இலங்கை உள்ளிட்ட 64 நாடுகளில் ஒரே நேரத்தில் அறிமுகமாகி உலகளாவிய ரீதியில் புதிய மைல்கல்லை பதிக்கும் XPENG L03

இலங்கை உள்ளிட்ட 64 நாடுகளில் ஒரே நேரத்தில் அறிமுகமாகி உலகளாவிய ரீதியில் புதிய மைல்கல்லை பதிக்கும் XPENG L03

Off By

சீனா, ஐரோப்பா உள்ளிட்ட 64 சர்வதேச சந்தைகளில் ஒரே நாளில் ஒரே நேரத்தில் உலகளாவிய ரீதியில் அறிமுகப்படுத்தப்பட்டு, வாகனத் துறையில் வரலாறு படைத்துள்ள ‘XPENG L03’ ஸ்மார்ட் மின்சார Coupe SUV விரைவில் இலங்கை வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கவுள்ளது. இலங்கையில் XPENG (எக்ஸ்பெங்) நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான Evolution Auto (Pvt) Ltd) மூலம் உள்ளூர் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த L03, உலகின் புதிய ஸ்மார்ட் மின்சார வாகனங்களில் ஒன்றை இலங்கையின் வீதிகளுக்குக் கொண்டு சேர்க்கிறது. இதற்கான முன்பதிவுகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.

ஆரம்பத்திலிருந்தே சர்வதேச சந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்ட இதன் அறிமுகமானது, தனது உலகளாவிய இருப்பை விரிவுபடுத்தும் XPENG நிறுவனத்திற்கு ஒரு முக்கிய மைல்கல்லாகும். XPENG L03 ஆனது, ஸ்மார்ட் தொழில்நுட்பம், உயர் வசதி, மேம்பட்ட பாதுகாப்பு, சிறந்த மின்சார செயல்திறன் ஆகியவற்றை ஒன்றிணைத்து, உலகின் முன்னணி வாகனச் சந்தைகளில் காணப்படும் அதே மேம்பட்ட மின்சார வாகன அனுபவத்தை இலங்கை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

இந்த அறிமுகம் குறித்து Evolution Auto நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவுத் தலைவர் அஷான் விக்ரமசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “XPENG L03 இன் வருகையானது, இலங்கையின் மின்சார வாகனப் பயணத் துறையில் ஒரு முக்கிய திருப்புமுனையாகும். Evolution Auto ஆகிய நாம், செயல்திறன், பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் புதிய தரநிலைகளை அமைக்கின்ற, உலகளாவிய அங்கீகாரம் பெற்ற மின்சார வாகன வர்த்தகநாமங்களை அறிமுகப்படுத்துவதில் உறுதியுடன் உள்ளோம். சர்வதேச சந்தைகளில் வாகனப் போக்குவரத்தின் எதிர்காலத்தை ஏற்கனவே நிர்ணயித்து வரும் உலகத்தரம் வாய்ந்த ஸ்மார்ட் மின்சார வாகன தொழில்நுட்பத்தை இலங்கை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதன் மூலம் XPENG L03 அதன் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது. XPENG L03 உடன், ரூ. 20 மில்லியனுக்கும் குறைவான விலைப் பிரிவில் எமது முதலாவது வாகன வகையையும் நாம் அறிமுகப்படுத்துகிறோம். இது Evolution Auto நிறுவனத்தின் தரமான தயாரிப்புகள் மற்றும் நம்பகமான விற்பனைக்குப் பிந்தைய சேவைகளை இலங்கையின் பரந்த வாடிக்கையாளர் பிரிவினருக்கு மிக எளிதாகக் கிடைக்கச் செய்கிறது.” என்றார்.

Ferrari, Lamborghini, Audi, Genesis, SEAT போன்ற வர்த்தகநாமங்களில் பணியாற்றிய சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற வாகன வடிவமைப்பாளர் JuanMa Lopez (ஜுவான்மா லோபஸ்) அவர்களின் வழிகாட்டலின் கீழ், XPENG L03 வடிவமைக்கப்பட்டுள்ளது. அவரது வடிவமைப்பு நிபுணத்துவம், இந்த வாகனத்தின் sporty fastback styling, நேர்த்தியான Coupe SUV அமைப்பு, வெறுமனே 0.228 Cd எனும் மிகக் குறைந்த காற்றுத் தடை குணகத்தைக் கொண்ட காற்றியல் கட்டமைப்பு மூலம் பிரதிபலிக்கிறது.

600 கி.மீ. வரை பயணிக்கக்கூடிய, மேம்பட்ட மின்சாரத்தின் மூலமான செலுத்துகை (NEDC), 264Nm உச்ச முறுக்குவிசை, மணித்தியாலத்திற்கு 180 கி.மீ. உச்சபட்ச வேகம், 10.5 மீற்றர் திரும்பல் ஆரம்  ஆகியவற்றைக் கொண்ட XPENG L03, வாகன செலுத்துகை திறனை அதிகப்படுத்தும் அதே வேளையில், சிறந்த வாகனம் செலுத்தும் அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உட்புறத்தில், 15.6 அங்குல ஸ்மார்ட் தொடுதிரை மற்றும் 26.8 அங்குல மேல்நோக்கிய (head-up display) திரையை மையமாகக் கொண்ட தொழில்நுட்ப அடிப்படையிலான முன்புற கட்டமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் இது தன்னியக்க பார்க்கிங் உதவி, 360 பாகை கெமரா, ஸ்மார்ட் வொய்ஸ் கன்ட்ரோல் உள்ளிட்ட, XPILOT intelligent driving assistance, adaptive cruise control, lane centring control, automated parking assistance, 360-degree surround-view camera, smart voice control, வாகனத்தின் மென்பொருளை நேரடியாக புதுப்பிக்கும் (OTA) வசதி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. 

உயர்ரக உட்புற அனுபவமானது, நீண்ட தோற்ற அமைப்பை வழங்கும் மேற்புற கண்ணாடி கூரை அமைப்பை (panoramic Starship glass roof), உகந்த வெப்பநிலையைப் பேணுகின்ற காற்றோட்ட வசதி கொண்ட ஏற்கனவே இருந்த ஞாபகத்தை பேணியவாறான முன்புற ஆசனங்கள், 256 வண்ணங்கள் கொண்ட மாறுபட்ட மின்விளக்குகள், XPENG XOPERA 9 ஒலிபெருக்கிகள் கொண்ட surround sound system மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கான 40:20:40 பிரிப்புகளுடன் மடிக்கக் கூடிய பின்புற இருக்கைகள் ஆகியவற்றுடன் இவ்வாகனம் மேலும் வசதியாக்கப்பட்டுள்ளது.

XPENG L03 பாதுகாப்பிற்குத் தொடர்ச்சியாக முன்னுரிமை அளிக்கிறது. இந்த வாகனம் C-NCAP, Euro NCAP மற்றும் ANCAP பாதுகாப்புப் பொறியியல் தரநிலைகளிலிருந்து 5 நட்சத்திர பாதுகாப்புச் சான்றிதழ்கள் இரண்டைப் பெற்றுள்ளது. இது 7 எயார்பேக்குகள், உயர் வலிமை கொண்ட வாகன உடல் கட்டமைப்பு, சாரதி கண்காணிப்புத் தொழில்நுட்பம், முன்புற மோதல் தடுப்பு கட்டமைப்பு, கண்ணுக்கு புலப்படாதவற்றை கண்டறியும் தொழில்நுட்பம் (blind spot detection), பாதை ஒழுங்கையை பின்பற்றி பயணிக்கும் உதவி (lane keeping assistance) ஆகியவற்றையும் கொண்டுள்ளது.

மேம்பட்ட மென்பொருள், ஸ்மார்ட் வாகன செலுத்துகை தொழில்நுட்பங்கள் மற்றும் புத்தாக்கமான பொறியியல் ஆகியவற்றைக் கொண்ட வாகனங்கள் மூலம் புகழ்பெற்று வரும் XPENG, உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட் மின்சார வாகன உற்பத்தியாளர்களில் ஒன்று எனும் தனது நிலையைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. XPENG நிறுவனத்தின் ஸ்மார்ட் போக்குவரத்து இயங்குதளத்தின் மீதான உலகளாவிய நம்பிக்கை, சீனாவில் 22 மாதங்களில் 280,000 இற்கும் அதிகமான MONA M03 வாகனங்களின் விற்பனையின் வெற்றியின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

XPENG L03 விரைவில் இலங்கை முழுவதும் உள்ள Evolution Auto காட்சியறைகளில் கிடைக்கவுள்ளதோடு, வாடிக்கையாளர்கள் இந்த புதிய ஸ்மார்ட் மின்சார Coupe SUV வாகனத்தை முன்பதிவு செய்து கொள்ள முடியும். மேலதிகத் தகவல்களுக்கு அல்லது முன்பதிவு செய்ய, www.xpeng.lk என்ற இணையதளத்திற்கு பிரவேசியுங்கள் அல்லது 0777 553 355 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள்.

உலகளாவிய ஸ்மார்ட் மின்சார வாகனப் போக்குவரத்திற்கான எதிர்காலம் ஏற்கனவே வந்துவிட்டது. அது தற்போது இலங்கையை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.

END