ஏப்ரல் மாத சலுகையாக ரூ. 125,000 வரை இலவச எரிபொருளை வழங்கும் Nissan Sri Lanka
Associated Motorways (AMW) நிறுவனத்தினால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் Nissan Sri Lanka, இந்த ஏப்ரல் மாதம் முழுவதும் Nissan Magnite மற்றும் Nissan Almera வாகனங்களை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலப்பகுதியை கொண்ட ‘இலவச எரிபொருள்’ சலுகையை வழங்குவதோடு, அவர்கள் வாகனத்தை செலுத்த ஆரம்பித்த தருணத்திலிருந்தே வாகனத்தின் மூலமான சிறந்த மதிப்பையும் மன நிம்மதியையும் வழங்குகிறது.
2026 ஏப்ரல் 01 – 30 வரை செல்லுபடியாகும் இந்த பிரசாரத்தின் மூலம், LOLC Finance Leasing நிறுவனத்தின் ஊடாக கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 125,000 பெறுமதியான எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும். அதேவேளை, AMW ஊடாக நேரடியாக கொள்வனவு செய்கின்ற அல்லது ஏனைய நிதி நிறுவனங்களின் ஊடாக கொள்வனவு செய்வோர் ரூ. 75,000 பெறுமதியான எரிபொருளை பெறுவார்கள். இந்த பிரத்தியேக நன்மையானது Dialog Axiata PLC நிறுவனத்துடனான கூட்டாண்மையின் கீழ் எரிபொருள் Fuel Touch Card ஊடாக வழங்கப்படுவதுடன், நாடு முழுவதும் எரிபொருளை வசதியாக பெற்றுக் கொள்வதையும் இது உறுதி செய்கிறது.
Nissan Magnite ஆனது இலங்கையில் 5,000 இற்கும் மேற்பட்ட விற்பனையை பதிவு செய்து, சந்தையில் தொடர்ச்சியான வலுவான முன்னிலையைப் பெற்றுள்ளதுடன், 2025 ஆம் ஆண்டில் முதலிடத்தில் உள்ள ‘Class A SUV’ வாகனமாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. பாதுகாப்பை மையமாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ள Magnite வாகனம், 5 நட்சத்திர Global NCAP பாதுகாப்பு மதிப்பீட்டை கொண்டுள்ளது. இது வாகனத்தை செலுத்துபவர் மற்றும் பயணிகளின் பாதுகாப்பு தொடர்பான Nissan நிறுவனத்தின் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்துகிறது.
வாடிக்கையாளர்கள் Nissan வாகன உரிமையாளருக்கான பரந்துபட்ட வாக்குறுதியின் கீழான நன்மைகளையும் பெறுகிறார்கள். இதில் 3 வருடங்கள் அல்லது 100,000 கி.மீ. உத்தரவாதம், Nissan பயிற்சி பெற்ற தொழில்நுட்ப வல்லுநர்களின் சேவை மற்றும் பராமரிப்பு, அசல் Nissan உதிரிப்பாகங்கள் மற்றும் உபகரணங்களை பெற்றுக் கொள்வதற்கான வசதி மற்றும் நம்பகமான நாடளாவிய விற்பனைக்குப் பின்னரான ஆதரவு ஆகியனவும் இதில் உள்ளடங்குகின்றன.
எரிபொருள் செலவுகளை ஆரம்பத்திலேயே ஈடுசெய்வதன் மூலம், Nissan வர்த்தகநாமத்தின் செயல்திறன், வசதி, நம்பகத்தன்மையை அனுபவிக்கும் அதே வேளையில், உடனடி சேமிப்பை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ள இந்த பிரசாரம் வழி வகுக்கிறது.
யூனியன் பிளேஸ் (கொழும்பு), மாத்தறை, குருணாகல், கண்டி, நீர்கொழும்பு ஆகிய இடங்களில் அமைந்துள்ள Nissan காட்சியறைகளுக்கு வருகை தந்து, வாகனங்களை நேரில் பார்வையிடுவதுடன், இந்த வரையறுக்கப்பட்ட காலத்திற்கான சலுகையை பயன்படுத்திக் கொள்ளுமாறு வாடிக்கையாளர்கள் அழைக்கப்படுகிறார்கள். ஏப்ரல் மாதத்திற்குள் மேற்கொள்ளப்படும் முன்பதிவுகளுக்கு மாத்திரமே இது செல்லுபடியாகும் என்பதுடன், கையிருப்பில் உள்ள வரையறுக்கப்பட்ட வாகனங்களுக்கு மாத்திரமே இது பொருந்தும் என்பதால், உடனடியான விநியோகத்தை பெற்றுக்கொள்ள வாடிக்கையாளர்கள் இன்றே விரையுமாறு ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
மேலதிக தகவல்களுக்கு, வாடிக்கையாளர்கள் தமக்கு அருகிலுள்ள Nissan காட்சியறைக்கு செல்லலாம் அல்லது AMW விற்பனை குழுவினரை தொடர்பு கொள்ளலாம்.