இலங்கையின் பாரம்பரிய அழகு இரகசியத்தை ‘Whispering Island’ மூலம் உலகிற்கு எடுத்துச் செல்லும் சுதேசி

உலகெங்கிலும் உள்ள நுகர்வோருக்கு தனது புதிய அழகு வர்த்தகநாமமான ‘Whispering Island’ (விஸ்பரிங் ஐலண்ட்) இனை அறிமுகப்படுத்துவதில் சுதேசி இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் பெருமையடைகின்றது. இதன் மூலம் இலங்கையின் பண்டைய பாரம்பரியத்திற்கு சுதேசி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் புத்துயிரளிக்கிறது. இலங்கையின் வளமான அழகு பாரம்பரியத்திலிருந்து உத்வேகம் பெற்றுள்ள இந்த இலங்கை வர்த்தகநாமம், பண்டைய நடைமுறைகளை நவீன விஞ்ஞானத்துடன் இணைத்து இயற்கையின் உண்மையான சமநிலையை பிரதிபலிக்கும் தயாரிப்புகளை உருவாக்குகிறது.
அழகு மற்றும் ஆரோக்கிய வாழ்க்கை முறையின் அடிப்படை அம்சமாகக் கருதப்படும் பண்டைய இலங்கை அழகு மரபுகளை, சுதேசி Whispering Island மீண்டும் நுகர்வோரிடம் கொண்டு சேர்க்கிறது. பண்டைய காலங்களில் ராஜாக்களும் ராணிகளும் தங்கள் சுகவாழ்வைப் பராமரிக்கப் பயன்படுத்திய இயற்கை மற்றும் பண்டைய அழகு முறைகள் Whispering Island இன் அடிப்படை எண்ணக்கருவாக காணப்படுகின்றன. சரும அழகுபடுத்தலுக்கு அவசியமான உள்ளூர் மருத்துவ மூலிகைகள் மற்றும் மூலிகைப் பொருட்களை கவனமாகத் தேர்ந்தெடுத்து, சருமத்திற்கு போசாக்களிப்பது மட்டுமல்லாமல் மனதையும் ஆன்மாவையும் மேம்படுத்தும் வல்லமை வாய்ந்த, தூய்மையான பாரம்பரிய நாட்டு வைத்தியங்களாக நிறுவனம் மாற்றியுள்ளது. இந்தப் பண்டைய நடைமுறைகள், உள்நாட்டுத் தொழில்துறையினரால் மீண்டும் ஆய்வு செய்யப்பட்டு, அவற்றின் அசல் வடிவத்தில் பாதுகாக்கப்பட்டு, இன்றைய காலத்திற்கு ஏற்றவாறு நவீன கலவைகளுடன் சேர்க்கப்பட்டு, உயர்ந்த தரம் மற்றும் செயல்திறன் கொண்ட தயாரிப்பு வரிசையாக நுகர்வோருக்குக் கொண்டு சேர்க்கப்படுகின்றன.
Whispering Island இன் தயாரிப்பு வரிசையின் அடித்தளமாக, உடலுக்கும் மனதுக்கும் பயனளிக்கும் இயற்கை மற்றும் உள்ளூர் மூலப்பொருட்களின் கலவைகள் அமைகின்றன. மிருதுவான பக்டீரியா எதிர்ப்பு மற்றும் குணப்படுத்தும் பண்புகளுக்காக பண்டைய இலங்கை சமூகங்களால் பயன்படுத்தப்பட்ட வேம்பு, சருமத்தை கிருமிகளிலிருந்து பாதுகாக்கவும், புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. சருமத்திற்கு வெண்மையை வழங்குவதற்கும், சருமத்தின் கருமையான நிறத்தைக் குறைப்பதற்கும் பல நூற்றாண்டுகளாக ஒரு பிரபலமான மூலப்பொருளாக சந்தனம் பயன்படுத்தப்படுகிறது. அழகியலில் இன்றியமையாத ஒரு பொருளாக சந்தனம் தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது. சருமத்திற்கு ஈரலிப்பை வழங்கி, ஊட்டமளித்து, பாதுகாப்பதற்கு பெயர் பெற்ற தேங்காய், இலங்கையின் பாரம்பரிய அழகு சாதனப் பொருட்களில் ஒரு முக்கிய மூலப்பொருளாகும். தொன்று தொட்டு வாசனைத் திரவியமாகவும் அழகுசாதனப் பொருளாகவும் மதிக்கப்படும் கறுவா, இறந்த சருமக் கலங்களை மிருதுவாக நீக்கி, மென்மையான சருமத்தை வழங்க உதவுகிறது. சக்திவாய்ந்த ஒட்சிசனேற்ற பண்புகள் நிறைந்த முருங்கை, அது கொண்டுள்ள வயதாதலை எதிர்க்கும் பண்புகளுக்காக பண்டைய அழகு பாரம்பரிய சடங்குகளில் மதிக்கப்படுகிறது. சருமத்தை குணப்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ள வெனிலா, சருமப் பராமரிப்பில் சருமத்திற்கு மென்மையான தன்மையை சேர்க்கிறது. இந்த தனித்துவமான பொருட்களின் கலவையுடன், உடல் பராமரிப்பு சவர்க்காரங்கள், பாத் மற்றும் ஷவர் ஜெல், பேஸ் வொஷ் போன்ற அழகுப் பராமரிப்பு பொருட்கள், ஷாம்புகள் (சல்பேட் அற்ற), கண்டிஷனர்கள் மற்றும் பொடி லோஷன்கள், ஹேண்ட் கிரீம்கள், டே கிரீம்கள், நைட் கிரீம்கள் உள்ளிட்ட சருமப் பராமரிப்பு பொருட்கள் உள்ளிட்ட முழுமையான தனிநபர் பராமரிப்பு தயாரிப்பு வரிசைகளை Whispering Island வழங்குகிறது.
நெறிமுறை ரீதியாகவும் நிலைபேறானதாகவும் பெறப்பட்ட இயற்கை மூலப்பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் Whispering Island இந்த வளமான பாரம்பரியத்திற்கு கௌரவத்தை வழங்குகிறது. இதிலுள்ள ஒவ்வொரு தயாரிப்பும் இயற்கையின் சாரத்தைப் வெளிப்படுத்தி, பண்டைய இலங்கை மரபுகளிலிருந்து உத்வேகத்தைப் பெறுகிறது. இந்த அனைத்து தயாரிப்பு வரிசைகளும் 100% மூலிகைப் பொருட்களைக் கொண்டிருப்பதாக ஐக்கிய இராச்சியத்தின் சைவ சங்கத்தால் சான்றளிக்கப்பட்டுள்ளன. இது உள்நாட்டுத் தொழில்துறையின் தொலைநோக்குப் பார்வை நடைமுறைகள், நெறிமுறை மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த தெரிவுகளை நோக்கி நுகர்வோரை வழிநடத்தும் தொழில்துறையின் விருப்பத்திற்கான அளவீடாகும்.
சுதேசி இண்டஸ்ட்ரீஸ் அழகுக்கு அப்பாற்பட்ட சமூகப் பொறுப்புணர்வுக்கு வலுவான முக்கியத்துவம் அளிக்கிறது. சமூகத்திற்குத் திருப்பிக் கொடுப்பதும் சுற்றுச்சூழலைப் பராமரிப்பதும் Whispering Island இன் தனித்துவமான அம்சமாக விளங்குகின்றன. சுதேசி நிறுவனம் நெறிமுறைக் கொள்கைகளைப் பின்பற்றுவதன் மூலமும் நியாயமான வர்த்தக நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலமும் உள்நாட்டிலுள்ள குடும்பங்கள் மற்றும் கிராமிய சமூகங்களை ஆதரிக்கிறது. சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயம் மற்றும் உற்பத்தி முறைகளை சுதேசி பின்பற்றுகிறது. இதன் மூலம் தமது தயாரிப்புகள் சாதகமான மற்றும் சிறந்த பிரதிபலன் கொண்ட முடிவுகளை வழங்குவதை உறுதி செய்து, சூழலுக்கு நட்பான விவசாயம் மற்றும் உற்பத்தி நடைமுறைகளை சுதேசி கடைப்பிடித்து வருகிறது. Whispering Island தயாரிப்பு வரிசையில் உள்ள காகித பொதியிடலானது, FSC சான்றளிக்கப்பட்டதாகும். Whispering Island இல் பயன்படுத்தப்படும் அனைத்து வாசனைத் திரவியங்களும் சர்வதேச வாசனை திரவிய சங்கத்தால் (IFRA) அங்கீகரிக்கப்பட்டுள்ளதோடு, அனைத்து Whispering Island தயாரிப்புகளும் ISO 9001:2015 தரச் சான்றிதழ்களின் கீழ் தயாரிக்கப்படுகின்றன.
80 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்தைக் கொண்ட சுதேசி, இலங்கையின் மிகவும் நம்பகமான தனிநபர் மூலிகை பராமரிப்புப் பொருட்களை உற்பத்தி செய்து, மிக உயர்ந்த தரத்தைப் பேணுகிறது. பண்டைய மரபுகளை நவீன விஞ்ஞானத்துடன் இணைத்து, தூய்மையான, இயற்கையான மற்றும் விலங்கு கொடுமையற்ற சருமப் பராமரிப்பு தீர்வுகளை Whispering Island வழங்குகிறது. சுதேசியின் ஒவ்வொரு தயாரிப்பும், உள்ளூர் பாரம்பரியத்தால் ஈர்க்கப்பட்ட நவீன தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்பட்ட சருமப் பராமரிப்பில் நுகர்வோருக்கு ஒரு திருப்புமுனையை அனுபவிக்க வழிவகுக்கின்றன. சுதேசி தொழில்துறையின் பண்டைய மரபுகளைப் பாதுகாத்து புத்தாக்கத்தை முன்னெடுப்பதற்கான நிறுவனத்தின் நோக்கத்திற்கு சாட்சியமளிப்பதோடு, பாரம்பரியம் மற்றும் புத்தாக்கத்தின் சரியான கலவையான, நவீன யுகத்திற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட, பண்டைய இலங்கையின் அழகு இரகசியங்களைக் கண்டறிய Whispering Island உலகிற்கு அழைப்பு விடுக்கிறது.
Whispering Island மற்றும் அதன் தயாரிப்புகள் பற்றிய மேலதிக தகவலுக்கு, www.whisperingisland.com இணையத்தளத்தைப் பார்வையிடவும்.