இலங்கை ஸ்மார்ட் பாதுகாப்புச் சந்தையில் ‘DARSKO’ நிறுவனத்திற்கு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும் ‘IMOU SMART LIFE 2026’

இலங்கை ஸ்மார்ட் பாதுகாப்புச் சந்தையில் ‘DARSKO’ நிறுவனத்திற்கு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும் ‘IMOU SMART LIFE 2026’

Off By

DARSKO (Pvt) Ltd நிறுவனம், ‘IMOU SMART LIFE 2026’ நிகழ்வில் தமது தொழில்நுட்பப் பங்காளர்கள், விநியோகஸ்தர்கள், விற்பனையாளர்கள், system integrators மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப (ICT) துறை பங்குதாரர்களை ஒன்றிணைத்து, இலங்கையிலுள்ள வீடுகள் மற்றும் வணிகங்களுக்கான IMOU இன் ஸ்மார்ட் பாதுகாப்பு மற்றும் இணைய இணைப்பு தொழில்நுட்பத் தீர்வுகளை காட்சிப்படுத்தியது. இலங்கையில் முதன்முறையாக நடத்தப்பட்ட இந்நிகழ்வு, நாட்டின் வளர்ச்சியடைந்து வரும் ஸ்மார்ட் பாதுகாப்புச் சந்தையில் வாய்ப்புகளை ஆராயும் அதே வேளையில், IMOU இன் அதிநவீன தயாரிப்பு முன்னேற்றங்களை பங்காளிகளுக்கு அறிமுகப்படுத்தியது.

IMOU நிறுவனத்தின் நிறுவன விளக்கக்காட்சியின்படி, வீடுகளுக்கான கெமரா விநியோகத்தில் இந்நிறுவனம் உலகளாவிய ரீதியில் மூன்றாவது இடத்தையும், இலங்கையின் Wi-Fi கெமரா சந்தையில் இரண்டாவது இடத்தையும் வகிக்கிறது. உள்நாட்டு பங்காளர்கள் IMOU இன் தயாரிப்புத் தெரிவுகள் மற்றும் இணைக்கப்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பங்களின் பல்வேறு பயன்பாடுகளைப் பற்றி ஆழமாகப் புரிந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பை இந்நிகழ்வு வழங்கியது.

இலங்கையில் IMOU வர்த்தகநாமத்தை மேம்படுத்துவதில் DARSKO நிறுவனத்தின் முதலாம் ஆண்டு மைல்கல்லையும் இந்நிகழ்வு எடுத்துக் காண்பித்தது. தொழில்நுட்பத் துறையில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்ட IT Gallery நிறுவனத்தின் சகோதர நிறுவனமான DARSKO, IMOU இன் உள்ளூர் விநியோக வலையமைப்பை கட்டியெழுப்புவதிலும், பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் இயங்கும் வணிகங்களுக்கான வாய்ப்புகளை உருவாக்குவதிலும் கவனம் செலுத்துகின்றது.

SMART LIFE 2026 நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்ட தீர்வுகளில் Wi-Fi கெமராக்கள், 4G சூரியப்படல கெமராக்கள், AI மற்றும் கிளவுட் இணைப்பு கொண்ட கெமராக்கள் ஆகியனவும் உள்ளடங்குகின்றன. தொடர்பாடல் இணைப்பு ஏற்படுத்தப்பட்ட வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் முதல் நிலையாக பொருத்தப்பட்ட மின்சாரம் மூலமான அல்லது Wi-Fi இணைப்பு எல்லைக்குட்பட்ட இடங்கள் வரை பல்வேறு சூழல்களுக்கான தெரிவுகளை இந்த தயாரிப்புகள் வழங்குகின்றன.

Wi-Fi கெமராக்கள் அன்றாட இடங்களுக்கான இணைக்கப்பட்ட கண்காணிப்பு வசதிகளை வழங்கும் வேளையில், 4G சூரியமின்கல கெமராக்கள் தொலைத்தொடர்பு வலையமைப்பு இணைப்பை சூரிய சக்தியுடன் இணைத்து வழங்குகின்றன. இது வழக்கமான மின்சாரம் மற்றும் வலையமைப்பு உட்கட்டமைப்பு ஆகியன நேரடியாகக் கிடைக்காத இடங்களுக்கு ஏற்றதாக அமைகிறது. AI மற்றும் கிளவுட் இணைப்பு கொண்ட கெமராக்கள், தெரிவு செய்யப்பட்ட மாதிரி மற்றும் சேவை ஆகியவற்றைப் பொறுத்து, செயற்பாடுகளைக் கண்காணிக்கவும் பாதுகாப்புக் கட்டமைப்புகளை தொலைவிலிருந்து அணுகவும் அதிக திறனை வழங்குகின்றன.

இது குறித்து, DARSKO (Pvt) Ltd நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான டிலந்த பெரேரா தெரிவிக்கையில்: “எமது முதல் வருடத்தில் IMOU வர்த்தகநாமத்திற்கு கிடைத்த வரவேற்பின் மூலம், இலங்கையில் ஸ்மார்ட் பாதுகாப்புத் தொழில்நுட்பத்திற்கு வலுவான வாய்ப்பு உள்ளது என்பதை நிரூபிக்கப்பட்டுள்ளது. மாற்றமடையக்கூடிய சந்தைக்கு சேவை செய்யத் தேவையான தயாரிப்புகள், ஆதரவு மற்றும் வாய்ப்புகளை எமது பங்காளர்களுக்கு வழங்கும் அதே வேளையில், இவ்வர்த்தகநாமத்திற்கான ஒரு நிலைபேறான இருப்பைக் கட்டியெழுப்புவதே எமது நோக்கமாக உள்ளது. SMART LIFE 2026 நிகழ்வானது, IMOU வழங்கும் தீர்வுகள் மற்றும் சாத்தியக்கூறுகளுடன் தொழில்நுட்பச் சமூகத்தை இணைப்பதன் மூலம் அந்த தொலைநோக்குப் பார்வையை ஒன்றிணைக்கிறது.” என்றார்.

விநியோகஸ்தர்கள், மீள்விற்பனையாளர்கள் மற்றும் system integrators ஆகியோரைப் பொறுத்தவரையில், வழக்கமான CCTV நிறுவல்களுக்கு அப்பால் தமது சேவைகளை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகளை இந்நிகழ்வு எடுத்துக் காட்டியது. தனிப்பட்ட வாடிக்கையாளர்கள் மற்றும் இடங்களின் தேவைகளின் அடிப்படையில் இணைப்பு, மின்சாரம், AI திறன்கள் மற்றும் தொலைநிலை அணுகல் ஆகியவற்றின் வெவ்வேறு கலவைகளை ஆராய IMOU தீர்வுகள் பங்காளிகளுக்கு வாய்ப்பளிக்கிறது.

இது குறித்து, IMOU இன் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் லேன் ஜியா (Layne Jia) தெரிவிக்கையில், “IMOU நிறுவனத்திற்கு ஒரு முக்கியமான சந்தையாக இலங்கை விளங்குவதோடு, DARSKO மற்றும் எமது உள்ளூர் பங்காளிகளுடன் அடைந்துள்ள முன்னேற்றம் தொடர்பில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். நுகர்வோர் மற்றும் வணிகங்களின் அதிகரித்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் தீர்வுகளை உருவாக்கும் அதே வேளையில், ஸ்மார்ட் தொழில்நுட்பத்தை மிகவும் அணுகக்கூடியதாக மாற்றுவதே எமது தொலைநோக்குப் பார்வையாகும். உள்ளூர் தொழில்நுட்பச் சமூகத்துடன் நெருக்கமாகப் பணியாற்றுவதன் மூலம், புதிய வாய்ப்புகளை உருவாக்குவதுடன் இணைக்கப்பட்ட பாதுகாப்பு மற்றும் ஸ்மார்ட் வாழ்க்கையின் நன்மைகளை மேலும் பல மக்களுக்குக் கொண்டு சேர்க்க முடியும்.” என்றார்.

ஒற்றைக் கெமரா அல்லது கண்காணிப்பு கட்டமைப்பிற்கு அப்பால், ஒரு இடத்திற்கான தொடர்பு இணைப்பு, மின்சாரம் கிடைக்கும் தன்மை மற்றும் கண்காணிப்புத் தேவைகளுக்கு ஏற்ப தெரிவு செய்யக்கூடிய தீர்வுகளை நோக்கி ஸ்மார்ட் பாதுகாப்பு எவ்வாறு நகர்கிறது என்பதையும் இந்நிகழ்வு நிரூபித்தது. நுகர்வோர் மற்றும் வணிகங்களைப் பொறுத்தவரையில், இது பாதுகாப்பை எவ்வாறு பயன்படுத்துவது என்பதில் அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது. அதே நேரத்தில் தொழில்நுட்ப பங்காளர்களுக்கு பரந்த அளவிலான பயன்பாடுகளுக்கு தீர்வை பெற இது வாய்ப்புகளை உருவாக்குகிறது.

SMART LIFE 2026 மூலமாக, DARSKO மற்றும் IMOU ஆகியன இந்த முன்னேற்றங்களையும் இலங்கைச் சந்தைக்கான அவற்றின் முக்கியத்துவத்தையும் ஆராய உள்ளூர் தொழில்நுட்பம் மற்றும் விநியோகச் சமூகத்தை ஒன்றிணைத்தன. இலங்கையில் IMOU வர்த்தகநாமத்தை மேம்படுத்துவதில் DARSKO தனது இரண்டாம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் வேளையில், வர்த்தகநாமத்தின் அடைவை மேலும் விரிவுபடுத்தவும், நாடு முழுவதும் உள்ள தனது விநியோகஸ்தர்கள், மீள்விற்பனையாளர்கள் மற்றும் system integrators ஆகியோரின் வலையமைப்பை வலுப்படுத்தவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.