இலங்கை முதலீட்டு மாநாடு 2026 ஒத்திவைப்பு

இலங்கை முதலீட்டு மாநாடு 2026 ஒத்திவைப்பு

Off By

எமது மதிப்பிற்குரிய பதிவு செய்யப்பட்ட பங்கேற்பாளர்கள் மற்றும் அனைத்து பங்குதாரர்களுக்கும், ஐரோப்பிய ஒன்றியம் (EU), ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) மற்றும் ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கான ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக ஆணைக்குழு (UNESCAP) ஆகிய தனது பங்காளர்களுடன் இணைந்து எதிர்வரும் 2026 மார்ச் 30 ஆம் திகதி நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த ‘Sri Lanka Investment forum 2026’ (இலங்கை முதலீட்டு மாநாடு 2026) ஒத்திவைக்கப்பட்டுள்ளதை இலங்கை முதலீட்டுச் சபை (BOI) அறியத்தருகின்றது.

தற்போது நிலவி வரும் உலகளாவிய ரீதியான மாற்றங்கள் மற்றும் அவை சர்வதேச பயணங்கள் மற்றும் லொஜிஸ்டிக் துறையில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்களை கருத்திற் கொண்டு, இந்த நிகழ்விற்கான தினத்தை மீள ஏற்பாடு செய்வதற்கான மூலோபாய ரீதியான முடிவை நாம் எடுத்துள்ளோம். மிகவும் சாதகமான உலகளாவிய சூழ்நிலைகளின் கீழ் இந்த நிகழ்வை மீளத் திட்டமிடுவதன் மூலம், அதிக கவனம் செலுத்தப்படுகின்ற மற்றும் வினைத்திறனான பெறுபேறுகளை பெற முடியும் என நாம் நம்புகிறோம். இலங்கையின் பங்குதாரர்களுக்கும் சர்வதேச முதலீட்டாளர்களுக்கும் இடையில் காத்திரமான ஈடுபாட்டை ஊக்குவிக்கும் ஒரு உயர் தரமான தளத்தை வழங்குவதே எமது பிரதான நோக்கமாகும்.

  • புதிய திகதி: உலகளாவிய மாற்றங்களை நாம் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதுடன், இது குறித்த திருத்தப்பட்ட திகதி குறித்து பதிவு செய்த அனைத்து பங்கேற்பாளர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கும் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்.
  • பதிவு செய்தல்: ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட அனைத்துப் பதிவுகளும் புதிய திகதி அறிவிக்கப்படும் போதும் செல்லுபடியாகும்.

நிலைபேறான மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த முதலீட்டிற்கான ஒரு முதன்மையான இடமாக இலங்கையை வெளிப்படுத்துவதில் இலங்கை முதலீட்டுச் சபை (BOI) தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் இருந்து வருகின்றது. இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கு நாம் பணியாற்றி வரும் நிலையில், உங்களது பொறுமை மற்றும் தொடர்ச்சியான ஆதரவிற்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.