முன்னணி  உள்ளூர்  பால்  வர்த்தக  நாமம்  Pelwatte  Dairy நுகர்வோருக்கு  புதிய  தயாரிப்புகளை  அறிமுகப்படுத்துகிறது  

முன்னணி  உள்ளூர்  பால்  வர்த்தக  நாமம்  Pelwatte  Dairy நுகர்வோருக்கு  புதிய  தயாரிப்புகளை  அறிமுகப்படுத்துகிறது  

பல்வேறு வகையான பால் உற்பத்திகளை உற்பத்தி செய்யும் இலங்கையின் முன்னணி உள்ளூர் வர்த்தக நாமங்களில் ஒன்றான Pelwatte Dairy ஆனது, 200 கிராம் Pelwatte Chilli Butter, 8 மற்றும் 30 துண்டுகள் கொண்ட Pelwatte Ceylon Butter, 500 கிராம் தரகத்திலடைத்த பெல்வத்தை நெய் போன்ற புதிய தயாரிப்புகளை பரீட்சார்த்தமாக நுகர்வோருக்கு அண்மையில் அறிமுகம் செய்துள்ளது. Pelwatte Dairy Industries Limited நிறுவனம், Modern Trade (சுப்பர் மார்க்கெட்), General Trade (விநியோகஸ்தர்கள், முகவர்கள்) மற்றும் HORECA (சமையல்கலை நிபுணர்கள்) ஆகியவற்றின் பணியாளர்களின் பங்குபற்றுதலுடன், பெல்வத்தை நிறுவனத் தலைவர் ஆரியசீல விக்ரமநாயக்க முன்னிலையில் இந்த பரீட்சார்த்த சோதனை நிகழ்வு BMICH இல் நடைபெற்றது.

இந்நிகழ்வு குறித்து கருத்து தெரிவித்த Pelwatte Dairy தலைவர் ஆரியசீல விக்ரமநாயக்க, “இந்த புதிய பால் பொருட்களை சந்தைக்கு அறிமுகப்படுத்துவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். நமது நாட்டின் தற்போதைய பொருளாதார சூழ்நிலையில், 8 மற்றும் 30 துண்டுகள் கொண்ட ஸ்மார்ட் வெண்ணெய் பொதிகளை கட்டுப்படியான விலையில் கொள்வனவு செய்ய முடியும் என்பதுடன், இவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்ட தயாரிப்புகள், மிக விரைவில் ஒப்பிடும்படியிலான விலையில் சந்தையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இத்தயாரிப்புகள் ஒவ்வொன்றும் போசணைகளைப் பாதுகாக்கும் வகையில் தயாரிக்கப்படுவதோடு, எமது புதிய தலைமுறையினருக்கு முன்னுரிமை அளித்து, எமது நுகர்வோரின் அனைத்து தேவைகளுக்கும் பொருத்தமான பால் உற்பத்திகளை வழங்கும் வகையில் தயாராக உள்ளன. ஒரு சில தயாரிப்புகளை சலுகைத் விலைக்கு ஏற்ற வகையில் பொதி செய்து வழங்குவதையும் நாம் உறுதி செய்கிறோம்.” என்றார்.

தனது நுகர்வோருக்கு அற்புதமான சுவையையும், தயாரித்துக் கொள்ள இலகுவான வகையிலும், உணவுடன் ருசியாக இருக்கவும், கட்டுப்படியான விலையில் உயர்தர தயாரிப்புகளை அணுகுவதற்கான வாய்ப்பை வழங்குவதையும், இத்தயாரிப்புகளை அறிமுகம் செய்வதற்கான Pelwatte Dairy நிறுவனத்தின் முக்கிய குறிக்கோள்களாகும். Pelwatte Chilli Butter ஆனது, அதிக கொழுப்புள்ள பால் பொருளாகும். இது உணவை உட்கொள்ளச் செய்வதற்கான பசியை அதிகரிப்பதோடு ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது. பால் கொழுப்பு, சமையல் உப்பு, வறுத்த இயற்கையான மிளகாய்த் தூள், வறுத்த இயற்கையான மிளகாய் செதில்களுடன், பண்ணையில் பெறப்பட்ட புதிய பசும்பாலைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. அத்துடன் இது 200 கிராம் பாத்திரத்தில் நுகர்வோருக்காக அறிமுகமாகிறது. குறித்த நிகழ்வின் போது, குறிப்பாக வெண்ணெய் மசாலா மற்றும் காரம் ஆகியவற்றின் சிறந்த கலவையை அனுபவிக்க விரும்புபவர்களுக்காக, இந்த புதிய வெண்ணெய் வகைகளை அறிமுகப்படுத்த Pelwatte Dairy தீர்மானித்திருந்தது. Pelwatte Chilli Butter ஆனது, Pelwatte யில் ஏற்கனவே காணப்படும் கிறீமியான மற்றும் சுவையான வெண்ணெய்க்கு மேலும் சுவையான மிளகாய் சுவையை சேர்க்கிறது. அத்துடன் தங்களது உணவில் ஒரு மாற்றத்தை விரும்பும் நுகர்வோருக்கு ஒரு முழுமையான மகிழ்ச்சியை இது வழங்குகிறது.

Pelwatte Dairy ஆனது, Pelwatte Chilli Butter இற்கு மேலதிகமாக, தற்போதுள்ள Pelwatte Ceylon Butter இற்கு 2 வகையான அளவுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மூன்று அளவு பொதிகளில், 30 துண்டுகள் மற்றும் 8 துண்டுகள் கொண்ட ஸ்மார்ட் பொதிகள் ஆகிய இரண்டை சோதனைக்காக நுகர்வோருக்கு வெளியிட்டிருந்தது. Pelwatte Ceylon Butter ஆனது 10g பகுதிகளாக பொதி செய்யப்பட்டு, உயர் சுகாதாரம் மற்றும் புதிய உள்ளூர் பால் கிறீம்களைப் பயன்படுத்தி சிறிய தொகுதிகளில் பொதியிடப்பட்டு தயாரிக்கப்படுகின்றன. 82% ஆன தூய இலங்கை பால் கொழுப்பு, 16% இற்கும் குறைவான ஈரப்பதன், 16% இற்கும் குறைவான திண்ம பால் கொழுப்பு, 1.35% இற்கும் குறைவான உப்பு ஆகியன, Ceylon Butter இன் முதன்மையான மூலப்பொருட்களாக விளங்குகின்றன.

இந்த பரீட்சார்த்த சோதனை நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்ட 500 கிராம் பெல்வத்தை நெய்யானது, பிரத்தியேகமான தரத்தையும் பண்ணையிலிருந்தான புதிய விளைபொருட்கள் கொண்ட சுவையை கொண்டதாக, தூய பால் கொழுப்பு மற்றும் புத்தம் புதிய கிறீமில் இருந்து தயாரிக்கப்படுவதோடு, இது சிறு சிறு மணியான அமைப்புடன் ஒரு பொதுவான உயர் வகை நறுமணத்தைக் கொண்டுள்ளது. Pelwatte Dairy யின் புதிதாக பெறப்படும் தங்க நிறத்திலான நெய்யானது, பட்டுத்தன்மை, புத்துணர்ச்சியை கொண்டுள்ளதோடு எவ்வித பாதுகாப்பு பதப்படுத்திகளையும் கொண்டிராததாகும். அத்துடன் இது 99.5g கொழுப்பு, 0.5g ஈரப்பதனை கொண்டுள்ளது.

இனிப்பாக இருந்தாலும் சரி, உறைப்பாக இருந்தாலும் சரி, பெல்வத்தை அனைவருக்கும் ஏதோ ஒரு வகை சுவையை வழங்குகிறது. அதனால்தான் இந்த வர்த்தகநாமத்திற்கு அதிகளவான அபிமானிகள் மற்றும் ஆதரவாளர்கள் உள்ளனர். பெல்வத்தையின் தன்னிறைவுக்கான நோக்கத்தின் பின்னணியில் உள்ள உந்துசக்தியும் இதுவேதான். பெல்வத்தை என்பது தனியே பால் பொருட்களை பற்றியது அல்ல என்பதோடு, அனைவரின் ருசிகளையும் விருப்பங்களையும் பூர்த்தி செய்வதன் மூலம், ஒரு தொழில்துறை முன்னோடியாகவும், ஏனைய வர்த்தகநாமங்கள் பின்பற்ற வேண்டிய முன்மாதிரியாகவும் திகழ்கிறது.

END