உலகின் மிகச்சிறந்த கோல்ப் ரிசோர்ட்டுகளில் ஒன்றாக ஹம்பாந்தோட்டை ஷங்ரி-லா ஹோட்டலுக்கு அங்கீகாரம்

உலகின் மிகச்சிறந்த கோல்ப் ரிசோர்ட்டுகளில் ஒன்றாக ஹம்பாந்தோட்டை ஷங்ரி-லா ஹோட்டலுக்கு அங்கீகாரம்

Off By Mic

இலங்கையின் தென் கடற்கரையில் அமைந்துள்ள ஹம்பாந்தோட்டை ஷங்ரி-லா (Shangri-La Hambantota) ஹோட்டலானது ‘கோல்ஃப் வேர்ல்ட் முதல் 100 – வேர்ல்ட் ரிசோர்ட்ஸ்’ (Golf World Top 100 – World Resorts) தரவரிசையில் 70ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இதன் மூலம் உலகளாவிய ரீதியில் மிகவும் மதிக்கப்படும் கோல்ப் மற்றும் ரிசோர்ட் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக இது மாறியுள்ளது.

இந்த ‘Top 100’ தரவரிசையானது வெறுமனே கோல்ப் விளையாட்டை மாத்திரம் கருத்தில் கொண்டு வழங்கப்படுவதில்லை. முழுமையான தங்குமிட மற்றும் விளையாட்டு அனுபவத்தை வழங்கும் ரிசோர்ட்டுகளில் ஒன்றாக இது அங்கீகரிகாரம் விளங்குகிறது. இங்குள்ள சம்பியன்ஷிப் கோல்ப் மைதானங்கள் சிறந்த விருந்தோம்பல் மற்றும் நீண்ட காலம் நினைவில் நிற்கக்கூடிய அனுபவங்கள் ஆகியவற்றுடன் இணையச் செய்கிறது. இந்த பின்னணியிலேயே ஷங்ரி-லா அம்பாந்தோட்டைஹோட்டலானது தனக்கென் ஒரு இடத்தைப் பிடித்துள்ளது.

இயற்கையுடன் இணைந்த கோல்ப்: புகழ்பெற்ற கட்டடக் கலைஞரான ரொட்னி ரைட் (Rodney Wright) என்பவரால் வடிவமைக்கப்பட்ட இந்த 18 குழிகள் கொண்ட சம்பியன்ஷிப் கோல்ப் மைதானமானது இயற்கையான சூழலுடன் பின்னிப்பிணைந்துள்ளது. தென்னை மரங்களுக்கு மத்தியிலும், ஏரிகள் மற்றும் இந்து சமுத்திரத்தின் பின்னணியிலும் அமைந்துள்ள இந்த மைதானம், வீரர்களுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்குகிறது.

இது குறித்து ‘கோல்ப் வேர்ல்ட் டொப் 100’ சஞ்சிகை ஆசிரியர் கிறிஸ் பெர்ட்ரம் (Chris Bertram), “இது ஒரு அழகான இயற்கை சூழலில் அமைந்துள்ளதோடு வனவிலங்குகளாலும் சூழ்ந்துள்ளது.” என தெரிவிக்கிறார்.

இந்த கோல்ப் விளையாட்டின் எண்ணக்கருவானது, கோல்ப் விளையாட்டை ஈர்க்கும் வகையிலும், மறக்கமுடியாத வகையிலும், இலங்கையை மையப்படுத்தியதாகவும், சுற்றுச்சூழலுக்கு இடையிலான இணக்கத்தை கொண்டதாகவும் அமைகிறது.

வாழ்க்கையை ரசிக்க வடிவமைக்கப்பட்ட ரிசோர்ட்: கோல்ப் மைதானங்களுக்கு அப்பால், ஷங்ரி-லா அம்பாந்தோட்டை ஹோட்டலானது, 58 ஹெக்டயர் பரப்பளவில் ஒரு முழுமையான சுற்றுலாத் தலமாக பரந்து விரிவடைந்துள்ளது. இளம் தம்பதிகள், குடும்பங்கள், பல்வேறு தலைமுறை சுற்றுலா விரும்பிகள் என அனைவருக்கும் ஏற்ற வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

தனது மதிப்பாய்வில் கிறிஸ் பெர்ட்ரம் மேலும் குறிப்பிடுகையில், “நீங்கள் இந்த ரிசோர்ட்டை விட்டு வெளியேற வேண்டிய அவசியமே இல்லை; ஆயுர்வேத ஸ்பாவில் சிகிச்சை பெறுதல், மூன்று வெளியக நீச்சல் தடாகங்களில் நேரத்தைக் கழித்தல் அல்லது கடற்கரையில் ஓய்வெடுத்தல் என அனைத்து வயதினரும் செய்யக் கூடிய பல்வேறு விடயங்கள் இங்கு ஏராளமாக உள்ளன.” என தெரிவிக்கிறார்.

CHI, என அழைக்கப்படும் Spa ஆனது, ஆயுர்வேதத்தை மையமாகக் கொண்ட சிகிச்சைகள், விசாலமான நீச்சல் தடாகங்கள், கடற்கரை ஓய்வு மற்றும் விளையாட்டு முதல் அமைதியாக சிந்தனையில் ஈடுபடல் போன்ற அனைத்து செயற்பாடுகளையும், அவசரமற்ற வகையிலும், பல மட்டத்திலான உயர் ரக சிறந்த அனுபவமாக வழங்குகிறது. இது ஷங்ரி-லா ஹோட்டலின் ரிசோர்ட் தத்துவத்தின் ஒரு அடையாளமாக விளங்குகிறது.

உணவு ஒரு அனுபவமாக: இந்த தரவரிசையில் சமையல் கலையின் சிறப்பும் ஒரு முக்கிய அங்கமாகும். ஷங்ரி-லா ஹம்பாந்தோட்டை ஹோட்டலில் உள்ள ‘பொஜுன்ஹல’ (Bojunhala) உணவகத்தில் வழங்கப்படும் உள்ளூர் மற்றும் சர்வதேச உணவுகள் குறித்து பெர்ட்ரம் புகழாரம் விடுக்கின்றார். உள்ளூர் மூலப்பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவுகள் உலகத்தரம் வாய்ந்தவையாகவும். இவை புது உணவு அனுபவத்தையும் வசதியாக கிடைக்கக் கூடியதும் என்பதும் அவரது கருத்தாகும்.

கோல்ப் வேர்ல்ட் டொப் Top 100 பட்டியலில் கிறிஸ் பெர்ட்ரம் சுட்டிக் காட்டியுள்ளதற்கமைய, “இங்கு மிகவும் பொருத்தமானதாக விளங்குவது உணவே. பொஜுன்ஹலவில் இலங்கை சார்ந்த அல்லது சர்வதேச ரீதியிலான காலை உணவை சாப்பிட அல்லது புஃபே (Buffet) வகையிலான மதிய உணவை உட்கொள்ளவென, அது எப்போதும் பரபரப்பானதாக சிறப்பானதாக விளங்குகிறது.”

அமைதியான காலை வேளைகள் முதல் தாராளமாக பகிரப்படும் உணவுகள் வரை, இதிலுள்ள ரிசோர்ட்டில் உணவருந்துவதானது, எப்போதும் வரவேற்பு மிக்கதாகவும், தனிச்சிறப்பு மிக்கதாகவும், அமைதியான இன்பத்தைத் தரும் வகையில் அமையும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உலகத்தரம் வாய்ந்த அங்கீகாரம்: சம்பியன்ஷிப் கோல்ப், இயற்கை சூழல் மற்றும் அக்கறையுடனான விருந்தோம்பல் ஆகியவற்றின் தடையற்ற ஒருங்கிணைப்பே ஷங்ரி-லா அம்பாந்தோட்டை ஹோட்டலை கோல்ப் வேர்ல்ட் டொப் 100 எனும் இந்த உலகளாவிய பட்டியலில் இடம்பிடிக்கச் செய்துள்ளது. இந்த கௌரவமானது, உண்மையில் தனித்துவமான இடங்களுக்கு வழங்கும் ஒரு கௌரவமாகும்.

இது குறித்து ஹம்பாந்தோட்டை ஷங்ரி-லா ஹோட்டலின் பொது முகாமையாளர் ரெபான் ரசீன் (Refhan Razeen) கருத்து வெளியிடுகையில், “கோல்ப் வேர்ல்ட் டொப் 100 இடமிருந்து எமக்கு கிடைத்துள்ள இந்த அங்கீகாரமானது, எமது குழுவினரின் அர்ப்பணிப்பை எடுத்துக் காட்டுகிறது. இயற்கையுடன் இணைந்த கோல்ப் மைதானம் முதல் எமது விருந்தோம்பலின் உணர்வு வரையான அனைத்து விடயங்களும் விருந்தினர்களுக்கு ஒரு புதிய கண்டுபிடிப்பையும் இணைப்பையும் வழங்குகின்றன. ஷங்ரி-லா ஹம்பாந்தோட்டை ஹோட்டலுக்கே உரித்தான, அவசரமற்ற, இலங்கைக்கே உரித்தான வகையிலான விருந்தோம்பல் அனுபவத்தை வழங்குவதற்காக நாம் விருந்தினர்களை வரவேற்க தயாராக உள்ளோம்.” என்றார்.

Ends

Image Caption – ஷங்ரி-லா ஹம்பாந்தோட்டை ஹோட்டலின் பிரமிக்க வைக்கும் தோற்றத்திற்கு மத்தியில் அமைந்துள்ள உலகத்தரம் வாய்ந்த கோல்ப் விளையாட்டு மைதானம்.

Shangri-La பற்றி:
ஷங்ரி-லா குழுமத்தின் அடையாளச் சின்னமான ‘ஷங்ரி-லா’ வர்த்தகநாமமானது, அதன் தனித்துவமான ஆசிய விருந்தோம்பல் அனுபவத்தின் மையமாக இதயபூர்வமான, அக்கறையுடனான சேவையை வழங்கி வருகிறது. கற்பனைத்திறன் மிக்க, இயற்கையினால் ஈர்க்கப்பட்ட வடிவமைப்பு, மகிழ்ச்சிகரமான உணவு, கலாசார அனுபவங்கள் மற்றும் உண்மையான, மனமார்ந்த சேவையின் மூலம், இவ்வர்த்தகநாமம் ‘ஷங்ரி-லா’ உடன் தமது தருணங்களை விருந்தினர்கள் நிஜமாக்கிக் கொள்ள வழிவகுக்கிறது.

இன்று, அவுஸ்திரேலியா, கம்போடியா, கனடா, சீனா, ஹொங்கொங் தெற்காசியா மற்றும் தாய்வான், பிஜி, பிரான்ஸ், இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான், மலேசியா, மொரிஷியஸ், மங்கோலியா, மியன்மார், பிலிப்பைன்ஸ், சவூதி அரேபியா, சிங்கப்பூர், இலங்கை, ஓமான், தாய்லாந்து, துருக்கி, ஐக்கிய அரபு இராச்சியம், ஐக்கிய இராச்சியம் உள்ளிட்ட உலகெங்கிலும் உள்ள 90 இற்கும் மேற்பட்ட டீலக்ஸ் ஹோட்டல்கள் மற்றும் ரிசோர்ட்டுகளில் இவ்வர்த்தகநாமத்தின் அனுபவத்தை பெறலாம்.