உலக சிறுவர்கள் தினத்தை கொண்டாட சூரிய சக்தி பற்றிய சிறுவர் நூலை வெளியிடும் Hayleys Solar

உலக சிறுவர்கள் தினத்தை கொண்டாட சூரிய சக்தி பற்றிய சிறுவர் நூலை வெளியிடும் Hayleys Solar

உலக சிறுவர் தினத்தை கொண்டாடும் வகையில், Hayleys Fentons இன் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி பிரிவான Hayleys Solar நிறுவனம், சர்வதேச புத்தக கண்காட்சியில் (BMICH) சிங்களம், தமிழ், ஆங்கிலத்தில் “சூரியகாந்தியும் தேனீயும்” எனும் சிறுவர் கதைப் புத்தகத்தை வெளியிட்டது.

இளம் வாசகர்களிடையே சூரிய சக்தியின் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ‘சூரிய சக்தி – கொண்டுள்ள பணி’ பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதற்கான அழைப்பின் மூலம் பொறுப்புணர்வை ஏற்படுத்தவும் Hayleys Solar நிறுவனம் மேற்கொண்ட முயற்சியாகும்.

இந்த நூல் வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றிய Hayleys Fentons இன் முகாமைத்துவப் பணிப்பாளர் ஹசித் பிரேமதிலக்க, “சூரிய சக்தி தொடர்பான இந்த சிறுவர் நூலை வெளியிடுவதன் மூலம், அடுத்த தலைமுறைக்கு நிலைபேறான வலுசக்தி தீர்வுகளைத் தழுவி, எமது பூமியின் எதிர்காலம் குறித்த ஆர்வத்தைத் தூண்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். எமது அழகான நாட்டிற்கு நிலைபேறான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான அறிவு மற்றும் விருப்பத்துடன் எமது சிறுவர்களை வலுவூட்ட விரும்புகிறோம்.” என்றார்.

Hayleys Solar நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி (CEO) ரொஷேன் பெரேரா தெரிவிக்கையில், “இந்நூலானது, வலுசக்தி பிரச்சினைகளுக்கு நிலைபேறான தீர்வுகளை சிறுவர்களுக்குக் கற்பிப்பதோடு, அவர்கள் சூரிய சக்தியைப் புரிந்துகொள்ள உதவுவதோடு, எமது தேசத்தின் எதிர்கால தலைவர்களிடையே சூழல் பொறுப்பை ஊக்குவிப்பதையும் கற்பிக்கிறது.” என்றார்.

“சூரியகாந்தியும் தேனீயும்” சிறுவர் நூலின் முதல் பிரதியானது, முகாமைத்துவப் பணிப்பாளர் ஹசித் பிரேமதிலக்கவினால் இலங்கை புத்தகப் பதிப்பாளர் சங்கத்தின் தலைவர் சமந்த இந்திவர சமரசிங்க, இலங்கை புத்தகப் பதிப்பாளர்கள் சங்கத்தின் உப தலைவர் சந்து ஹபுதந்திரி, ஆனந்தா கல்லூரியின் பிரதி அதிபர் நாமல் ரத்நாயக்க ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது. அத்துடன் பாடசாலை மாணவர்கள் குழுவினருக்கும் இந்நிகழ்வின் போது வெளியிடப்பட்டது. இந்த சிறுவர் கதைப் புத்தகத்தின் 10,000 பிரதிகள் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“சூரியகாந்தியும் தேனீயும்” நூலின் டிஜிட்டல் பதிப்பை https://youtu.be/QfVVTIfo8h0 இல் காணலாம். இந்த அனிமேஷன் வீடியோவின் முக்கிய சிறப்பம்சம் யாதெனில், இதில் வரும் கதாபாத்திரங்களுக்கு Hayleys Fentons நிறுவன ஊழியர்களின் பிள்ளைகள் குரல் கொடுத்துள்ளனர் என்பதாகும்.

உலக சிறுவர்கள் தினத்தில் Hayleys Fentons நிறுவனம், தனது ஊழியர்களின் பிள்ளைகளுக்காக வேடிக்கையான செயற்பாடுகள் நிறைந்த ஒரு கவர்ச்சிகரமான நிகழ்வை நடத்தி அத்தினத்தை கொண்டாடியது. Hayleys மற்றும் Hayleys Fentons அதிகாரிகளுடன் இணைந்து இந்நூலின் பிரதிகளை கையளிப்பதற்கு முன், Hayleys PLC இன் தலைவரும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மொஹான் பண்டிதகே, “சூரியகாந்தியும் தேனீயும்” கதைப்புத்தகத்தை சிறுவர்களுக்கு வாசித்துக் காட்டியிருந்தமை இங்கு விசேட அம்சமாகும்.

BMICH இல் இடம்பெற்ற சர்வதேச புத்தகக் கண்காட்சியின் போது Hayleys Solar நிறுவனத்தின் Sun Studio வில் மின்சாரப் பட்டியலை கையளிப்போருக்கு இந்த சிறுவர் கதைப் புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Hayleys Fentons நிறுவனத்தின் புதுப்பிக்கத்தக்க வலுசக்திப் பிரிவான Hayleys Solar ஆனது, இலங்கையில் சூரிய சக்தி தொடர்பான மிகவும் நம்பகமான சேவை வழங்குநர்களில் ஒன்றாக விளங்குகின்றது. இது வீடுகளுக்கான, வணிக நிறுவனங்களுக்கான, தொழில்துறை தேவைகளுக்கான புதுப்பிக்கத்தக்க மின்சக்தி மற்றும் மின்சக்தி சேமிப்பு தீர்வுகளில் நிபுணத்துவம் பெற்றுள்ளது.

மேலதிக தகவலுக்கு, 0112 102 102 எனும் இலக்கத்தின் ஊடாக, Hayleys Solar நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளவும்.

Hayleys Solar பற்றி

Hayleys Fentons Limited நிறுவனத்தின் புதுப்பிக்கத்தக்க வலுசக்திப் பிரிவான Hayleys Solar நிறுவனம், முக்கியமாக வீடுகளுக்கான, வணிக நிறுவனங்களுக்கான, தொழில்துறை தேவைகளுக்கான சூரிய சக்தி மின்கலத் தொகுதி (Solar PV) நிறுவல்களிலும், பயன்பாட்டு மட்டத்திலான திட்டங்களிலும் கவனம் செலுத்துகிறது. அந்த வகையில், Hayleys Solar நிறுவனமானது, நாடளாவிய ரீதியில் 250 MWp இற்கும் அதிகமான சூரிய மின்கலத் தொகுதி நிறுவல்களை நிறைவு செய்துள்ளது. இது இலங்கையில் பொறியியல், கொள்முதல், கட்டுமானம் (EPC) ஆகியவற்றில் முன்னணி நிறுவனமாக விளங்குகிறது.