இலங்கை இளைஞர்களை Web3 சார்ந்த பொருளாதாரத்திற்குத் தயாராக்கும் Bybit Rising Fund மற்றும் Ceylon Cash

உலகளாவிய ரீதியில் வர்த்தக ரீதியாக இரண்டாவது பாரிய கிரிப்டோகரன்சி பரிமாற்ற தளம் எனப் பெயர்பெற்ற Bybit (பைபிட்), Web3Ceylon என்ற இலங்கையின் மிகப்பெரிய சமூகத்தால் வழிநடத்தப்படும் புளொக்செயின் கல்வி மற்றும் தழுவல் திட்டத்தை முன்னெடுத்து வரும் Ceylon Cash உடன் இணைந்து, இலங்கையில் Bybit Rising Fund (பைபிட் ரைசிங் ஃபண்ட்) திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக பெருமையுடன் அறிவித்துள்ளது. Web3 கல்வியை ஊக்குவித்து, புளொக்செயின் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஆர்வம் கொண்ட அடுத்த தலைமுறையினரை ஊக்கமளிப்பதை இந்த கூட்டு முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.
Web3Ceylon ஊடாக, Bybit மற்றும் Ceylon Cash இணைந்து கொழும்பு (செப்டெம்பர் 20, 2025), காலி (செப்டெம்பர் 17, 2025), கண்டி (செப்டெம்பர் 28, 2025), மற்றும் எல்ல (ஒக்டோபர் 12, 2025) ஆகிய நகரங்களில் கல்விக் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்துள்ளது. கிரிப்டோகரன்சி, Distributed ledger technology மற்றும் on-chain security ஆகியன தொடர்பில் விழிப்புணர்வும் புரிதலும் ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும். புதியவர்கள், ஆய்வாளர்கள், ஆக்கபூர்வமான நிர்மாணங்களை வெளியிடுவோர் (creators and builders) அனைவரும் இதன் மூலம பயனடைய முடியும்.
இந்த நான்கு கருத்தரங்குகளும், புளொக்செயின் புத்தாக்கம் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் முன்னணியில் உள்ள நிபுணர்களுடன், இலங்கையைச் சேர்ந்த ஆக்கபூர்வ நிர்மாணங்களை மேற்கொள்வோர், கற்பவர்கள் மற்றும் கற்பிப்போர்களை இணைப்பதை குறிக்கோளாகக் கொண்டுள்ளன. புளொக்செயின் செயற்படுத்தப்பட்ட எதிர்காலத்தை அனைவரும் அணுகும் வழியைக் காண்பிக்கும் வகையில் ஒவ்வொரு நகரிலும் ஒரு நிகழ்வு நடத்தப்படவுள்ளது .
முக்கிய அம்சங்கள்:
- இலங்கையின் நான்கு நகரங்களில் 600 பேருக்கு வாய்ப்பு.
- அறிவு பரிமாற்றம்: Wallets, Smart Contracts, Web3 திட்டம் உருவாக்குதல் போன்ற அடிப்படை விடயங்கள் குறித்து செய்முறை ரீதியான அமர்வுகள்.
- ஆழமான தகவல்கள்: புளொக்செயின் தொடர்பான் தொழில்நுட்பம், பயன்பாடு, வணிகம் ஆகிய விடயங்களில் துறைசார் நிபுணர்கள் உலகத்தின் தற்போதைய நடப்புகளை பகிர்வர்.
- மாற்றத்தை உருவாக்குவோரை இணைத்தல்: ஆக்கங்களை உருவாக்குவோர், நிர்மாணிப்போர் மற்றும் தொழில்முனைவோர்களை (creators, builders, entrepreneurs) ஒன்றிணைத்து, உள்நாட்டு சமூகத்தினரின் தேவைகளுக்கு ஏற்ப இலங்கையில் வளர்ச்சியடையும் புதிய வாய்ப்புகளை உருவாக்குதல்.
பதிவு (Registration) கட்டாயம் என்பதோடு அனுமதியின் அடிப்படையில் அங்கீகரிக்கப்படும்
Ceylon Cash சமூகத் தலைவரான நிசால் சந்திரசேகர இது குறித்து தெரிவிக்கையில், “அனைவரையும் கருத்தில் கொண்டு இந்த கருத்தரங்குகளை நாம் வடிவமைத்துள்ளோம். அடிப்படை முதல் தொழில்நுட்ப அம்சங்கள் வரை இங்கு ஆராயப்படும். நீங்கள் புளொக்செயின் பயணத்தை ஆரம்பிக்க விரும்பும் ஒரு டெவலப்பராகவோ, கிரிப்டோ கட்டணம் செலுத்தல்களில் ஆர்வமுள்ள சிறு தொழில்முனைவோராகவோ, அல்லது Web3 எதிர்காலத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவராகவோ இருக்கின்றீர்களா, உங்களுக்கே இந்த வாய்ப்பு.” என்றார்.
வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரம், அதிக கையடக்கத் தொலைபேசி பயன்பாடு, புளொக்செயின் மற்றும் கிரிப்டோகரன்சிகளில் அதிகரித்து வரும் ஆர்வத்துடன், Web3 இல் உருவாகும் மாற்றத்திற்கான வாய்ப்புகளைப் பெற இலங்கை மிகச் சிறந்த தருணத்தில் உள்ளது. Bybit நடத்தும் World Series of Trading (WSOT) 2025 முயற்சியின் ஒரு அங்கமான “Bybit Rising Fund” ஆனது, உள்நாட்டு Web3 ஆர்வலர்கள், ஆக்கபூர்வ நிர்மாணங்களை உருவாக்குவோர் மற்றும் கல்வியாளர்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில், அவர்கள் சமூகத்திற்கு தலைமைத்துவம் வழங்கும வகையில் ஊக்குவிக்கிறது.
Bybit Rising Fund ஆனது, WSOT 2025 இன் கீழ் உள்ள ஒரு சமூகத்தை அடையும் திட்டமாகும். உள்ளூர் சமூகங்களுக்கு புளொக்செயின் கல்விக்கான அணுகல் மற்றும் தரத்தை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும். இந்த அனைத்து நிகழ்வுகளுக்கும் பதிவு கட்டாயம் என்பதோடு அனுமதியின் அடிப்படையில் அது அங்கீகரிக்கப்படும்.
#Bybit / #TheCryptoArk
Bybit பற்றி
Bybit உலகளாவிய சமூகத்தில் 70 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனாளர்களுக்கு சேவை அளித்து, பரிவர்த்தனையின் அடிப்படையில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய கிரிப்டோகரன்சி பரிமாற்றமாக திகழ்கிறது. 2018 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட Bybit, அனைவருக்கும் எளிமையான, திறந்த மற்றும் சமமான சூழலை உருவாக்குவதன் மூலம் மையப்படுத்தப்படாத உலகில், திறந்த தன்மைக்கான அம்சத்தை மீள்வடிவமைக்கிறது. Web3 மீது வலுவான கவனம் செலுத்தும் Bybit, முன்னணி புளொக்செயின் நெறிமுறைகளுடன் மூலோபாய ரீதியாக கூட்டாண்மையை ஏற்படுத்தி வலுவான உட்கட்டமைப்பை வழங்குவதோடு, on-chain புத்தாக்கத்தை வழிநடத்துகிறது. பாதுகாப்பான வைத்திருப்பு, பல்வகை சந்தை, நம்பிக்கை மிக்க பயனர் அனுபவம் மற்றும் மேம்பட்ட புளொக்செயின் கருவிகளுக்காக புகழ்பெற்ற Bybit ஆனது, TradFi (பாரம்பரிய நிதி) மற்றும் DeFi (மையப்படுத்தப்படாத நிதி) இடையேயான இடைவெளியை நிரப்பி, Web3 இன் முழுத் திறனை வெளிப்படுத்துவதற்காக ஆக்கபூர்மான நிர்மாண உருவாக்குநர்களையும், படைப்பாளிகளையும், ஆர்வலர்களையும் ஊக்குவிக்கிறது. மையப்படுத்தப்படாத நிதியின் எதிர்காலத்தை Bybit.com தளம் ஊடாக அறியுங்கள்.
Bybit தொடர்பான மேலதிக விபரங்களுக்கு: Bybit Press