை ஊக்குவிப்பதற்காக, தனித்தனியாக வெகுமதி அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள நிறுவனத்தின் AI மூலம் இயங்கும் வாடிக்கையாளர் விசுவாச (loyalty) திட்டமானது, வாடிக்கையாளர்கள் தாங்கள் பெறக் கூடிய சலுகைகள் மற்றும் வெகுமதிகளை ஒரே தளத்தில் பார்வையிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இது பற்றி மேலும் தெரிவித்த ரோஹித பெரேரா, “அனைவருக்கும் சமமான தளமொன்றை அமைப்பதே எமது குறிக்கோளாகும். இலங்கையில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்கள் தங்கள் வாடிக்கையாளர்களை தக்கவைப்பதிலும், தங்களுக்கான இடத்தை பெறுவதிலும் அடிக்கடி சவால்களை எதிர்கொள்கின்றனர். எமது AI இனால் இயக்கப்படும் loyalty திட்டம் மற்றும் தங்குதடையற்ற point-of-sale கட்டமைப்பு ஆகியன வணிகங்களை திறம்பட முன்னெடுத்துச் செல்ல உதவுகின்றன. அதே நேரத்தில் ஒவ்வொரு பரிவர்த்தனையும் வாடிக்கையாளர்களுக்கு மதிப்புகளை இணைப்பதை உறுதி செய்கிறது. எதிர்காலத்தில் வணிக நிறுவனங்கள் இவ்வாறுதான் பயணிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அப்பாதையில் முன்னணியில் இருப்பது தொடர்பில் நாம் பெருமைப்படுகிறோம்.” என்றார்.
பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் சுற்றுலாத் துறை தொடர்பான அரசாங்கத்தின் திட்டங்களுக்கு ஆதரவளிப்பதற்கான நிறுவனத்தின் மூலோபாய முயற்சியின் ஒரு அங்கமாக, உணவக கொள்வனவு அனுபவங்களை எளிமையாக்கும் நோக்கில், ஸ்மார்ட் உணவக QR மெனு மற்றும் டேபிள் முன்பதிவு கட்டமைப்பான MarxDine ஐயும் MarxCrossBorder Payments அறிமுகப்படுத்துகிறது. உணவு மற்றும் பானத் துறையானது மிக விரைவாக டிஜிட்டல் தொழில்நுட்பங்களை தழுவுகின்றது என்பதை உலகளாவிய புள்ளிவிபரங்கள் மூலம் அறியலாம். 88% ஆன உணவகங்கள் டிஜிட்டல் மெனுக்களை செயற்படுத்துவது பற்றி யோசிக்கின்றன என்பதுடன், முக்கியமாக 45% வாடிக்கையாளர்கள் தற்போது ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தி தேடவும், ஓர்டர்களை வழங்கவும் விரும்புகிறார்கள். அத்துடன் கொவிட் தொற்றுநோய்க்குப் பின்னரும், தொடுகையற்ற கொடுப்பனவு முறையைப் பயன்படுத்துவதைத் தொடர்வதற்கு விரும்புவதாக ஆய்வுக்குட்படுத்தப்பட்டவர்களில் 74% ஆனோர் கூறுகின்றனர். 75% ஆனோர் உற்பத்தித்திறனை மேம்படுத்த டிஜிட்டல் புத்தாக்க கண்டுபிடிப்புகளை ஆர்வமாகப் பயன்படுத்துவதாலும், 92% ஆனோர் வழக்கமான முறைகளுடன் QR மெனுக்களை இணைத்திருப்பதாலும், உணவகங்கள் இதில் ஆர்வமாக இருப்பதை இவை காண்பிக்கின்றன. இதன் மூலமான நன்மைகள் வெளிப்படையானவையாகும். QR குறியீடு மூலமான ஓர்டர் செய்யும் கட்டமைப்புகளால் மாத்திரமே செலவுகளை 30% வரை குறைக்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளன. காரணம் அவற்றிற்கு குறைந்த மனித முயற்சியே அவசியமாகும் என்பதுடன், குறைவான மெனு புதுப்பிப்புகளே தேவைப்படுகின்றன. செயற்பாட்டுத் திறன் மற்றும் வாடிக்கையாளர் தொடர்புகளை மேம்படுத்துவதற்கான ஒரு தீர்வாக MarxDine காணப்படுகின்றது. அத்துடன் இந்த மேம்பட்ட அம்சங்கள் உணவு மற்றும் பானத் துறையின் டிஜிட்டல் மாற்றத்திற்கான தேவையை எடுத்துக்காட்டுகின்றன.
இலங்கையின் தேசிய நிதி தொழில்நுட்ப நோக்கங்களுக்கு இணங்கும் வகையில், Marx CrossBorder Payments ஆனது நிதி உள்ளீர்ப்பை ஊக்குவிப்பதற்கும் LANKAQR கட்டமைப்பை செயற்படுத்துவதற்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், வணிக நிறுவனங்களுக்கு அதிநவீன தீர்வுகளை வழங்குவதன் மூலம் இலங்கையானது விரைவான டிஜிட்டல் தழுவலை ஏற்பதற்கு நிறுவனம் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது.
சர்வதேச நிலவரங்கள் மற்றும் போக்குகள் டிஜிட்டல் கொடுப்பனவுகளை நோக்கியதாக மீளமுடியாத மாற்றத்தைக் காண்பிக்கின்ற போதிலும், இலங்கை இன்னும் பண பரிவர்த்தனைகளை அதிகளவில் நம்பியுள்ளது. எனவே இதன் அவசியத்தை அங்கீகரித்துள்ள அரசாங்கத்தால், நிதி தொழில்நுட்ப தீர்வுகள் மும்முரமாக ஊக்குவிக்கப்படுகின்றன. இந்த திட்டங்களைப் பயன்படுத்துவதன் மூலம், Marx CrossBorder Payments ஆனது நுகர்வோர் மற்றும் வணிகங்கள் ஆகிய இரண்டையும் மேம்படுத்தி, பரிவர்த்தனைகளை நெறிப்படுத்துவதன் மூலம் எளிமையையும் பாதுகாப்பையும் பேணுகின்றது.
எதிர்காலத்தில், Marx CrossBorder Payments அதன் MPOS தீர்வுகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது. குறிப்பாக அவை சில்லறை விற்பனை மற்றும் சுற்றுலாத் துறைகளில் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்காக உருவாக்கப்படவுள்ளன. இந்த மேம்பாடானது, சிறிய சில்லறை விற்பனையாளர்களை தேசிய அளவில் பெரிய நிறுவனங்களுடன் சமமான நிலையில் வைப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் மாற்றத்தை ஊக்குவிக்கும்.
ரோஹித பெரேரா மேலும் தெரிவிக்கையில், “நாம் எதிர்காலத்தை மிக உன்னிப்பாக அவதானிப்பதோடு, நாம் அதை உருவாக்குகிறோம். தங்குதடையற்ற பரிவர்த்தனைகளுக்கு வாய்ப்பை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், எமது அதிநவீன நிதித் தொழில்நுட்பங்கள் இலங்கையில் வணிக நடைமுறைகளில் புரட்சியையும் ஏற்படுத்தி வருகின்றன. இது ஒரு ஆரம்பம் மட்டுமே.” என்றார்.
Marx CrossBorder Payments மற்றும் அதன் புரட்சிகரமான புத்தாக்க கண்டுபிடிப்புகள் தொடர்பான மேலதிக விபரங்களுக்கு, www.marx.lk மற்றும் www.marxdine.com இணையத்தளங்களை பார்வையிடவும்.
END