
இலங்கையின் இரத்தினக் கற்களின் பொற்காலம்: ‘FACETS Sri Lanka 2026’ கண்காட்சிக்கு இன்னும் சில நாட்களே!
‘FACETS Sri Lanka 2026’ இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சிக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ளன. ஆசியாவின் முதன்மையான 33ஆவது இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கண்காட்சியான இது, இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் சங்கம் (SLJGA) மற்றும் தேசிய இரத்தினக்கல் அதிகாரசபையின் (National Jewellery Authority) ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2026ஆம் ஆண்டு ஜனவரி 03 முதல் 05 வரை கொழும்பில் அமைந்துள்ள Cinnamon Life – The City of Dreams இல் இந்தக் கண்காட்சி நடைபெறவுள்ளது. இந்தக் கண்காட்சியின் முக்கிய பதிப்பானது, நாட்டின் இணையற்ற இரத்தினக்கல் பாரம்பரியத்தையும் துடிப்பான ஆபரணத் துறையையும் கொண்டாடும் வகையில், ஒரு முன்னோக்குமிக்க இரு மாடிகளில் அமைந்த காட்சித் தொகுப்பு அறிமுகப்படுத்தப்படுவதோடு, இலங்கையின் ‘இரத்தின துவீபம்’ எனும் பெயரை மீளுறுதிப்படுத்துகிறது.
கண்காட்சிக்கு முன்னதாக ஒரு முக்கிய சிறப்பம்சமாக, ‘Sapphire Sponsorship Circle’ (நீலமாணிக்க அனுசரணை வட்டம்) எனும் முக்கியத்துவமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது இலங்கையின் முன்னணி இரத்தினக்கல் ஏற்றுமதியாளர்கள் மற்றும் ஆபரண வர்த்தகர்கள் பதினொரு பேரைக் கொண்ட ஒரு விசேட குழுவாகும். இந்த வட்டத்தில், Colombo Jewellery Stores, Domico Gems, Ellawala Exports (Pvt) Ltd, Gem Paradise, Mushan International, Regal Gems, RnR Fine Gems, Ruwanpura Gems (Pvt) Ltd, Subash Gems, Trust Gems, Zam Gems ஆகிய நிறுவனங்கள் உள்ளடங்கியுள்ளன. அவர்களின் இந்த கூட்டுச் செயற்பாடானது, தொழில்துறையினரின் ஒற்றுமையையும், நாட்டின் முன்னணி சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தளமாக FACETS காண்காட்சியை திகழச் செய்வதற்கான அவர்களின் உறுதிப்பாட்டையும் எடுத்துக் காட்டுகிறது.
இந்த மைல்கல் குறித்து கருத்து தெரிவித்த இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கத்தின் (SLGJA) தலைவர் அக்ரம் காசிம், “எமது தொழில்துறையின் ஒற்றுமையையும் பலத்தையும் ‘Sapphire Sponsorship Circle’ பிரதிபலிக்கிறது. இலங்கையின் முன்னணி இரத்தினக்கல் ஏற்றுமதியாளர்கள் மற்றும் ஆபரண வர்த்தகர்கள் FACETS 2026 கண்காட்சியை உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்வதற்காக ஒன்றிணைந்துள்ளனர். உலக அரங்கில் இலங்கை இரத்தினக் கற்கள் மற்றும் கைவினைத்திறனின் தாற்பரியத்தைக் காண்பிப்பதற்கான எமது பகிரப்பட்ட தூரநோக்கிற்கு இவர்களது ஆதரவு ஒரு சக்திவாய்ந்த அங்கீகாரமாக உள்ளது. FACETS எப்போதுமே ஒரு கண்காட்சி என்பதற்கும் அப்பாற்பட்டதாகும். அது எமது பாரம்பரியத்தின் கொண்டாட்டம், புத்தாக்கத்தின் உந்துசக்தி, அத்துடன் இலங்கையை உலகத்துடன் இணைக்கும் ஒரு தளம் ஆகும்.” என்றார்.
FACETS 2026 இன் தலைவர் ஆர்மில் சமூன் கருத்து வெளியிடுகையில், “மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையின் இரத்தினக்கற்களின் கதையை FACETS பெருமையுடன் உலகிற்கு எடுத்துக் கூறியுள்ளது. 1991 இல் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, இந்தக் கண்காட்சியானது, எமது நீல மாணிக்கத்தின் பாரம்பரியத்தின் செழுமையையும் எமது தீவில் காணப்படும் 50 இற்கும் மேற்பட்ட இரத்தினக் கற்களின் நம்பமுடியாத பன்முகத்தன்மையையும் எடுத்துக்காட்டுகின்ற, சர்வதேச அளவில் மதிக்கப்படும் ஒரு தளமாக வளர்ச்சியடைந்துள்ளது. கண்காட்சியின் ஒவ்வொரு பதிப்பும் எமது ஏற்றுமதியை மேம்படுத்தியுள்ளதுடன், இலங்கையின் ‘இரத்தின துவீபவம்’ எனும் நற்பெயரையும் பலப்படுத்தியுள்ளது. FACETS 2026 ஆனது, எமது கடந்த காலத்தை நாளைய வாய்ப்புகளுடன் இணைக்கும் துணிச்சலான, முன்னோக்குமிக்க தூரநோக்குடன் வரலாற்றில் இடம்பிடிக்கின்றது.” என்றார்.
‘FACETS 2026’ கண்காட்சியானது, Universal Travel Bureau (UTB) இனை அதன் உத்தியோகபூர்வ பயணப் பங்காளராக ஒப்பந்தம் செய்துள்ளதனை பெருமையுடன் அறிவித்துள்ளது. இதன் ஒரு அங்கமாக, UTB ஆனது பங்குபற்றுவோருக்கு நிகழ்வுக்கு முன்னரான மற்றும் பின்னரான பிரத்தியேகமான அனுபவங்களை வழங்கவுள்ளது. இது இலங்கையை ஆழமாக அனுபவிக்கவும், இணையவும் அவர்களுக்கு உதவும். இந்த அம்சங்களில் பல நூற்றாண்டுகளாக நீடித்த இரத்தினக்கல் சுரங்க பாரம்பரியங்கள் மற்றும் இரத்தினக்கல் தொழில்துறையைத் தொடர்ச்சியாக பேணுவதற்கான நிலைபேறான நடைமுறைகள் பற்றிய அரிய தகவல்களையும் அது பார்வையாளர்களுக்கு வழங்கும். குறிப்பாக பிரத்தியேகமான இரத்தினக்கல் சுரங்கச் சுற்றுப்பயணங்கள் (Exclusive Gem Mine Tours) அம்சமும் உள்ளடங்குகின்றது. UTB உடனான இந்த ஒத்துழைப்பின் மூலம், FACETS 2026 கண்காட்சி ஒரு வர்த்தகக் காட்சியையும் தாண்டி, பாரம்பரியம், விருந்தோம்பல், கண்டறிதல்களை இணைக்கும் ஒரு கலாசார வாயிலாக மாற்றம் பெறுகிறது.
FACETS கண்காட்சியானது Cinnamon Life – The City of Dreams ஹோட்டலிற்கு மாற்றம் பெற்றிருப்பது, இந்தக் கண்காட்சிக்கு ஒரு துணிச்சலான புதிய அத்தியாயத்தை குறிக்கிறது. அதன் வரலாற்றில் முதன் முறையாக, இந்தக் கண்காட்சி இரண்டு அர்ப்பணிக்கப்பட்ட மாடிகளில் நடைபெறும் சந்தர்ப்பம் இதுவாகும். இது பாரம்பரியத்தையும் புத்தாக்கத்தையும் இணைக்கும் ஒரு ஆழமான தளவமைப்பைக் கொண்டிருக்கும். இரத்தினக்கல்லானது சுரங்கத்தில் இருந்து சந்தை வரை மேற்கொள்ளும் பயணத்தை விபரிக்கும் பங்குபற்றுதலுடன் கூடிய ஏராளமான காட்சி வெளிப்பாடுகளை பார்வையாளர்கள் பார்வையிட வாய்ப்பு பெறுவார்கள். அத்துடன், கண்காட்சியாளர்கள் தமது வர்த்தகநாமத்தின் கதைகளைப் பகிர்ந்துகொள்வதற்கான இடங்கள், இலங்கை இரத்தினக் கற்களின் தோற்றம் குறித்த நுண்ணறிவு மிக்க தகவல்களை வழங்கும் மெய்நிகர் காட்சித் தொகுப்புகள் (VR showcases) ஆகியனவும் இங்கு இடம்பெறவுள்ளன.

FACETS Sri Lanka 2026 கண்காட்சியானது, நிலைபேறான தன்மை, நெறிமுறைசார்ந்த மூலவளங்கள் மற்றும் அதிநவீன வடிவமைப்பு ஆகியவற்றையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வரவுள்ளது. இதன்மூலம், இந்தக் கண்காட்சி இலங்கையின் 2,500 ஆண்டுகால இரத்தினக்கல் பாரம்பரியத்தைக் கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல், எதிர்கால உலகமானது வணிகம் மற்றும் நுகர்வோர் எதிர்பார்ப்புகளுடன் சீரமைக்கப்படுவதையும் உறுதி செய்யும். FACETS அதன் 30 ஆண்டுகால வரலாற்றில், சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரண நாட்காட்டியில் அதிகம் எதிர்பார்க்கப்படுகின்றதும், மதிக்கப்படுகின்றதுமான கண்காட்சிகளில் ஒன்றாக வளர்ச்சியடைந்துள்ளது. பிரபலமான ‘Cornflower Blue’ (கோர்ன்ஃப்ளவர் ப்ளூ) முதல் அரிய ‘Padparadscha’ பத்மராகம், நவீன ‘Teal’ (ரீல்) வரை பல்வேறு வகையான நீல மாணிக்கங்களுக்கு (Sapphires) இலங்கை பெயர்பெற்று விளங்குகின்றது. இலங்கை இரத்தினக் கற்கள் நீண்ட காலமாக உலகின் மிகவும் மதிப்புமிக்க சேகரிப்புகளை அலங்கரித்து வருகின்றன.
இவ்வருட FACETS கண்காட்சியானது, இத்தனை வருட கால பாரம்பரியத்தை கௌரவிப்பதற்கும் கொண்டாடுவதற்கும் முயல்வதுடன், எதிர்காலத்தையும் மீளமைத்து, உலகளாவிய கொள்வனவாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் ஆர்வலர்களை ஒரு மறக்க முடியாத கண்காட்சியைப் பார்வையிட கொழும்பை நோக்கி ஈர்க்கிறது. Sapphire Sponsorship Circle இன் ஆதரவுடனும், UTB உடனான தமது கூட்டணியின் மூலமும் மேலும் பலப்படுத்தப்படும் FACETS Sri Lanka 2026 ஆனது அதன் மிகச் சுறுசுறுப்பான கண்காட்சியாக அமையவுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு: http://www.facetssrilanka.com/
END
Image Caption:
SLGJA தலைவர் அக்ரம் காசிம்