காலி மாவட்டம் முழுவதும் பேபி செரமி பெற்றோர் கிளினிக்

காலி மாவட்டம் முழுவதும் பேபி செரமி பெற்றோர் கிளினிக்

– குழந்தைப் பாதுகாப்பு மற்றும் ஆரம்ப குழந்தைப் பருவப் பராமரிப்பில் உள்ள சவால்களை வெற்றிகொள்ள பெற்றோருக்கு விழிப்புணர்வு

இலங்கையில் முன்னணியிலுள்ள, மிகவும் விரும்பப்படுகின்ற, பாதுகாப்பான குழந்தை பராமரிப்பு வர்த்தக நாமமான பேபி செரமி (Baby Cheramy), குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் ஆரம்ப குழந்தைப் பருவப் பராமரிப்பின் போது ஏற்படும் சவால்களை சமாளிப்பது குறித்து பெற்றோருக்குக் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, பெற்றோர்களுக்கான கிளினிக் நிகழ்ச்சித் தொடர்களை காலி மாவட்டத்தில் அண்மையில் வெற்றிகரமாக நிறைவு செய்தது. குறித்த காலகட்டமானது பொதுவாக புதிய பெற்றோருக்கு அவர்கள் முன்பு அறியாத ஒரு விடயமாகும். பேபி செரமி போன்ற பாதுகாப்பான, மதிப்பிற்குரிய தகவல் மூலத்திலிருந்து சரிபார்க்கப்பட்ட மற்றும் நம்பகமான தகவல் மூலம், மருத்துவ மற்றும் மகப்பேறு நிபுணர்களுடன் இணைந்து, பெற்றோர்களாகிய இருவருக்கும் வெற்றிகரமான பெற்றோருக்குரிய அனுபவத்திற்கு சிறந்த தொடக்கத்தை பேபி செரமி வழங்குகிறது.

ஆரம்ப குழந்தை பருவ பராமரிப்பு உள்ளிட்ட கர்ப்ப காலத்தின் ஒவ்வொரு 

கட்டத்திலும் பங்களிக்க தந்தைகளை ஊக்குவிப்பதானது குழந்தைக்கான 

சிறந்த பெறுபேறுகளை அடைவதற்கும் பெற்றோர் ஆகிய இருவருக்கும் 

இடையிலான பிணைப்பை வலுப்படுத்துவதற்கும் பெற்றோர்களுக்கு 

நிறைவான மற்றும் உள்ளார்ந்த அனுபவத்தை உருவாக்குவதற்கும் 

உதவுகின்றது. குழந்தை வளர்ப்பு தொடர்பான உள்ளடக்கிய பெற்றோராக மாறுவதை ஊக்குவிப்பதோடு, குழந்தை பிறக்கும் போது அவர்கள் எவ்வாறு பங்களிக்க வேண்டும், எவ்வாறு ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்க வேண்டும் என்பது, குழந்தையின் உடல், உள நலனை மேம்படுத்துவதற்காக குழந்தைப் பருவ வளர்ச்சியில் அவர்கள் எவ்வாறு பங்களிப்பது என்பதையும் இந்த பெற்றோர் கிளினிக்குகள் அறிவுறுத்துகின்றன.

மேலும், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, சுகாதார அமைச்சு (MoH), மற்றும் ஆரம்ப குழந்தைப் பருவ பராமரிப்பு அபிவிருத்தி அதிகாரசபை ஆகியவற்றுடன் இணைந்து இந்நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. இந்த பெற்றோர்களுக்கான கிளினிக்குகள் 2022 நவம்பர் 24 முதல் டிசம்பர் 03 வரை காலி மாவட்டத்தின் பத்தேகம, ஹபராதுவ, இமதூவ, யக்கலமுல்ல, ஹிக்கடுவை, கோணபினுவல, அம்பலாங்கொடை, எல்பிட்டிய, அக்மீமண ஆகிய இடங்களில் இடம்பெற்றது. இது பேபி செரமியின் பெற்றோர் கிளினிக் தொடரின் மூன்றாவது பதிப்பாகும்.

தாய் – சேய் பராமரிப்பில் அனுபவம் வாய்ந்த நிபுணர்களைக் கொண்ட நிபுணர் வளக் குழுவினால், காலி பெற்றோர் கிளினிக்கில் தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டன. தாய் சேய் நல நிபுணர் ஷியாமளி பத்திரகே, குழந்தையின் பாதுகாப்பு, போசாக்கு, கர்ப்பிணித் தாய்மார்கள் எதிர்கொள்ளும் பொதுவான சவால்கள் மற்றும் அவற்றை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து தெளிவுபடுத்தினார். அத்துடன் பண்டாரகம பிரதேச செயலகத்தின் ஆரம்பக் குழந்தைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் மதுஷானி அமரசூரியவும் இங்கு விளக்கமளித்தார். ஹிக்கடுவை பிரதேச செயலகத்தின் ஆரம்ப குழந்தைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் சி.எம். வளவகே, ஆரம்ப குழந்தைப் பருவ வளர்ச்சியில் ஒவ்வொரு கட்டத்திலுமான மேம்பாடுகளை தெளிவுபடுத்தினார். சுகாதார அமைச்சின் மருத்துவர்களும் இவ்வமர்வில் பங்கேற்று பெற்றோர் முன்னிலையில் உரையாற்றியிருந்தனர்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் இசைப் பணிப்பாளர் ஜகத் வட்டவல மற்றும் எல்பிட்டிய வலயக் கல்வி அலுவலக அழகியல் கற்பித்தல் பயிற்றுவிப்பாளர் ஸ்வர்ணா வட்டவல ஆகியோரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இசை தெரபி அமர்வுடன் இந்த கிளினிக் நிறைவு பெற்றன. பெறுமதியான பேபி செரமி பரிசுப் பொதி, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட, ஆரம்ப குழந்தைப் பருவ மேம்பாடு மற்றும் உள்ளடக்கிய பெற்றோருக்கான வழிகாட்டல் கையேடு ஆகியன இதன்போது தாய்மார்களுக்கு பரிசாக வழங்கப்பட்டன.

இலங்கை முழுவதிலும் உள்ள பெற்றோரால், பாதுகாப்பை கொண்டது என நம்பப்படும் வர்த்தக நாமமான பேபி செரமி, தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரையும் உள்ளடக்கிய பெற்றோருக்கான விழிப்புணர்வை ஏற்படுத்த, மேல், தென், கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட நாடு முழுவதும் ‘தருபெட்டியாட்ட சுரக்ஷித லொவெக்’ (குழந்தை செல்வத்திற்கு பாதுகாப்பான உலகம்) எனும் பெற்றோர் கிளினிக்குகளை நடத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இலங்கையின் நம்பர் 1 குழந்தை பராமரிப்பு வர்த்தக நாமமான பேபி செரமி, இலங்கை தாய்மார்களின் நம்பிக்கையை வென்றதன் 60ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்ற இவ்வேளையில், தந்தையர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் உள்ளடக்கிய பெற்றோருக்கான அம்சத்தை ஊக்குவித்து, இலங்கையில் மிகவும் விரும்பப்படுகின்ற மற்றும் பாதுகாப்பான குழந்தை பராமரிப்பு வர்த்தகநாமமாக மாறியுள்ளது.

பேபி செரமியின் தயாரிப்புகள் மற்றும் குழந்தை வளர்ப்பு பற்றிய மேலதிக விபரங்களுக்கு, www.babycheramy.lk எனும் இணையதளத்தைப் பார்வையிடவும் அல்லது https://www.facebook.com/BabyCheramy/ எனும் பேபி செரமியின் Facebook பக்கத்தைப் பார்வையிடவும்.

END