இலங்கையில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு முதலாவது IM 6 மின்சார வாகனத்தை விநியோகம் செய்த மைல்கல்லை பதித்த Evolution Auto
Evolution Auto நிறுவனம் இலங்கையில் தமது வாடிக்கையாளர்களுக்கு IM 6 மின்சார வாகனங்களின் முதல் தொகுதியை வெற்றிகரமாக விநியோகித்துள்ளது. இவ்வர்த்தகநாமத்தைப் பொறுத்தவரை இது ஒரு முக்கிய மைல்கல்லாகும். அத்துடன், பிரீமியம் ரக மற்றும் எதிர்காலத்திற்கு ஏற்ற மின்சார வாகனங்களை உள்ளூர் சந்தைக்கு வழங்குவதற்கான தனது உறுதிப்பாட்டையும் இது மீண்டுமொருமுறை உறுதிப்படுத்துகிறது.
இந்த உத்தியோகபூர்வ அறிமுகத்தைத் தொடர்ந்து, முதலாவது IM 6 வாகன தொகுதிகளை இவ்வர்த்தகநாமம் விநியோகித்துள்ளது. வெறுமனே வாகனங்களை கையளிப்பது மாத்திரமல்லாது, Evolution Auto தனது வாக்குறுதிகளை நிறைவேற்றும் திறனையும், வீதிப் பயணத்தின் யதார்த்தத்திற்கு தடையின்றி மாறும் திறனையும் இது காட்டுகிறது. தற்போது இலங்கையில் IM 6 வாகனங்களை வாடிக்கையாளர்கள் செலுத்த தொடங்கியுள்ளதன் மூலம், செயற்பாட்டுக்குத் தயாரான, வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற பிரீமியம் மின்சார வாகன வர்த்தகநாமமாக IM மாறியுள்ளதை உறுதிப்படுத்துகிறது.
அதிநவீன வடிவமைப்பு, அறிவு சார்ந்த தொழில்நுட்பம், மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன், பிரீமியம் மின்சார வாகனச் சந்தையில் IM 6 தனித்து விளங்குகிறது. 26.3 அங்குல தகவல் மற்றும் பொழுதுபோக்கு திரை (infotainment display), 10.5 அங்குல இரண்டாம் நிலைத் திரை, crab mode வசதியுடன் கூடிய நான்கு சக்கரத் திசையிலான கட்டுப்பாடு மற்றும் Level 2 தன்னியக்க வாகன செலுத்தல் உதவி (automated driving assistance) ஆகியன ஒரு நேர்த்தியான, எதிர்காலத்தை நோக்காகக் கொண்ட வாகனம் செலுத்தும் அனுபவத்தை வழங்கும் முக்கிய அம்சங்களாகும்.
வாகனத்தை விநியோகிப்பதற்கு மேலதிகமாக, விற்பனைக்குப் பிந்தைய சேவைக்கான தயார்நிலைக்கும் Evolution Auto முன்னுரிமை வழங்குவதன் மூலம் உரிமையாளருக்கான சிறந்த அனுபவத்தை உறுதி செய்கின்றது. பேலியகொடையில் அமைந்துள்ள பிரத்தியேக மின்சார வாகனங்களுக்கான விற்பனைக்குப் பிந்தைய சேவை வழங்கும் மையம் மற்றும் அது தொடர்பான விசேட சேவைக்குழுவினர் ஆகியன, நீண்டகால நம்பகத்தன்மை, சிறந்த சேவை மற்றும் மன நிம்மதியை IM வாகன உரிமையாளர்களுக்கு வழங்குகின்றன.
இந்த முதலாவது தொகுதியின் விநியோகமானது, இலங்கையில் பிரீமியம் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருவதைக் காட்டுகிறது. நுகர்வோர் நம்பிக்கை, தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் நிலைபேறான போக்குவரத்துத் தீர்வுகளை நோக்கி நகர்தல் ஆகிய விடயங்கள் காரணமாக இது தூண்டப்படுகிறது.
இந்த முக்கிய தருணம் குறித்து Evolution Auto நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவின் தலைவர் அஷான் விக்ரமசிங்க தெரிவிக்கையில்: “எமது முதலாவது தொகுதி IM 6 வாகனங்களின் விநியோகமானது, Evolution Auto நிறுவனத்தைப் பொறுத்தவரை பெருமைக்குரிய மற்றும் ஒரு முக்கிய தருணமாகும். இது எம் மீதான வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை அடையாளப்படுத்துவதுடன், உலகத்தரம் வாய்ந்த மின்சார வாகனங்களை மட்டுமல்லாமல், நம்பகமான விற்பனைக்குப் பிந்தைய சேவைக்கான ஆதரவுடன் கூடிய முழுமையான அனுபவத்தை வழங்குவதற்கான எமது அர்ப்பணிப்பையும் எடுத்துக் காட்டுகிறது. எமது ஆரம்ப வாடிக்கையாளர்களுக்கு நாம் நன்றியுடையவர்களாக இருப்பதோடு, இலங்கையில் ஒரு பிரீமியம் மின்சார வாகன வர்த்தகநாமமாக IM வர்த்தகநாமத்தின் தொடர்ச்சியான வளர்ச்சியானது எமக்கு பாரிய நம்பிக்கையை ஏற்படுத்துகிது.” என்றார்.
தற்போது IM 6 வாகனங்கள் வீதிகளில் பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில், இலங்கையின் மின்சார வாகனங்களின் சூழல் கட்டமைப்பில் நம்பகமான மற்றும் திறமையான பங்காளியாக தனது நிலையை Evolution Auto நிறுவனம் மேலும் பலப்படுத்துகிறது. இது வாடிக்கையாளர்களுக்கு நீண்டகால ஆதரவையும், புத்தாக்கம் மற்றும் செயற்பாட்டு உறுதித் தன்மையை வழங்குகிறது.
IM மற்றும் Evolution Auto பற்றிய மேலதிக தகவல்களுக்கு, www.immotors.lk எனும் இணையத்தளத்தைப் பார்வையிடவும் அல்லது 0777 553 355 எனும் தொலைபேசி இலக்கத்தைத் தொடர்பு கொள்ளவும்.
END