இலங்கையில் தொழில் வழிகாட்டல் அதிகாரிகளுக்கு திறன் வளர்ப்பு பயிற்சியை வழங்கும் UBION மற்றும் KOICA:

இலங்கையில் தொழில் வழிகாட்டல் அதிகாரிகளுக்கு திறன் வளர்ப்பு பயிற்சியை வழங்கும் UBION மற்றும் KOICA:

70 நிறுவனங்கள் மற்றும் 200 CGO அதிகாரிகளை சென்றடைந்த TVET Career Platform திட்டம்

கொரிய தொழில்நுட்பக் கல்வி (Edtech) நிறுவனமான UBION, கொரியா சர்வதேச ஒத்துழைப்பு முகவருடன் (KOICA) இணைந்து, TVET தொழில் தளத் திட்டத்தை முன்னெடுப்பதற்காக இலங்கையின் மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவுடன் (TVEC) கைகோர்த்துள்ளது. இந்த முயற்சியின் நோக்கம், சர்வதேச ரீதியான சிறந்த நடைமுறைகளுக்கு ஏற்ற வகையில் இலங்கையில் தொழில் வழிகாட்டல் அதிகாரிகளின் (CGOs) தகைமைகள் மற்றும் தொழில்முறை ரீதியான தரத்தை மேம்படுத்துவதாகும்.

அந்த வகையில், அத்துருகிரியவில் உள்ள தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்தில், 2024 ஜூலை 09 முதல் 2024 ஜூலை 11 வரை, சுமார் 30 CGO அதிகாரிகளுக்கு விசேட பயிற்சி நிகழ்ச்சியொன்று நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சித் திட்டத்தைத் தொடர்ந்து அநுராதபுரம் மற்றும் பதுளை உள்ளிட்ட இலங்கையின் பல்வேறு இடங்களில் 200 இற்கும் மேற்பட்ட CGO அதிகாரிகளுக்கு விரிவான ஆறு வார பயிற்சித் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இப்பயிற்சித் திட்டமானது, தொழில் வழிகாட்டல் பயிற்சியாளர்களுக்கான அறிமுகம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் இடம்பெறுகின்றது. இதில், NVQ நிலை 4-5 தொழில் வழிகாட்டல் பயிற்சியாளர்களின், பயிற்சி உள்ளடக்கம் மற்றும் நோக்கங்களை TVEC நிறுவகத்தின் சான்றிதழ் அலுவலர்கள் விளக்குவதோடு, அது தொடர்பான விரிவான கண்ணோட்டத்தையும் வழங்குகிறார்கள். தொழில் வழிகாட்டலில் கோட்பாட்டு கட்டமைப்புகள் மற்றும் அதன் நடைமுறைப் பயன்பாடுகளை உள்ளடக்கிய ஆழமான பயிற்சியை வழங்குகின்ற மனிதவள பொது வல்லுநரான அஜித் போபிட்டியவினால் தொழில்முறை ரீதியான தொழில் வழிகாட்டல் பயிற்சி வழங்கப்படும்.

இறுதியாக, கொரிய தொழில் மேம்பாட்டு ஆலோசக நடைமுறைகளின் மேலோட்டம் வழங்கப்படும். இங்கு பிரபல கொரிய மருத்துவர் மற்றும் பேராசிரியரால், கொரியாவில் உள்ள தொழில் மேம்பாட்டு ஆலோசகர்களின் பாத்திரங்கள் மற்றும் திறன்கள் பற்றிய நுண்ணறிவுகள் பகிர்ந்து கொள்ளப்படுவதோடு, கொரியாவின் NVQ, NCS மற்றும் முக்கிய வேலைவாய்ப்பு கொள்கைகள் பற்றிய அறிமுகமும் இதில் வழங்கப்படும்.

பகிரப்பட்ட பரந்த அறிவிற்கான அணுகலை அதிகரிக்கும் வகையில், ஆரம்ப பயிற்சி அமர்வுகள் YouTube அலைவரிசையில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டதோடு, முக்கிய அமர்வுகள் ஒளிப்பதிவு செய்யப்பட்டு, தொழில் தளத்தில் பதிவேற்றப்படவுள்ளன. நேரில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்கு பயிற்சி அமர்வுகளின் விடயங்களை அறிந்து பயனடைவதை இது உறுதி செய்கிறது.

இலங்கையில் கல்வி மற்றும் தொழில்சார் திறன்களை மேம்படுத்துவது தொடர்பான தமது அர்ப்பணிப்பு காரணமாக, KOICA, UBION, TVEC ஆகியன ஒரே நோக்கத்துடன் ஒன்றிணைந்துள்ளன. தொடர்ச்சியான முயற்சிகள் மற்றும் கூட்டு முயற்சிகள் மூலம், இந்த நிறுவனங்கள் இலங்கையின் உள்நாட்டு மற்றும் சர்வதேச தொழில் சந்தைக்கு அவசியமான தகைமைகளை பூர்த்தி செய்வதை உறுதிப்படுத்துகின்ற, மிக உயர்ந்த திறமையான பணியாளர்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.