உள்ளூர் வாகனத் தொழில்துறையை மேம்படுத்த உறுதிபூண்டுள்ளDouglas & Sons மற்றும் Yuasa Asia

ஜப்பானின் உலகப் புகழ்பெற்ற பெட்டரி வர்த்தகநாமங்களில் ஒன்றான Yuasa மற்றும் அதன் இலங்கையின் ஒரே விநியோகஸ்தரான Douglas & Sons (Pvt) Ltd (டக்ளஸ் அன்ட் சன்ஸ் – DSL), தங்களது நீண்டகால கூட்டாண்மையையும் நாட்டின் வாகனத் துறையை முன்னேற்றும் அர்ப்பணிப்பையும் மீண்டும் உறுதிப்படுத்தும் நிகழ்வை அண்மையில் முன்னெடுத்திருந்தது. நாடு முழுவதும் பரந்துபட்டு காணப்படும் விநியோகஸ்தர்கள் பங்கேற்ற இந்நிகழ்வானது, இரு நிறுவனங்களுக்கும் இடையில் 30 வருடங்களாக நீடித்து வரும் வலுவான கூட்டுறவை மேலும் வலுவூட்டியது.

Douglas & Sons நிறுவனத் தலைவரும் அதன் முகாமைத்துவ பணிப்பாளருமான சரோஜ் பெரேரா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பணிப்பாளர் சபை உறுப்பினர்களான ஜயேந்திர பிணிதியபத்திரகே (பிரதி முகாமைத்துவ பணிப்பாளர்), சுரேன் ராஜநாதன் (குழும நிறைவேற்றுப் பணிப்பாளர்), சிறிமல் தாபரே (பணிப்பாளர்) உள்ளிட்டோர் பங்கேற்றனர். GS Yuasa International நிறுவனத்தின் வெளிநாட்டு விற்பனைப் பிரிவைச் சேர்ந்த Takaomi Matsuzaki (பொது முகாமையாளர்) மற்றும் Sayaka Iguchi உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இதில் பங்குபற்றியிருந்தனர். அவர்களது பங்குபற்றுதலானது இந்த முக்கிய தருணத்தின் மதிப்பையும் இலங்கையின் வாகனத் துறைக்கான ஒத்துழைப்பையும், DSL நிறுவனத்துடனான தொடர்ச்சியான கூட்டாண்மைக்கான அர்ப்பணிப்பையையும் வலியுறுத்தியது.
Yuasa வர்த்தகநாமம், உலகளாவிய ரீதியில் நம்பிக்கைக்குரிய வர்த்தகநாமமாக விளங்குவதோடு, Toyota, Honda, Suzuki போன்ற முன்னணி வாகன உற்பத்தியாளர்களுக்கு OEM பெட்டரி விநியோகஸ்தராகவும் விளங்குகிறது. சிறந்த செயல்திறன், நீடித்த தன்மை மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றிற்கு பெயர் பெற்று விளங்கும் Yuasa, இலங்கையிலும் வாகன சாரதிகளின் நம்பிக்கைக்குரிய தெரிவாக இருந்து வருகிறது. வாகனத்தின் வகைகள் மற்றும் மாதிரிகளுக்கு ஏற்ற வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட தயாரிப்புகளை அது வழங்கி வருகிறது.

Yuasa உலகளாவிய நற்பெயரைக் கொண்ட ஒரு வர்த்தகநாமம் மாத்திரமன்றி, தொடர்ச்சியான நம்பகத்தன்மை மற்றும் செயல்திறனை வழங்கும் வர்த்தகநாமம் என்பது குறிப்பிடத்தக்கது. முகவர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் விசுவாசத்தின் காரணமாக, இந்த நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துவதற்கும், இலங்கை முழுவதும் Yuasa வர்த்தகாநமத்தின் இருப்பை விரிவுபடுத்துவதற்குமான தொடர்ச்சியான அர்ப்பணிப்புடன், பல ஆண்டுகளாக இந்த கூட்டாண்மை வலுப்பெற்று வருகின்றது.
இலங்கைச் சந்தை தொடர்பான தமது நிறுவனத்தின் உறுதிப்பாட்டை Yuasa ஆசிய பிராந்தியத்திற்கான சிரேஷ்ட பிரதிநிதிகள் இங்கு எடுத்துக் கூறினர். இந்நிகழ்வில் உரையாற்றிய Yuasa வெளிநாட்டு விற்பனைப் பிரிவு பொது முகாமையாளர் Takaomi Matsuzaki, “பெட்டரி தொழில்நுட்பத்தில் நூற்றாண்டுக்கும் மேலான விசேடத்துவத்தைக் கொண்ட Yuasa நிறுவனம், DSL உடன் கொண்டுள்ள கூட்டாண்மையானது நம்பிக்கைக்குரிய உறவுகளின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது. எமது முக்கிய சந்தையாக இலங்கை இருந்து வருகிறது. அத்துடன் உயர்ந்த சர்வதேச தரங்களை பூர்த்தி செய்யும் தயாரிப்புகள் மூலம் இந்நாட்டின் வாகனத் துறைக்கு ஆதரவளிப்பதில் நாம் பெருமை கொள்கிறோம்.” என்றார்.
Yuasa வர்த்தகநாமத்தை இலங்கையில் நம்பத்தகுந்த, உயர்தர பெட்டரி வர்த்தகநாமமாக நிலைநிறுத்துவதில் DSL மற்றும் அதன் நாடு தழுவிய விநியோகஸ்தர்கள் முக்கிய பங்காற்றி வருகின்றனர். விநியோகஸ்தர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு, Yuasa மற்றும் DSL தங்களது பங்களிப்பை தொடர்ச்சியாக வலுப்படுத்தி வருகின்றன. தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட வாகனங்களுக்கும் ஹைபிரிட் வாகனங்களுக்கும் அதிகரித்து வரும் கேள்வியைத் தொடர்ந்து, ஜப்பானிய பொறியியலின் நம்பகத்தன்மை மற்றும் புத்தாக்க கண்டுபிடிப்புகளின் முன்னோடிகளாக, Yuasa மற்றும் DSL இலங்கை வாகனத் துறையை வலுவூட்டும் பயணத்தை தொடர்ச்சியாக முன்னின்று வழிநடத்துகின்றன.
இந்த நிகழ்வின் மூலம், Yuasa பெட்டரிகளும் Douglas & Sons நிறுவனமும் புதிய அத்தியாயத்தை நோக்கி தமது பயணத்தை ஆரம்பித்துள்ளன.