2022 ACCA நிலைபேறானதன்மை அறிக்கையிடல் விருது விழாவில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட DIMO

2022 ACCA நிலைபேறானதன்மை அறிக்கையிடல் விருது விழாவில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட DIMO

இலங்கையில் முன்னணியிலுள்ள பல்வகைத் துறை குழுமமான DIMO, பெருமைக்குரிய ACCA Sri Lanka Sustainability Reporting Awards 2022 விருது விழாவில் ஒட்டுமொத்த பிரிவில் இரண்டாமிடத்தை பெற்றதோடு, குழும மற்றும் பன்முகப்படுத்தல் பிரிவில் வெற்றியாளராக அங்கீகரிக்கப்பட்டது.

DIMO குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கஹநாத் பண்டிதகே இவ்வெற்றி குறித்த தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்ட போது, “இது நிறுவனம் பெற்றுள்ள ஒரு அற்புதமான சாதனையாகும். அத்துடன் ஒரு சரியான நிலைபேறான தன்மை பங்காளி எனும் வகையில், சமூகங்கள், சூழல், பொருளாதாரம் ஆகியவற்றில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் நிலைபேறான தீர்வுகளை தொடர்ச்சியாக உருவாக்குவதன் மூலம், நாம் சேவை வழங்கும் அனைத்து சமூகங்களின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளை ஊக்குவிப்பதில் நாம் எப்போதும் உறுதியுடன் இருப்போம்..” என்றார்.

DIMO நிறுனத்தின் 2021/2022 வருடாந்த அறிக்கையானது, நிலைபேறான தன்மையின் அவசியத்திற்கு இணங்க, கம்பனியின் வளர்ச்சியடைதல் தொடர்பான அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாக உள்ளதை, ACCA Sri Lanka Sustainability Reporting Awards 2022 விருது விழாவின் நடுவர்களால் அவதானிக்கப்பட்டது. நிலைபேறான அபிவிருத்தி தொடர்பில் நிறுவனத்தின் செயற்றிறனை மேம்படுத்தவும், அதன் அறிக்கையிடல் புத்தாக்கமானதாக இருக்க வேண்டும் எனும் நிறுவனத்தின் விருப்பம், இச்சமீபத்திய சிறந்த ஆண்டறிக்கையில் தெளிவாகத் தெரிகிறது என்றும் அவர்கள் கூறினர்.

குழும மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட பிரிவில் DIMO நிறுவனம் வெற்றியாளராக அங்கீகாரம் அளிக்கப்பட்டதற்கான காரணங்களை குறிப்பிட்டுக் கூறிய நடுவர்கள், பொருளாதார நிலைபேறான தன்மையை மேம்படுத்தும் பொருட்டு விவசாய பிரிவை மேம்படுத்தி, உணவுப் பாதுகாப்பின் தேசிய முன்னுரிமையை நிவர்த்தி செய்வதற்காக DIMO நிறுவனம் தனது வணிகத் திசையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை மேற்கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டனர். ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்காக அர்ப்பணிக்கப்பட்ட மூன்று விவசாய தொழில்நுட்ப பூங்காக்கள், தொடர்ச்சியான விவசாய தெளிவூட்டல் கல்வியை அவர்களுக்கு வழங்குதல், சேதன உரங்களை உற்பத்தி செய்தல் உள்ளிட்ட விவசாய பெறுமதிச் சங்கிலியின் ஒவ்வொரு அம்சத்தையும் பூர்த்தி செய்யும் அதே வேளையில் நிறுவனத்தின் வளர்ச்சியடைந்த செயற்பாடுகளில் இந்த மாற்றம் தெளிவாகத் தெரிகிறது. DIMO தனது விவசாயத் தீர்வுகளைத் தவிர, அரசாங்கத்தின் கிராமப்புற நீர் வழங்கல் திட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலம் பெருமளவான வீடுகளுக்கு பாதுகாப்பான குடிநீரை வழங்குவதற்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. அம்பத்தல நீர் சுத்திகரிப்பு தொகுதியின் மேம்படுத்தல் மற்றும் வலு சக்திக்கான செலவில் 16% குறைப்பை கொண்ட வலுசக்தி சேமிப்புத் திட்டம் ஆகியன DIMO நிறுவனத்தின் மற்றுமொரு குறிப்பிடும்படியான திட்டங்களாகும். இது நிலைபேறானதன்மையை நோக்கிய அதன் முயற்சிகளை மேலும் எடுத்துக் காட்டுகிறது.

மோட்டார் பொறியியலுக்கு அப்பாற்பட்ட வகையில் கல்வி, சுகாதாரம், நீர், மின்சக்தி மற்றும் வலுசக்தி போன்ற துறையிலும் DIMO நிறுவனம் பங்களிப்பு செலுத்துவதானது, நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளுடன் (SDGs) நேரடியாக தொடர்புடைய நிலைபேறான தீர்வுகளில் அது கவனம் செலுத்துவதற்கான மற்றொரு எடுத்துக்காட்டாகும். 2021/2022 ஆண்டு அறிக்கையில் சிறப்பாக வரையறுத்துக் காண்பிக்கப்பட்ட, நிறுவனத்தின் பெறுமதி உருவாக்கும் மாதிரியிலும் இந்த பல்வகைப்படுத்தல் அம்சம் பிரதிபலிக்கிறது.

பயிற்சி மற்றும் அபிவிருத்திக்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பை நடுவர்களின் அறிக்கை மேலும் வலியுறுத்தியது. உள்ளக பயிற்சியை வழங்குவதற்காக சொந்தமான பயிற்சி மையத்தை நிறுவனம் நிறுவியுள்ளதன் மூலம் இது தெளிவாகத் தெரிகிறது. இந்த நடவடிக்கையானது, நிறுவனம் தனது ஊழியர்களில் முதலீடு செய்வதிலான அதன் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதோடு, இது வணிக நிலைபேறானதன்மையை உறுதி செய்வதற்கான முக்கியமான அம்சமாகும்.

2030 வரை அதன் நிலைபேறானதன்மை நிகழ்ச்சி நிரலை நிறுவனம் கோடிட்டுக் காட்டியுள்ளதோடு, சூழல், சமூகம், ஆளுகை (ESG) ஆகியவற்றிற்கான உத்தரவாதத்தையும் வழங்கியுள்ளது. விருது பெற்ற அதன் 2021/2022 ஆண்டு அறிக்கையில் அதன் பொறுப்பான வணிக நடைமுறைகளுக்கான அர்ப்பணிப்பை இது சித்தரிக்கிறது.

DIMO நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒட்டுமொத்த இரண்டாமிடம் மற்றும் குழும மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட பிரிவில் வெற்றியாளர் ஆகிய விருதுகள், நிலைபேறான நடைமுறைகள் மற்றும் அபிவிருத்திக்கான அதன் அர்ப்பணிப்புக்கான சான்றுகளாகும். அத்துடன் SDG களை அடைவதற்கும் அனைவருக்கும் நிலைபேறான எதிர்காலத்தை உறுதி செய்வதற்கும் இது ஒரு சாதகமான படியாகும்.

END

Photo captions

DIMO குழுமத்தின் CEO கஹநாத் பண்டிதகே, DIMO நிறுவன பணிப்பாளர்/பிரதம நிதி அதிகாரி சுரேஷ் குணரத்ன, DIMO நிறுவன நிதி பொது முகாமையாளர் சுதத் மஹகெதர, DIMO நிறுவன கணக்குப் பிரிவு முகாமையாளர் திலிணி பெனாண்டோ ஆகியோர் இரண்டாம் இடத்திற்கான விருதை பெற்ற போது…
DIMO நிறுவனத்தின் நிதி பொது முகாமையாளர் சுதத் மஹகெதர, DIMO நிறுவன கணக்கியல் முகாமையாளர் திருமதி அமாலி டி சொய்சா, DIMO நிறுவன கணக்கியல் செயற்பாடுகளின் சிரேஷ்ட முகாமையாளர் சம்பத் மதுருசிங்க, DIMO நிறுவன நிலைபேறானதன்மை முகாமையாளர் மேகா கணேசன் ஆகியோர், குழும மற்றும் பன்முகப்படுத்தல் பிரிவில் வெற்றியாளருக்கான விருதை பெற்றுக் கொண்ட போது…