இலங்கையில்இரத்தினக்கல்மற்றும்ஆபரணதொழில்துறையானதுஅதன்பிரகாசத்தைஇழக்கிறதா?

இலங்கையில்இரத்தினக்கல்மற்றும்ஆபரணதொழில்துறையானதுஅதன்பிரகாசத்தைஇழக்கிறதா?

இரத்தினக்கல்மற்றும்ஆபரணத்துறையின்படிப்படியானஇடம்பெயர்வுபற்றிஎச்சரிக்கைவிடுக்கும் SLGJA

பெறுமதி சேர் வரி (VAT) உள்ளிட்ட பல்வேறு அதிக வரிகளை சுமத்துகின்றமையானது, இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழில் துறையில் உள்ள வணிகங்களை, அத்தகைய வணிகத்திற்கான சாதகமான சூழல்ககளைக் கொண்ட வேறு நாடுகளுக்கு இடம்பெயர்வதற்கு தூண்டுகின்ற, அதிகரித்து வரும் கவலை தொடர்பில் இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் (SLGJA) அதன் கவனத்தை வெளிப்படுத்துகிறது. பிரதானமாக வெளிநாடுகளுக்கு மீள்ஏற்றுமதி செய்வதற்கு அல்லது பெறுமதி சேர்க்கப்பட்டு நாட்டிற்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு வெளிநாட்டு நாணயத்தில் உள்நாட்டில் விற்கப்படும் நோக்கில் இறக்குமதி செய்யப்படும் பட்டை தீட்டப்படாத மற்றும் தீட்டப்பட்ட இரத்தினக் கற்களுக்கு 18% VAT வரி விதிக்கப்படுகின்றமையானது, அவை, இலங்கையில் அதன் நிலைபேறான தன்மையையும், இத்தொழில்துறையின் பல்வகைத் தன்மையையும் இழக்கும் வகையிலான, தீங்கான நிலைக்கு அதனை மாற்றியமைத்துள்ளது.

18% VAT வரி விதிப்பின் காரணமாக, இத்தொழில்துறையானது துபாய், இந்தியா, ஹொங்கொங், தாய்லாந்து போன்ற வளர்ந்து வரும் போட்டியாளர்களாகக் காணப்படும் நாடுகளுக்கு இடமாற்றத்திற்குள்ளாகும் அபாயம் அதிகரிக்குமென, SLGJA ஏற்கனவே எச்சரித்து வந்தது. இந்த நாடுகள் ஒவ்வொன்றும் அந்தந்த இரத்தினக்கல் மற்றும் நகைத் தொழில்துறைகளுக்கு ஒற்றை இலக்கத்திலான VAT வரிகளை பேணுகின்றன. அந்த நாடுகளுக்கும் எமது நாட்டுக்கும் இடையிலான இந்த ஏற்றத்தாழ்வானது, இலங்கையின் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையை ஒரு போட்டியற்றதாக மாற்றும் நிலைக்குத் தள்ளியுள்ளது. இதன் மூலம் இத்துறையில் உள்ள 600,000 இற்கும் மேற்பட்ட ஊழியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இலங்கையின் இரத்தினக்கல் மற்றும் ஆபரண ஏற்றுமதியில் 70% ஆனவை, வாடிக்கையாளர்களின் விருப்பத்தின் அடிப்படையிலான தெரிவுகள், வண்ண அமைப்பு, தரம் ஆகியவற்றின் அடிப்படையில் இறக்குமதி செய்யப்பட்ட விலையுயர்ந்த, பட்டை தீட்டப்படாத கற்களையே அதிகம் நம்பியிருந்த நிலை முன்னர் காணப்பட்டது. சுமார் 99.9% ஆன இரத்தினக்கற்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன அல்லது சுற்றுலாப் பயணிகளுக்கு விற்கப்படுகின்றன. ஆனால், VAT வரி அதிகரிப்பின் விளைவாக இலங்கைக்கான இரத்தினக்கற்களின் இறக்குமதியும் வெகுவாகக் குறைவடைந்துள்ளன. இதன் காரணமாக நகை உற்பத்தியாளர்கள் மற்றும் பட்டைதீட்டுவோர் தங்களது வர்த்தகத்தை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் பாரிய வேலைவாய்ப்பின்மையும் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கத்தின் தலைவர் அஜ்வார்ட் டீன் இது பற்றி தெரிவிக்கையில், “தங்கள் சொந்தப் பணத்தில் சவாலை எதிர்கொள்ளத் தயாராகும் வியாபாரிகளுக்கு இந்த வரிகள் பெரும் தடையாக காணப்படுகின்றன. இந்த வர்த்தகத்திற்கு வங்கிகள் கடன் வசதிகளை வழங்குவதில்லை. இது இவ்வாறான வணிகங்களின் நிலைமையை மேலும் சிக்கலாக்குகின்றது. வெளிநாட்டு நாணயம் மூலமான விற்பனைகள் மீதான VAT வரியானது, வெளிநாட்டில் செலவிடப்படும் போது அதனை மீளப் பெறுவதற்கான வழிமுறைகள் இல்லாமல் உள்ளது. இதன் காரணமாக, சுற்றுலாப் பயணிகளுக்கான விற்பனையின் ஆர்வத்தை இது குறைப்பதோடு, இது போட்டித்தன்மையை இல்லாமல் செய்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அத்துடன், நிகர இலாபத்தின் மீதான 36% வரியை குறைப்பதன் மூலம், இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான 18% VAT வரியை குறைப்பதன் மூலமும் இலங்கையின் இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணங்களை உலகளாவிய ரீதியில் அதிக போட்டித்தன்மை கொண்டதாக மாற்றும்.

‘இரத்தினங்களின் தீவு’ எனும் நற்பெயரை இலங்கை பெற்றுள்ளதுடன், இரத்தினக்கல் தொழில் துறையில் நீண்ட மற்றும் புகழ் பெற்ற வரலாற்றையும் அது கொண்டுள்ளது. இத்தொழில்துறையானது இலங்கையின் கலாசார பாரம்பரியத்தின் ஒரு அங்கமாக இருந்து வருகிறது. இத்தொழில்துறையானது, நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு இன்றியமையாத அந்நியச் செலாவணியின் உயிர்நாடியாக இருப்பதால் அதன் மீதான பொருளாதார தாக்கமானது கணிசமான இழப்பை ஏற்படுத்தும். உயர்தர இரத்தினக் கற்களை உற்பத்தி செய்யும் நாடுகளின் நற்பெயரானது உலகளாவிய ரீதியில் ஏற்கனவே சிறந்த இடத்தை வகிக்கின்றது. இந்த நற்பெயரைப் பேணுவதற்கும், தேவையான ஆதரவை வழங்குவதும், வரி சீர்திருத்தங்கள் மற்றும் நெறிப்படுத்தப்பட்ட ஒழுங்குமுறைகள் போன்ற இலங்கை இரத்தினங்களின் உலகளாவிய போட்டித்தன்மையை மேம்படுத்தும் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்படுவதும் இன்றியமையாததாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ENDS