இலங்கை விளையாட்டு சாகச மோட்டார் சைக்கிள் பிரிவில் ஆதிக்கம் செலுத்தும் Pulsar N160

Off By Mic

David Pieris Motor Company (Private) Limited நிறுவனத்தால் சந்தைப்படுத்தப்பட்டு விநியோகிக்கப்படும் Bajaj Pulsar N160, தற்போது இலங்கையின் வீதிகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. Pulsar N160 Premium மற்றும் Pulsar N160 Normal ஆகிய இரண்டு மோட்டார் சைக்கிள் வகைகள் தற்போது அனைத்து DPMC விற்பனை நிலையங்களிலும், நாடு முழுவதுமுள்ள 220 இற்கும் மேற்பட்ட அதன் முகவர்களிடமிருந்தும் கிடைக்கின்றன.

இந்த மோட்டார் சைக்கிளானது, இந்த வகை மோட்டார் சைக்கிள்களில் சிறந்த செயல்திறன் மற்றும் புரட்சிகர அம்சங்களை வழங்குகிறது. நாடு முழுவதும் DPMC நிறுவனத்தின் ஒப்பிட முடியாத, விற்பனைக்குப் பிந்தைய சேவையுடனான உத்தரவாதத்துடன், இலங்கையின் மோட்டார் சைக்கிள் சந்தையில் உயர் ரக தெரிவாக இந்த மோட்டார் சைக்கிள் தன்னை நிலைநிறுத்தியுள்ளது.

Pulsar N160 மோட்டார் சைக்கிள்கள் குறித்து கருத்துத் தெரிவித்த, David Pieris Motor Company (Lanka) Limited நிறுவனத்தின் வாகன விற்பனைப் பிரிவு பிரதம அதிகாரி லக்மால் டி சில்வா, “இலங்கையில் மோட்டார் சைக்கிள் பயன்படுத்தும் இளைஞர் நம்பிக்கையைப் பெற்றுள்ள Pulsar, நாட்டின் முதலிடத்தில் உள்ள விளையாட்டு சாகச பைக் (sports bike) ஆக திகழ்வதையிட்டு நாம் பெருமைப்படுகிறோம். எமது வாடிக்கையாளர்களின் வாழ்க்கைமுறைக்கு ஏற்ற தெரிவுகளை நன்கு புரிந்துகொள்ளும் நிறுவனம் எனும் வகையில், N160 போன்ற சிறந்த Pulsar வகை மோட்டார் சைக்கிள்களை உள்ளூர் சந்தைக்கு கொண்டு வருவதிலும் அதேபோன்று கடந்த 20 வருடங்களாக மேற்கொண்டு வந்ததுபோல் பல்வேறு தொழில்நுட்பத்தையும் சிறப்பம்சங்களையும் தொடர்ச்சியாக மேம்படுத்தி வழங்கவும் நாம் உறுதி பூண்டுள்ளோம்.” என்றார்.

Pulsar N160 மோட்டார் சைக்கிளானது இந்தப் பிரிவிலுள்ள மோட்டார் சைக்கிள்களில் ஒரு புரட்சிகரமான தெரிவாகும். அதிரடியாக வேகத்தை அதிகரிக்கக் கூடிய மற்றும் நாளாந்த மோட்டார் சைக்கிள் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப்பட்ட எஞ்சினைக் கொண்டுள்ளது. ‘Torque on demand’ அம்சத்துடன், இது தனது உச்ச வலுவின் 85% ஐ பரந்த செயற்பாட்டு வேக வீச்சில் (rev-range) வழங்குகிறது. இச்சிறப்பு, இந்தப் பிரிவில் உள்ள எந்தவொரு மோட்டார் சைக்கிள்களுக்கும் இணையாகாத அம்சமாகும். நகர வீதிகளோ, திறந்த பாதைகளிலோ செலுத்தும் போது மிருதுவான, உரிய வேகத்திலான செயல்திறனை சாரதிகளால் அனுபவிக்க முடியும்.

Pulsar N160 மோட்டார் சைக்கிளானது, சாரதியின் பாதுகாப்பு மற்றும் வசதியை அதிகரிக்கும் வகையில், இலங்கையில் 160cc பிரிவில் முதன் முறையாக Dual Channel ABS வசதியை அறிமுகப்படுத்துகிறது. இந்த கட்டமைப்பானது பிரேக் பிடிக்கும் போது, நுண்ணறிவுடன் பிரேக் அழுத்தத்தை கட்டுப்படுத்தி, டயர் சில்லுகள் லொக் (Lock) ஆவதைத் தடுக்கிறது. இதனால் அனைத்து விதமான தரையிலும் நம்பிக்கையுடன் பிரேக் பிடிக்க முடியும். அகலமான முன் மற்றும் பின்புற டிஸ்க் பிரேக்குகள் உறுதியான, வேகமான நிறுத்தும் சக்தியை வழங்குகின்றன.

இரவு நேர ஓட்டத்திற்காக, bi-functional LED projector headlamp மற்றும் அதனுடன் naked-wolf LED DRLs ஆகியன பாதையில் சிறந்த வெளிச்சத்தை வழங்குகின்றன. இவை இருளை அகற்றி, தெளிவான மற்றும் ஸ்டைலான ஒளிக்கற்றையை வழங்குகின்றன.

அழகியல் வடிவமைப்பு அம்சத்தில், N160 இரட்டை நிற (dual-tone) வடிவமைப்பு மூலம் தனித்துவம் பெறுகிறது. முன்பகுதியில் இருண்ட நிறத்திலிருந்து பின்புறம் வெளிச்சமான நிறத்திற்கு மாறும் வகையில், நேர்த்தியான அதன் காற்றியக்கவியலை காண்பிக்கும் கோடுகளை அவை வெளிப்படுத்துகின்றன. Pearl Metallic White, Racing Red, Polar Sky Blue, Brooklyn Black (வெள்ளை, சிவப்பு, நீலம், கறுப்பு) ஆகிய நான்கு நிறங்களில் கிடைக்கும் இந்த மோட்டார் சைக்கிள்களை, உரிமையாளர்கள் தங்கள் தனித்துவ விருப்பத்திற்கு ஏற்ப தெரிவு செய்ய முடியும்.

மோட்டார் சைக்கிளின் நடுப்பகுதியில், அதன் அடியில் அமைந்துள்ள சைலன்சர் (sporty underbelly exhaust), அதன் புவியீர்ப்பு விசை மையத்தில் அமைக்கப்பட்டுள்ளதால், சிறந்த சமநிலையையும், சிறந்த வேகத்தையும் வழங்குகிறது. அத்துடன், நவீன telescopic மற்றும் தலைகீழ் (USD) அமைப்பிலான முன்புற forks உடன் வருவதன் காரணமாக, உயர் தரமான சஸ்பென்ஷன் மற்றும் கட்டுப்பாட்டை வழங்கி, ஒவ்வொரு பயணத்தையும் வசதியாகவும் நம்பிக்கையுடனும் மேற்கொள்ள உதவுகிறது.

கிளர்ச்சியை ஏற்படுத்தும் அனுபவத்திற்காக வடிவமைக்கப்பட்டதும், முன்னிலை வகிக்க கட்டமைக்கப்பட்டதுமான Pulsar, செயல்திறன் மிக்க பைக் செலுத்தும் உணர்வை தொடர்ச்சியாக ஏற்படுத்துகிறது. இலங்கையில் 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட விற்பனையை பதிவு செய்துள்ள Pulsar இன் புரட்சிமிக்க வளர்ச்சியானது, அதன் ஒப்பிட முடியாத செயல்திறன், உறுதியான வடிவமைப்பு மற்றும் நவீன தொழில்நுட்பத்தை எடுத்துக் காட்டுகிறது.

இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு: நுழையுங்கள் www.dpmco.com அல்லது அழையுங்கள் 011 4700600