உலக ஆவி புகைப்பிடிப்பு (Vape) தினம் 2025:
20 ஆண்டு புள்ளிவிபரங்கள் மற்றும் வாழ்வில் மாற்றத்திற்கான புத்தாக்கம்
உலக ஆவி புகைப்பிடிப்பு தினமானது 2025 ஆனது மே 30 ஆந் திகதி அனுசரிக்கப்படுவதுடன், பொதுச் சுகாதாரத்தில் நிகழ்ந்துள்ள மிகவும் முக்கியமான மாற்றங்களில் ஒன்றை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. ஆபத்தைக் குறைக்க விரும்பி, ஆவி புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு மக்கள் மாறி வருவதன் காரணமாக புகைப்பிடிப்பவர்களின் வீதம் வேகமாக வீழ்ச்சி கண்டு வருகின்றது. சுவீடன் போன்ற நாடுகள் கிட்டத்தட்ட புகைப்பிடிப்பவர்கள் அற்ற நாடுகளாக மாற்றம் கண்டுள்ளதுடன், நியூசிலாந்தில் புகைப் பிடிப்பவர்களின் எண்ணிக்கை மிகப் பாரியளவில் வீழ்ச்சி கண்டு வருகின்றது. அந்த வகையில் “20 ஆண்டு புள்ளிவிபரங்கள்” என்ற தொனிப்பொருளில் இந்த ஆண்டு இத்தினம் அனுசரிக்கப்படுவதுடன், ஆவி புகைப்பிடிக்கும் பழக்கத்தின் பின்னால் உள்ள அறிவியல் மற்றும் வாழ்க்கை அனுபவங்களைச் சுட்டிக்காட்டுகின்றது.
ஆபத்தைக் குறைக்கும் முயற்சிகளை பல நாடுகள் முன்னெடுத்து வருவதுடன், சுவீடன், ஐக்கிய இராச்சியம் மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளில் புகைப் பிடிப்பவர்களின் வீதம் பாரியளவில் வீழ்ச்சி கண்டு வருகின்றது. எனினும் கட்டுப்பாட்டுக் கொள்கைகளைப் பின்பற்றும் ஏனைய நாடுகளில் இந்நிலைமை மிகவும் பின்தங்கியுள்ளது. ஆவி புகைப்பிடித்தல் பழக்கமானது புகைப் பிடிப்பதால் ஏற்படுகின்ற ஆபத்துக்களை கணிசமான அளவில் குறைப்பதாகவும், பாரம்பரிய நிக்கொட்டின் மாற்று நடைமுறைகளுக்கான திறன்மிக்க வழியாகவும் காணப்படுவதாக முன்னணி சுகாதார அதிகார சபைகளின் ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தியுள்ளன.
இது குறித்த சான்றுகள் தொடர்ந்தும் அதிகரித்த அளவில் கிடைக்கப்பெற்று வரும் நிலையில், ஆபத்து குறைப்பு என்பது பொதுச் சுகாதாரத்தில் ஏற்படுத்தியுள்ள மாற்றத்தை மறுக்க முடியாது. பாதுகாப்பான வழிகளில் நிக்கொட்டின் தயாரிப்புக்களின் பெருமளவான பாவனையால் சுவீடனில் புகைப்பிடித்தல் கிட்டத்தட்ட இல்லாதொழிந்துள்ளது. அதேசமயம், நியூசிலாந்து நாடு புகைப்பிடிப்பவர்கள் அற்ற எதிர்காலத்தை நோக்கி சீராக முன்னேறி வருகின்றது. புள்ளி விபரங்கள் மிகவும் தெளிவாக உள்ளன. வளர்ந்தவர்கள் மத்தியில் ஒழுங்குமுறைக்குட்பட்ட ஆவி புகைப்பிடிக்கும் பழக்கம் மற்றும் வாய் மூலம் உள்ளெடுக்கும் நிக்கொட்டின் தயாரிப்புக்கள் கிடைக்கப்பெறும் போது புகைப் பிடிப்பவர்களின் வீதங்களும் வேகமாக வீழ்ச்சி கண்டு வருவதுடன், கூடியளவில் உயிர்கள் காக்கப்பட்டு, சுகாதார சமத்துவமின்மைகள் குறைக்கப்படுகின்றன.
எனினும் இந்த வெற்றி வரலாறுகள் குறித்து சர்வதேச அளவில் பெருமளவில் பேசப்படுவதில்லை. உலக ஆவி புகை பிடித்தல் தினத்தில் புகைப்பிடித்தலை கைவிட்ட மக்களின் உண்மையான அனுபவங்களைச் செவிமடுத்து, புள்ளி விபரங்கள் மூலமாக அச்சத்தைப் போக்க வேண்டிய அவசர தேவையை கொள்கைவகுப்பாளர்கள் கண்டு கொள்ள வேண்டும் என்பதுடன், புகைப்பிடித்தல் தொடர்புபட்ட வியாதிகளைக் குறைப்பதில் முன்னேற்றம் அடைவதற்கு, புத்தாக்கம் என்பது மையப்பொருளாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இது குறித்து முன்னேற்றங்கள் இடம்பெற்று வருகின்ற போதிலும், புகைப்பிடித்தலை ஒழிப்பதற்கான உலக தினம் அனுசரிக்கப்படுவதுடன் மே 31 திகதியை அண்டியதாக குறிப்பாக புகைப்பிடித்தலை கட்டுப்படுத்தும் விவாதங்கள் சர்வதேச அளவில் இடம்பெறுவதை காண முடியாதுள்ளது. உலக ஆவி புகை பிடித்தல் தினம் மேற்குறிப்பிட்ட நிலைமைக்கு சவால் விடுகின்றது.