சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனம் புத்தம் புதிய SINGER RED நம்பிக்கை அங்கத்துவத் திட்டத்தை ஆரம்பித்துள்ளது

சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனம் புத்தம் புதிய SINGER RED நம்பிக்கை அங்கத்துவத் திட்டத்தை ஆரம்பித்துள்ளது

சிங்கர் ஸ்ரீலங்கா பிஎல்சி நிறுவனம், சமீபத்தில் தனது புதிய Singer RED நம்பிக்கை அங்கத்துவத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதுடன், சிங்கரில் கொள்முதல் செய்யும் அனைவருக்கும் இத்திட்டம் கிடைக்கப்பெறும். சிங்கர் தற்போது 2 மில்லியனுக்கும் அதிகமான விசுவாசமான வாடிக்கையாளர் தளத்தைக் கொண்டுள்ளது.

Singer RED நம்பிக்கை அங்கத்துவ திட்டத்தின் மூலமாக, வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு கொள்முதலின் போதும் சுநுனு புள்ளிகளை ஈட்டுவதுடன், அவர்கள் இத்திட்டத்தின் அங்கத்தவராக மாறுவதற்கும் வழிவகுக்கிறது. வாடிக்கையாளர் ஒருவர் 1,000 புள்ளிகளை ஈட்டிக் கொள்ளும் பட்சத்தில் அவர் பிரத்தியேக சலுகைகள் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட வழங்கல்களை அனுபவிக்க முடியும்.

சிங்கர் மெகா காட்சியறையில் அல்லது www.singer.lk இணையத்தளத்தின் மூலமான கொள்வனவுகளின் போது ஒவ்வொரு ரூபா. 200 தொகைக்கும் ஒரு RED புள்ளியை ஈட்டிக்கொள்ள முடியும். மேலும், வாடிக்கையாளர்கள் Singer Express Pay Counter மையங்கள் வழியாக பயன்பாட்டு கட்டணப் பட்டியல் மற்றும் கடனட்டை கட்டணப் பட்டியல் கொடுப்பனவுகளை செலுத்தும் போது RED புள்ளிகளை ஈட்ட முடியும். வாடிக்கையாளர்கள் இத்திட்டங்களின் ஒவ்வொரு அடுக்குகளையும் தாண்டி அடுத்த கட்டத்திற்கு மேலே செல்லும்போது இன்னும் கூடுதலான RED புள்ளிகளைப் பெறலாம். அவர்கள் செலவழிக்கும் ஒவ்வொரு ரூபா.100 தொகைக்கும் அவர்கள் ஒரு RED புள்ளியைப் பெறலாம்.

ஈட்டியுள்ள RED புள்ளிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் மூன்று பிரிவுகளாக வாடிக்கையாளர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். னுநடரஒந பிரிவுக்கு 1000 முதல் 2999 RED புள்ளிகளும், Premier பிரிவுக்கு 3000 முதல் 5999 வரையான RED புள்ளிகளும் மற்றும் VIP பிரிவுக்கு 6000 RED புள்ளிகளுக்கு மேலும் ஈட்ட வேண்டும்.

ஒவ்வொரு பிரிவுக்கும் பல்வேறு சலுகைகள் கிடைக்கின்றன. இதில் சிங்கர் தயாரிப்புகளுக்கான வருடாந்த தள்ளுபடிகள், பிறந்தநாள் வருகின்ற மாதங்களில் விசேட தள்ளுபடிகள், பருவகால குலுக்கல் சீட்டிழுப்புக்களுக்கான வெற்றி வாய்ப்புக்களுக்கு இத்திட்டத்தின் அங்கத்தவர்கள் நாடு முழுவதும் உள்ள எந்தவொரு சிங்கர் காட்சியறைகளிலும் கொள்வனவுகளுக்கான புள்ளிகளைப் பெறலாம். வாடிக்கையாளர்கள் தாங்கள் ஈட்டியுள்ள புள்ளிகளையும், பிரிவையும் அவர்களின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை http://singersl.com/loyalty என்ற இணையத்தளத்தில் இடுவதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

எமது Singer RED நம்பிக்கை அங்கத்துவத்திட்டம் தொடர்பான மேலதிக விபரங்களை அறிய பின்வரும் இணைப்பைப் பார்வையிடவும்: http://singersl.com/loyalty.