உள்ளூர் HARDWARE துறையில் வெளிப்படைத்தன்மையான விலை தொடர்பில் முன்னிலை வகிக்கும் Swisstek
இலங்கையின் கட்டுமானத் துறையில் முன்னணி வர்த்தகநாமமான Swisstek, மறைவான விலை அதிகரிப்பு மற்றும் அதிக தள்ளுபடிகள் நிறைந்த சந்தையில், நியாயமான மற்றும் வெளிப்படைத்தன்மையை நோக்கி நுகர்வோர் முன்னேறிச் செல்வதற்கான பாதையை ஏற்படுத்தி வருகிறது. நாட்டின் HARDWARE வணிக நடவடிக்கையில், தயாரிப்பு பொதியிலுள்ள உச்சபட்ச சில்லறை விலையை (MRP) சூட்சுமமாக உயர்த்துவதன் மூலம், பாரிய தள்ளுபடிகளை வழங்குவதாக காண்பித்து வாடிக்கையாளர்களை ஏமாற்றுவதை காணலாம். இத்தகைய தவறான நடைமுறைகள் இடம்பெற்று வரும் சந்தையில், நுகர்வோர் மற்றும் விற்பனையாளர்கள் மத்தியில் சமமான பெறுமதியை வழங்குவதற்கு Swisstek நடவடிக்கை எடுத்துள்ளது.
நீண்ட காலமாக, நுகர்வோர் மிகவும் அதிக உச்சபட்ச சில்லறை விலை கொண்ட தயாரிப்புகளுக்கு பழகியுள்ளதோடு, அவை 30%, 40%, 60% போன்ற தள்ளுபடிகளுடன் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால், பாரிய தள்ளுபடி போன்று உண்மையில் தெரிவது விலை நிர்ணயத்தின் உத்தியாகும். இந்த உச்சபட்ச சில்லறை விலை முறைகள் உத்தியாக உருவாக்கப்பட்டுள்ளதோடு, இதன் மூலம் விற்பனை முகவர்கள் தள்ளுபடிகளை தங்களுக்கேற்ப அமைத்து, அதிக இலாபம் ஈட்டுவதற்கான வாய்ப்பை பெறுகிறார்கள். உதாரணமாக, ஒரு நுகர்வோற்கு தயாரிப்பொன்றுக்கு 35% தள்ளுபடி கிடைக்கக்கூடிய நிலையில், அதே தயாரிப்பிற்கு வேறு ஒரு நுகர்வோரிற்கு 15% தள்ளுபடி மட்டுமே கிடைக்கக்கூடும். இதற்குக் காரணம், முகவரின் செலவுகளும், உயர்வான உச்சபட்ச சில்லறை விலைக்கும் இடையிலான பாரிய வித்தியாசமாகும். இந்த செயன்முறை காரணமாக, நுகர்வோருக்கு அவர்கள் கொள்வனவு செய்யும் தயாரிப்பின் உண்மையான பெறுமதி குறித்த தெளிவான புரிதல் இருப்பதில்லை.
Swisstek இத்தகைய விலை நிர்ணய முறைகளுக்கு எதிராக உறுதியாக நிற்பதோடு, எப்போதும் வெளிப்படைத்தன்மையை பாதுகாப்பது தொடர்பில் செயற்பட்டு வருகிறது. Swisstek இன் Tile Adhesive தயாரிப்புகளின் உச்சபட்ச சில்லறை விலையானது, தற்போதைய சந்தையில் காணப்படும் விலைகளிலும் பார்க்க மிகவும் குறைவு என்பதோடு, தொழில்துறையில் காணப்படும் ஏனைய விலை நிர்ணய நடைமுறைகளிலும் பார்க்க மாற்றமானதாகும். Swisstek Super Adhesive தற்போது ரூ.1,699 எனும் உச்சபட்ச சில்லறை விலையில் விற்கப்படுவதோடு, இது சந்தையில் காணபப்டும் ஏனைய போட்டி நிறுவனங்களின் விலைகளிலும் பார்க்க குறைவானதாகும். ஏனைய நிறுவனங்களின் பெரும்பாலான தயாரிப்புகளின் விலை ரூ. 2,000 இற்கும் அதிகமாக காணப்படுகின்றன.
Swisstek Ceylon PLC நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் தமிந்த பெரேரா இதுபற்றித் தெரிவிக்கையில், “ஒரு நுகர்வோர் தயாரிப்பொன்றுக்கு பணம் செலுத்தும் போது, அந்த பணத்தின் பெரும்பாலான பகுதி தயாரிப்புக்கே செலுத்தப்படவேண்டும். சில்லறை விற்பனையாளர், விநியோகஸ்தர் மற்றும் உற்பத்தியாளருக்கு அதில் நியாயமான பங்கு ஒதுக்கப்பட வேண்டும். ஆனால் பாரிய வகையில் காண்பிக்கப்படுகின்ற, பெரும்பாலும் பிழையாக வழிநடத்தப்படும் சிறிய தள்ளுபடிகளானது, தற்காலத்தில் வாடிக்கையாளர்களை ஏமாற்றும் ஒரு நடவடிக்கையாக இருந்து வருகிறது. Swisstek ஆகிய நாம், எம்மிடம் நுகர்வோர் தயாரிப்பை கொள்வனவு செய்யும்போது, அவர்கள் Swisstek தயாரிப்பின் தரத்திற்கும் நம்பகத்தன்மைக்கும் பணம் செலுத்துகிறார்கள் என்பதை உறுதிப்படுத்துவதோடு, செயற்கையாக அதிகரிக்கப்பட்ட விலைக்கு அல்ல என்பதையும் உறுதிப்படுத்துகிறோம்.” என்றார்.
Swisstek நிறுவனம் தமது வாடிக்கையாளர்களுக்கு மாத்திரமன்றி, விற்பனை முகவர்கள் மத்தியிலும் வெளிப்படைத்தன்மையை அடிப்படையாகக் கொண்ட செயற்பாடுகளை பின்பற்றுகிறது. அவர்கள் நியாயமான, சட்டபூர்வமான கட்டமைப்புக்குள் இயங்குகிறார்கள் என்பதை இது உறுதிப்படுத்துகிறது. இதன் மூலம், வாடிக்கையாளர்களுக்கு நிலையான விலைகளை வழங்கவும், Swisstek தயாரிப்பு தொடர்பான அவர்களுடைய நம்பிக்கையை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.
இத்தகைய நீண்ட காலமாக நிலவிவரும் விலை மோசடி நடைமுறைகளை எதிர்க்கும் பணியானது சுலபமானது அல்ல என்பதை Swisstek நன்கு அறிந்துள்ளது. ஆயினும், நம்பிக்கையின் மீது கட்டமைக்கப்பட்ட ஒரு வர்த்தகநாமமான SWISSTEK, எடுத்து நடக்க வேண்டிய ஒரே பாதை இதுவேயாகும் என நம்புகிறது. தயாரிப்புகளின் விலைகள் தொடர்பில் கவனமாக செயற்படுமாறு வாடிக்கையாளர்களிடம் Swisstek வேண்டுகோள் விடுப்பதோடு, இலங்கையின் HARDWARE துறையானது மேம்பட்டுவரும் நிலையில், வெளிப்படையான விலை நிர்ணயம் தொடர்பான Swisstek நிறுவனத்தின் தலைமைத்துவமானது, அனைவருக்கும் பாதுகாப்பான சந்தையை உருவாக்க வழிகாட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.